Published : 30 Jan 2023 04:33 AM
Last Updated : 30 Jan 2023 04:33 AM

திருப்பத்தூர் | பறவைகள் கணக்கெடுப்பின்போது சிவப்பு தலை வாத்துகள், முக்குளிப்பான் பறவைகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் கடந்த 2 நாட் களாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது அரிய வகை பறவைகள் கண்டெடுக் கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறுகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பது நீர்நிலை பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடத்தப் படவுள்ளன. அதன்படி, நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28 மற்றும் 29-ம் தேதி என 2 நாட்களுக்கு நடைபெற்றன.

அதன்படி, தமிழத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலை பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 2 நாட்களாக (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பெரிய ஏரி, சிம்மணபுதூர் ஏரி, குரும்பேரி ஏரி, மடவாளம் ஏரி, ஏலகிரி மலையில் உள்ள ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 2 நாட்களாக நடைபெற்றன.

திருப்பத்தூர் மாவட்ட வனச் சரகர் பிரபு தலைமையில், வனவர்கள் ரமேஷ், மகேஷ், தயாநிதி, வனக்காப்பாளர்கள் வேலு, ராமு, முருகன், மணி கண்டன், சமூக ஆர்வலர்கள், தூய நெஞ்சக்கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுவினர் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் பரவலாக காணப் படும் முக்குளிப்பான் பறவைகள், கிழக்கு மலை தொடர்ச்சியில் அதிகமாக காணப்படும் சிவப்பு தலை வாத்துகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட வனச்சரகர் பிரபு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும் போது, ‘‘தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய நீர்நிலைகளில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன

பறவைகள் நீர்நிலைகளை தேடி வரும் நேரத்தில் அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. இதில், கிழக்கு மலை தொடர்ச்சியில் அதிகமாக காணப்படும் சிவப்பு தலை வாத்துகள், அட்லாண்டிக் கடலில் பரவலாக காணப்படும் முக்குளிப்பான் பறவைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் கண் டெடுக்கப்பட்டது.

இது தொடர் பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நீர்நிலை பறவைகள் கணக்கெடுக்கப் பட்டதில், சிறிய மீன் கொத்தி பறவைகள் 10, வெண்மார்பு மீன் கொத்தி பறவைகள் 12, சமட்டி வெள்ளை மீன் கொத்தி பறவைகள் 15.

சிறிய கொக்கு பறவைகள் 10, பெரிய கொக்கு பறவைகள் 10, நடுத்தர கொக்கு பறவைகள் 15, இறா கொக்கு பறவைகள் 30, நீர் காகம் (சிறிய, பெரிய, நடுத்தர) பறவைகள் 50, பாம்பு தாரா பறவைகள் 4, சிறவி பறவைகள் 50, முக்குளிப்பான் பறவைகள் 20, அறிவாள் மூக்கன் பறவைகள் 20, நீல தாழை கோழி பறவைகள் 50, கானாங் கோழி பறவைகள் 10, நாறைகள் 5, மஞ்சள் அழகு ஆள்காட்டி பறவை 12, சிவப்பு அழகு ஆள்காட்டி பறவைகள் 15 சிவப்பு தலை வாத்து பறவைகள் 60 தென்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x