Last Updated : 19 Dec, 2024 04:46 PM

 

Published : 19 Dec 2024 04:46 PM
Last Updated : 19 Dec 2024 04:46 PM

கழி​வுநீரால் மாசடைந்​து​வரும் புழல் ஏரி

ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ள புழல் ஏரி.

சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்​களில் ஒன்றான, திரு​வள்​ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்​தில் உள்ள புழல் ஏரி, 18 சதுர கி.மீ. பரப்​பள​வில், செங்​குன்​றம், புழல், பம்மதுகுளம், அம்பத்​தூர் உள்ளிட்ட பகுதி​களில் பரந்து விரிந்​துள்ளது. தற்போது 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்​ளள​வும் கொண்​டதாக உள்ளது.

புழல் ஏரியில், நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் பெய்​யும் மழைநீரும், பூண்டி ஏரியி​லிருந்து வரும் கிருஷ்ணா நீரும், சோழவரம் ஏரி நீரும் சேமிக்​கப்​பட்டு, சென்னை​யின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வைக்​கப்​படு​கிறது. இந்நிலை​யில், திரு​முல்​லை​வா​யில் மற்றும் அம்பத்​தூரில் குடி​யிருப்பு பகுதி​கள், சிறு தொழில்​நிறு​வனங்கள் உள்ளிட்டவை வெளி​யேற்றும் கழிவுநீரால் புழல் ஏரி மாசடைந்து வருகிறதாக சமூக ஆர்வலர்கள் குற்​றம் ​சாட்டு​கின்​றனர்.

செள.சுந்தரமூர்த்தி

இதுகுறித்து, புழல் ஏரி, அராபத் ஏரி பாது​காப்பு மக்கள் இயக்க தலைவர் செள.சுந்​தரமூர்த்தி தெரி​வித்​த​தாவது: ஆவடி மாநக​ராட்​சிக்​குட்​பட்ட திரு​முல்​லை​வா​யில் பகுதி​யில் பச்சை​யம்​மன்​கோ​யில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்​கடாசலம் நகர் பகுதி​யில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூர பிரதான மழைநீர் வடிகால்​வாய் உள்ளது. அதேபோல், சிடிஎச் சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதி​யில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் இரண்டரை கி.மீ. தூர மற்றொரு பிரதான மழைநீர் வடிகால்​வாய் உள்ளது.

கடந்த 15 ஆண்டு​களுக்கு முன்பு அமைக்​கப்​பட்ட இவ்விரு பிரதான மழைநீர் வடிகால்​வாய்​களில், மாசிலாமணீஸ்​வரர் நகர், கமலம் நகர், வெங்​கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதி​களில் உள்ள சுமார் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடி​யிருப்பு​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழிவு நீர் விடப்​படு​கிறது. அந்த கழிவுநீர் புழல் ஏரியில் கலப்​ப​தால், ஏரி மாசடைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

க.மனோகரன்

புழல் ஏரி, அராபத் ஏரி பாது​காப்பு மக்கள் இயக்​கத்​தின் பொருளாளரான க.மனோகரன் தெரி​வித்​த​தாவது: திரு​முல்​லை​வா​யில் பகுதி​யில் உள்ள இரு பிரதான மழைநீர் வடிகால்​வாய்கள் மூலம் மட்டுமல்​லாமல், திரு​முல்​லை​வா​யில் வெங்​கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகம்​பாள்​நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதி​களில் இருந்து, மழைநீரோடு கழிவுநீர், புழல் ஏரியில் கலக்​கிறது. மேலும், அம்பத்​தூர், திரு​முல்​லை​வா​யில் தென்றல் நகர், ஒரகடம் வெங்​கடேஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதி​களில் இருந்து 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடி​யிருப்பு​களின் கழிவுநீரும் புழல் ஏரியில் கலக்​கிறது.

எங்கள் இயக்​கத்​தின் தொடர் அழுத்தம் காரணமாக திரு​முல்​லை​வா​யில் வெங்​கடாசலம் நகர் பகுதி​யில், புழல் ஏரிக்​கரை​யில் ஆவடி மாநக​ராட்சி நிர்​வாகம் கடந்த 2 ஆண்டு​களுக்கு முன்பு கழிவுநீரை சுத்​தி​கரிக்​கும் நிலை​யத்தை அமைத்​துள்ளது. அந்த நிலை​யத்​தின் சுத்​தி​கரிப்பு திறன் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்​டர். ஆனால், வெங்​கடாசலம் நகர் பகுதி​யில் புழல் ஏரியில், மழைநீர் வடிகால்​வாய் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேரு​கிறது. இப்படி கழிவுநீர் கலந்​துள்ள​தால், புழல ஏரி பகுதி​யில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் - தென்றல் நகர் பகுதியில் மழைநீர்
வடிகால்வாய் மூலம் புழல் ஏரியில் கலக்கும் கழிவுநீர்.

தொடர்ந்து கழிவுநீர் கலப்​ப​தால், இதை குடிநீராக பயன்​படுத்​தும்போது பல்வேறு உபாதைகள் ஏற்படும். ஆகவே, பொது​மக்​கள், மழைநீர் வடிகால்​வாய்கள் மூலம் கழிவுநீரை புழல் ஏரியில் விடுவதை தவிர்க்க​வேண்​டும். ஏரி மாசடைவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார். இதுகுறித்து, நீர் வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கை​யில், “புழல் ஏரியில் கழி​வுநீர் கலப்​பதை தடுக்க பல்​வேறு நட​வடிக்கை​களில் ஈடு​பட்டு வரு​கிறோம். குறிப்​பாக, ஆவடி ​மாநக​ராட்சி உள்​ளிட்ட உள்​ளாட்சி அமைப்பு​கள் வாயிலாக கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் அமைத்து, கழி​வுநீரை சுத்​தி​கரித்து ஏரி​யில்விட நட​வடிக்கை எடுத்து வரு​கிறோம்​” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x