Published : 25 Sep 2022 09:24 AM
Last Updated : 25 Sep 2022 09:24 AM
2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. பல நாட்கள் சென்னையின் பல பகுதிகள் தண்ணீருக்குள் முழ்கி இருந்தன. இது போன்ற ஒரு வெள்ளம் சமீபத்தில் பெங்களூரு நகரைப் புரட்டி எடுத்தது. சென்னைப் போன்று பெங்களூருவும் பல நாட்கள் தண்ணீருக்குள் முழ்கிதான் இருந்தது.
சென்னை வெள்ளம் தொடர்பாக சிஏஜி அளித்த அறிக்கையில், ‘சென்னையில் இயற்கை வடிகால்களை பராமரிக்கத் தவறியது, நீர் நிலைகள், நிதிகள் ஆக்கிரமிப்புகள்தான் வெள்ளத்திற்கு முக்கிய காரணம்’ என்று கூறப்பட்டது. குறிப்பாக, சென்னையில் உள்ள பெரிய நீர் நிலைகள் அனைத்தும் கட்டிடங்களாக மாறியதும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புதான் முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இதே நீர் நிலைகள் அழிப்புதான் பெங்களூரு வெள்ளத்திற்கு காரணம் என்று இனி வரும் காலங்களில் ஏதாவது அறிக்கை வந்தாலும் வரலாம்.
இப்படி நகரமயமாக்கல் என்ற பெயரில் பெருநகரங்களில் நிதிகள் மற்றும் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வான் உயர கட்டிடங்கள் எழுப்பட்டு வருகிறது. இதனால்தான் சிறிய மழைக்கு கூட இந்த இடங்கள் மீண்டும் குளங்களாக மாறி விடுகின்றன.
இவ்வாறு அழிக்கப்பட்டு வரும் நிதிகளை பாதுகாக்க சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக நதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமை இந்த உலக நிதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் சிந்து, கங்கா, யமுனா, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, கோசி, நர்மதா உள்ளிட்ட நநிதிகள் உள்ளன. இவற்றில் பல நிதிகள் தற்போது அழிவின் விழிம்பு நிலைக்கு சென்று கொண்டு உள்ளன. பல நதிகள் மிகவும் மாசடைந்துள்ளது.
இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 35 மாசடைந்த நிதிகளை மீட்டு எடுக்க தேசிய நிதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த திட்டத்திற்கு தற்போது வரை ரூ.6,142 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள காவிரி, அடையாறு, கூவம், கைகை, வெண்ணாறு, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்த ரூ.908.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர்த்து கங்கை நதியை தூய்மைப்படுத்த தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் ரூ.31,098 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மொத்தம் 10 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சிறிய நீர் நிலைகளை சீரமைக்க அம்ரூத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் நிதி நீர் இணைப்பு திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து வருகிறது. தேசிய நீர் மேம்பாட்டு முகமை 30 நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கான அறிக்கையை தயார் செய்து வருகிறது. இதில் தமிழகத்தில் காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இப்படி இந்தியாவில் உள்ள நிதிகளை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் மனிதர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. முறையான திட்டமிடல் இல்லாத நகர்புற வளர்ச்சி காரணமாகவும், மனிதர்களின் அலட்சியமான செயல்கள் காரணமாகவும் நிதிகள் அழிந்து வருகிறது என்றால் அதை மிகையல்ல.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகள்தான். சுதந்திர இந்தியாவில் சென்னையின் முக்கிய அடையாளமாக இருந்து கூவம் ஆறு இன்று மிகவும் மேசமான நிலைக்கு சென்று விட்டது.
சங்க காலத்தில் நீர் நிலைகளையும், நிதிகளையும் சுற்றிதான் தமிழர்கள் வாழ்க்கை இருந்தது. ஒரு நகரத்தில் நீர் வளம் செழிப்பாக இருந்தால் அந்த நகரமே செழிப்பாக இருக்கும் என்பது சங்க கால கூற்று. இது இந்த காலத்திற்கும் பொருந்தும்.
எதிர்பாராத மழை காரணமாக பல நாடுகள் தொடர்ந்து பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில், இது போன்ற பேரிடர்களை எதிர் கொள்ள நதிகளும் நீர் வளமும் மிகவும் அவசியம் . அந்த நீர் வளத்தை அளித்தரும் நிதிகளை அழித்தால் நாமும் அழிவோம் என்பது மறுக்க முடியாத உண்மை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT