Published : 18 Feb 2024 04:08 AM
Last Updated : 18 Feb 2024 04:08 AM
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் இரவு நேரத்தில் அதிக வெளிச் சத்தை தரக்கூடிய விளக்குகளை ஒளிரவிட்டு யானையை விரட்டிச் சென்ற அதிமுக பிரமுகருக்கு வனத் துறை ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தது.
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன். அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் கோவை மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். கடந்த 15-ம் தேதி இரவு இவர், நவமலையில் தனக்கு சொந்தமான இடத்துக்கு சென்று விட்டு, காரில் கோட்டூர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, நவமலை சாலையில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. காரில் அதிக வெளிச் சத்தை தரக்கூடிய விளக்குகளை ஒளிரவிட்டபடி, யானையை மிதுன் துரத்திச் சென்றார்.
யானை பயந்து, வனப்பகுதிக்குள் ஓடுவதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டார். இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வனத்துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வன விலங்குகளை துன்புறுத்தியதாக மிதுனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT