Published : 14 Jul 2022 03:10 PM
Last Updated : 14 Jul 2022 03:10 PM
டெலிவரி நிறுவன வாகனம் ஒவ்வொன்றும் ஒரு பொருளை கொண்டு சேர்க்க சராசரியாக 285 கிராம் கார்பனை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் டெலிவரி நிறுவன வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறித்து ‘ஸ்டாண்ட் எர்த்’ (Stand earth) நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு ‘க்ளீன் மொபைலிட்டி கலெக்டிவ்’ (Clean Mobility Collective) அமைப்பு சான்றளித்துள்ளது.
இந்த ஆய்வில் அமேசான், பிளிப்கார்ட், பெடிக்ஸ், டிஎச்எல் உள்ளிட்ட முன்னணி 6 நிறுவனங்களின் வாகனங்களின் மட்டும் 4.5 மெகா டன் கார்பன் உமிழ்வதாக தெரியவந்துள்ளது. இது 10 லட்சம் பெட்ரோல் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் இயங்கும் விநியோக வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவானது பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒரு பொருளை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க இயக்கப்படும் விநியோக வாகனம் சராசரியாக 285 கிராம் கார்பன் வாயுவை வெளியேற்றுகிறது. இது சர்வதேச நாடுகளின் சராசரியான 204 கிராம் என்ற அளவில் இருந்து 40 சதவீதம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து க்ளீன் மொபைலிட்டி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "இந்தியாவில் வளர்ச்சியடைந்த நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் 2030-ல் தன்னுடைய டெலிவரி வாகனங்களை முழுமையாக, மின்சார வாகனங்களாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக தினசரி இயக்கப்படும் லட்சக்கணக்கான வாகனங்கள் காற்று மாசை அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, விநியோக நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க உரிய திட்டமிடுவது மிகவும் அவசியம்" என்றார்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT