Published : 05 May 2024 04:13 PM
Last Updated : 05 May 2024 04:13 PM
கொடைக்கானல்: கோடை சீசனையொட்டி கொடைக் கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுக்க வனத்துறையினர் தீவிரச் சோத னையில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலில் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரவும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப் பினும், சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்து கின்றனர். கோடை சீசனையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அதே நேரம், கொடைக்கானல் வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி பரவி வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க, வத்தலகுண்டு மற்றும் பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலையடி வாரப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து, வனத்துறையினர் தீவிரமாக கண் காணித்து சோதனையிடுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் ஒரு லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் தீப்பெட்டி, புகையிலை உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினரின் சோதனையையும் மீறி பிளாஸ்டிக் பாட்டில்கள், தீப்பற்றக் கூடிய பொருட்களை மறைத்து எடுத்துச் செல்கின்றனர். இதனால், கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியிலும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. அங்கு, பிளாஸ்டிக் பாட்டில், எளி தில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை இருந்தால் பறிமுதல் செய்கின்றனர்.
மலை கிராமங்களுக்கு அனுமதி: மேல்மலை கிராமங்களில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இதனால் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் 3 நாட்களாக விடிய விடிய போராடி காட்டுத்தீயை நேற்று கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று முதல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT