Published : 15 Feb 2024 09:00 AM
Last Updated : 15 Feb 2024 09:00 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பசுமை குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தின் வனப்பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்திட, செயல் திட்ட ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப் பட்டு, அனைத்து குழு உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில், 12.50 லட்சம் மரக் கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியுடன் அகற்றப்படும் மரங்களுக்கு, ஒரு மரத்துககு 10 மரக் கன்றுகள் நடவு செய்திட வேண்டும்.
இதற்கான செயல் திட்ட அறிக்கை சமர்ப்பித்தப் பிறகே மரங்கள் அகற்றிட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இதனை ‘https://greentnmission.com/’ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், எஸ்பி தீபக் ஸ்வாச், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT