Published : 16 Nov 2022 04:10 AM
Last Updated : 16 Nov 2022 04:10 AM

3 புதிய நண்டு வகைகள் - சிங்கப்பூர், தைவான், பிரான்ஸ் பல்கலை.களுடன் இணைந்து அண்ணாமலை பல்கலை. கண்டறிவு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழம், பிரான்ஸ் மற்றும் தைவான் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, புதிய 3 நண்டுகள் இனத்தை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலகில் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வரும் சூழ் நிலையில், புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அவற்றின் மூலக்கூறு மற்றும் உருவவி யல் ஆய்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகின்றன. இச்சூழ்நிலையில், சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத் தின் கடல் உயிரியல் உயராய்வு மைய கணுக்காலிகளின் ஆய்வ கம், உலகிற்கு இதுவரை எட்டு வகையான கடல் வாழ் கணுக்காலிகள் நண்டுகள் மற்றும் ஐசோபாட்ஸ் இனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அண் ணாமலை பல்கலைக்கழகம் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகம், தைவான் தேசிய சுங்சிங் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் மாண்டிப்பில்லா பல்கலைகழகம் இணைந்து இரு புதிய நண்டு வகைகளை கண்ட றிந்துள்ளது.

அதில் ஒரு நண்டிற்கு முன்னாள் கடல்வாழ் மைய இயக்குனர் கணுக்காலிகள் ஆய்வாளர் முனைவர் கண்ணுபாண்டி பெயரில் ‘ப்ளீஸ்டோகாந்தா கண்ணு’ என்றும் மற்றுமொரு நண்டின் ஓட்டில் முட்கள் போன்ற உடல் அமைப்பு காணப்படுவதால் ‘பேராமயா முள்ளி’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, அண்ணாமலை பல்கலைக்ழகத்தின், பரங்கிப் பேட்டை கடல்வாழ் உயராய்வு மையத்தின் எதிரே அமைந்துள்ள சதுப்புவனத்தில் இருந்து புதிய வகையான நண்டினை கண்டறிந்து, உலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளனர்.

இந்த புதியவகை நண்டிற்கு அண்ணாமலை பல் கலைக்கழகத்தின் நூற்றாண்டிற்கு மேலான கல்வி மற்றும் ஆய்வு சேவையை நினைவூட்டும் வகையில் ‘சூடோஹெலிஸ் அண்ணாமலை’ என்று பெயர் அளிக்கப்பட் டுள்ளது. இந்த ஆய்வினை அண்ணா மலைப் பல்கலைக்கழக கடல்வாழ்உயராய்வு மைய ஆய்வு மாணவிமுனைவர் பிரேமா மற்றும் இம்மையத்தின் இணைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் (தற்போது, குடியாததம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரியின் மிகை பேராசிரியர்), தைவான் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹெசிசின் ஆகியோர்கூட்டு முயற்சியாக மேற் கொண்டு,புதிய வகைகளை அறிமுகப்படுத் தியுள்ளனர்.

இந்த ஆய்வின் கட்டுரையை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு, பிற இன நண்டுகளில்இருந்து மூலக்கூறு ஆய்விலும்உருவவியல் ஆய்விலும் வேறுபட்டுள்ளது எனபதை ஒப்புக் கொண்டு, இதன் ஆய்வுக்கட்டுரையை ‘விலங்கியல் படிப்பு’ என்ற உலக பிரசித்தி பெற்ற புத்தகத்திலும் அண்மையில் வெளியிட்டுள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x