Published : 10 Nov 2024 10:54 AM
Last Updated : 10 Nov 2024 10:54 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்கும் வனத்துறை

சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ரூ.21 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரமைக்கப்பட உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நில பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இதில் 190 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டி இனங்கள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நீர், நில வாழ்வன, 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 29 வகையான புல் இனங்கள் உள்ளிட்ட 164 வகையான தாவரங்கள் என மொத்தம் 459 வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட சூழல் நிறைந்த பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.21 கோடியே 67 லட்சத்தில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூ.21 கோடியில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி, நீர்நிலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது, அதற்கு நீர் வரும் வழிகளை தூய்மைப்படுத்துவது, களைச்செடிகளை அகற்றுவது, கரைகளை பலப்படுத்துவது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குறுக்கு பாலங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 16 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x