Published : 03 Feb 2023 04:05 AM
Last Updated : 03 Feb 2023 04:05 AM

புலி நடமாட்டத்தை கண்காணிக்க தெப்பக்காடு முகாமை சுற்றி 26 கேமராக்கள்

முதுமலை: புலி தாக்கி பழங்குடியின பெண் கொல்லப்பட்டதையடுத்து, அதன் நடமாட்டத்தை கண்காணிக்க தெப்பக்காடு முகாமை சுற்றி 26 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, தெப்பக்காடு வனச்சரகர் பாலாஜி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம்‌ முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்‌டில்‌ யானைகள் முகாம்‌ உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை, பழங்குடியின பாகன்‌கள்‌ பராமரிக்கின்றனர்‌. முகாமை சுற்றி பல ஆண்டுகளாக பழங்குடியினர் வசிக்கின்றனர்‌. இந்நிலையில்‌, மாரி (63) என்ற பழங்குடியின பெண்‌ விறகு சேகரிக்க காட்டுக்குசென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும்‌ வீது திரும்பாத நிலையில்‌, அவரதுகுடும்பத்தினர் வனத்துறையினருக்குத்‌ தகவல்‌ அளித்துள்ளனர். இதையடுத்து, வேட்டைத்‌ தடுப்பு காவலர்கள்‌ மாரியை தேடி காட்டுக்குள்‌ சென்றனர்‌. அப்போது, யானை முகாமில்‌ இருந்து 200 அடி துரத்தில்‌மாரியின் சடலம் மீட்கப்பட்டது. புலி தாக்கி இறந்ததற்கான அடையாளங்கள்‌, அவர்‌ கழுத்தில்‌ இருந்‌தன.

இது தொடர்பாக தகவலறிந்த 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள்‌, புலியை பிடிக்க கோரி தமிழ்நாடு - கர்நாடகா சாலையில் மறியலில்‌ ஈடுபட்டனர்‌. இந்நிலையில், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க யானைகள் முகாமை சுற்றி 26 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தெப்பக்காடு வனச்சரகர் பாலாஜி கூறும்போது, "புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதுடன், முகாமை சுற்றி 26 கேமராக்கள்‌பொருத்‌தப்பட்டுள்ளன. கேமராவில்‌ புலி பதிவான பின்புதான்‌, அது வயதானதா? அல்லது ஊனம்‌ ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.‌

அதன்பின்‌ புலியை பிடிப்போம்‌. கடந்த நவம்பரில்‌ பொம்மன்‌ என்ற வேட்டைத்தடுப்பு காவலரை, லைட்பாடி என்ற இடத்தில்‌ புலி தாக்கியது. அதன்‌பின்னர்‌, புலி அங்கு வரவே இல்லை. இது அந்த புலிதானா? என்பது விரைவில்‌ தெரியவரும்" என்றார்‌.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x