Published : 21 Mar 2025 05:00 PM
Last Updated : 21 Mar 2025 05:00 PM
பனிப்பாறைகள் உருகுவது ஏன்? - காலநிலை மாற்றம்: புதைபடிவ எரிபொருள்களை எரித்தல், காடுகளை அழித்தல் உள்ளிட்ட மனிதர்களின் செயல்பாடுகளால் புவியின் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுகின்றன.
பசுங்குடில் வாயுக்கள்: கார்பன் டை ஆக்ஸைடு, பசுங்குடி வாயுக்கள் போன்றவை வெப்பத்தை வளி மண்டலத்தில் தக்கவைத்திருப்பதாலும் புவி வெப்பம் உயர்ந்து பனிப்பாறைகள் உருகுகின்றன.
கடலின் வெப்பம்: கடல்கள், குறிப்பாகத் துருவப் பகுதிகளில் உள்ள கடல்கள் அதிக வெப்பத்தை உள்ளிழுப்பதால் கடல்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன.
உருகுவதால் ஏற்படும் அபாயங்கள் கடல் மட்ட உயர்வு: பனிப்பாறைகள் உருகுவதால் கடல்மட்டம் அதிகரித்து, கடற்கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உண்டு. இதனால் கடற்கரையைச் சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
தண்ணீர்த் தட்டுப்பாடு: பனிப்பாறைகள் சிறிது சிறிதாக உருகுவதால் கிடைக்கும் பனிநீர்தான் அந்தப் பகுதிகளின் குடிநீர், விவசாயம் போன்றவற்றுக் கான நீராதாரமாக விளங்குகிறது. பனிப்பாறைகள் அதிகமாக உருகிக் காணாமல் போவதால் தண்ணீர்த் தட்டுப்பாடும் வறட்சியும் ஏற்பட்டு மக்கள் பாதிப்படை கின்றனர்.
சூழலியல் பாதிப்பு: பனிப்பாறைகள் உருகுவதால் சூழல் அமைப்பு பாதிக்கப்படுகிறது. பனிப்பாறை களையும் பனிநீரையும் நம்பி வாழும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
காணாமல் போன பனிப்பாறைகள்: உலகில் பல மலைகளில் இருக்கும் பனிப்பாறைகள் பெருமளவு உருகிவிட்டன அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டன. இமயமலையில் இருந்த பனிப்பாறைகள் உருகிவிட்ட நிலையில் தெற்காசியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் கிரீன்லாந்திலும் அண்டார்க்டிகாவிலும் உள்ள பனிப்பாறைகளின் அடர்த்தி குறைந்து கடல் மட்டம் அதிகரித்துவிட்டது.
பனிப்பாறைகள் உருகுவதை எவ்வாறு தடுப்பது? - வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும். புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பனிப்பாறைகள் உருகுவது குறையும்.
| மார்ச் 22 - உலக நீர் நாள் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment