Published : 07 Oct 2022 04:44 PM
Last Updated : 07 Oct 2022 04:44 PM

பசுமை தமிழ்நாடு இயக்கம்: அரசிடம் இருந்து மரக்கன்றுகளை பெறுவது எப்படி? 

சென்னை: பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் அரசிடம் இருந்து மரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். தமிழக வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதுதான் இதன் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை இணையதளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8வது தளம், சைதாப்பேட்டை ,சென்னை - 600 015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்ற திட்டம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x