Published : 08 Dec 2022 08:48 PM
Last Updated : 08 Dec 2022 08:48 PM
புது டெல்லி: மத்திய நிலத்தடி நீர் வாரியம், அதன் நிலத்தடி நீர் தர கண்காணிப்பு திட்டம் மற்றும் பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக நாட்டின் நிலத்தடி நீர் தரத்தின் தரவை பிராந்திய அளவில் உருவாக்குகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனித்தனியான பகுதிகளில் மனித நுகர்வுக்கு (பிஐஎஸ் படி) அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் நைட்ரேட், இரும்பு மற்றும் உப்புத்தன்மை போன்ற மாசு ஏற்படுவதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தண்ணீர் என்பது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், அதன் தரம் உட்பட நீர் மேலாண்மைக்கான முயற்சிகள் முதன்மையாக மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், நாட்டில் தண்ணீர் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையானது இந்தியப் பகுதிகளில் நிலத்தடி நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்குமான வழிகாட்டுதல்களை 24 செப்டம்பர் 2020 அன்று அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் உப்புத்தன்மை (மின் கடத்துத்திறன், 3000 மைக்ரோ எம்எச்ஓக்கள்/செ.மீ.க்கு மேல்) 32 மாவட்டங்களில் நைட்ரேட் (45 மி.கி/லிட்டருக்கு மேல்) 16 மாவட்டங்களில் இரும்பு (1 மி.கி/லிட்டருக்கு மேல்) என கணக்கிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2 மாவட்டங்களில் நைட்ரேட் (45 மி.கி/லிட்டருக்கு மேல்) என்ற அளவில் உள்ளது.
கொள்ளேகால் பகுதி காவிரி நீரில் 2019 ஜூன் மாதக் கணக்கெடுப்பின்படி நைட்ரேட் அளவு 81.26 ( மி.கி/லிட்டருக்கு மேல்) என இருந்தது.
இந்த தகவலை ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு இன்று (வியாழன்) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT