Last Updated : 31 Jan, 2023 12:11 AM

 

Published : 31 Jan 2023 12:11 AM
Last Updated : 31 Jan 2023 12:11 AM

சேலம் மாவட்டத்தில் ஒன்பது ஈர நிலப்பரப்புகளில் 142 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டை ஏரியில் மாவட்ட வன அலுவலர்  சசாங் காஷ்யப் ரவி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக விலங்கியல் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் உள்ள ஈர நிலப்பரப்புகளில் வனத்துறை அதிகாரிகளுடன் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய பறவை இனங்கள் கணக்கெடுப்பில், 142 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஈர நில பறவைகளின் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் நடந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் வனக்கோட்டத்தை சேர்ந்த ஒன்பது ஈர நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. டேனிஸ்பேட்டை ஏரியில் மாவட்ட வன அலுவலர் சசாங் காஷ்யப் ரவி தலைமையிலும், ஆனைமடுவு நீர்த்தேக்க பகுதியில் உதவி வனப் பாதுகாவலர் கண்ணன் தலைமையிலும், மேட்டூர் செம்மலை ஏரி பகுதியில் உதவி வனப் பாதுகாவலர் செல்வகுமார் தலைமையிலும் இக்கணக்கெடுப்பு பணி நடந்தது. அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுப்பை மேற்பார்வை செய்தனர்.

இக்கணக்கெடுப்பில் சேலம் இயற்கை குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்களும், சேலம் பெரியார் பல்கலைக்கழக விலங்கியல் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். அதன்படி, கணக்கெடுப்பில் மொத்தமாக சேலம் வனக்கோட்டத்தில் உள்ள ஒன்பது ஈர நிலப்பகுதிகளில் 142 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்ட 142 வகையான பறவை இனங்கள் பட்டியலிட்டு, அப்பறவைகளின் வகைகள் குறித்தும், வாழ்வதற்கு ஏற்ற சூழலில் உள்ள ஈர நிலப்பரப்புகளின் தன்மைகள், சுற்றுசூழல் மாறுபாடு, வருகை தந்துள்ள பறவைகளின் பாதுகாப்பு தன்மைகள் குறித்து குறிப்பெடுக்கப்பட்டது.

இக்குறிப்புகளை கொண்டு வனத்துறை அதிகாரிகள் , கூடுதலாக பறவையினங்கள் வருவதற்கான சூழல் மேம்பாடு, ஈர நிலப்பரப்பை அதிகரிப்பது, நீர் நிலைகளில் இயற்கையை பாதுகாப்பது, வனப்பரப்பை அதிகரிப்பது உள்ளிட்ட எதிர்கால திட்டத்துக்கான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், சேலம் மாவட்டத்தில் வரும் காலத்தில் புதிய புதிய பறவை இனங்களின் வருகையை அதிகரிக்க ஏற்ற சூழல் உருவாக்குவது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x