Published : 24 Dec 2022 06:08 PM Last Updated : 24 Dec 2022 06:08 PM
ப்ரீமியம் Rewind 2022 | இந்தியக் காடுகளில் சிவிங்கிப் புலிகள் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயல்பாடுகள் - ஒரு பார்வை
புதுடெல்லி: 2022-ல்இந்தியக் காடுகளில் சிவிங்கிப் புலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது உயிரினங்களின் உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு பார்வை...
பிரதமர் மோடியால் இந்த ஆண்டு (2022)"மிஷன் லைஃப்" எனப்படும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடங்கப்பட்டது. இது உலகம் முழுவதிலும் சூழலுக்கு ஏற்ற நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய திட்டமாகும்.
'மிஷன் லைஃப்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை குஜராத்தின் ஏக்தா நகரில் 20 அக்டோபர் 2022 அன்று ஐநா பொதுச் செயலாளர்அன்டோனியா குட்டரெஸ் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், தேவையற்ற நுகர்வுகளைத் தவிர்த்து இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தும் நோக்கிலான "லைஃப்" இயக்கத்தில் சேருமாறு இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை மையமாகக் கொண்டு ஐ.நா., கால நிலை மாநாட்டில் இந்தியா பங்கேற்றது. ஐநா காலநிலை மாநாட்டில் (COP 27) பல்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு 49 நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
14 நவம்பர் 2022 அன்று ஐ.நா கால நிலை மாநாட்டு நிகழ்வுகள் லைஃப் நிகழ்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஐ.நா., மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின் துறை அமைச்சகம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவை இணைந்து, ஜி 20 தலைமைத்துவத்தில் இந்தியாவின் எரிசக்தி ஆற்றல் அணுகல், மாற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவை குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தின.
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில், நவம்பர் 09, 2022 அன்று “வளரும் நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை செயல்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு நிதி அளித்தல்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
WRITE A COMMENT