Published : 18 Dec 2023 04:00 AM
Last Updated : 18 Dec 2023 04:00 AM

குன்னூரில் வீட்டில் தஞ்சமடைந்த மரகதப் புறா

குன்னூரில் மீட்கப்பட்ட மரகதப் புறா.

குன்னூர்: குன்னூரில் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மாநில பறவையான மரகதப்புறாவை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்ப மண்டலமான தெற்காசியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் பரவலாக பச்சை புறா எனப்படும் மரகதப் புறா காணப்படுகிறது. மேலும் மலைக் காடுகள் மற்றும் ஈரப்பதமான காடுகளிலும் இந்த புறா காணப்படும். தமிழகத்தில் இது மாநில பறவையாக உள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீத மரகதப்புறா அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்புப் பகுதியில் மரகதப் புறா ஒன்று பறக்க முடியாமல், வீட்டுக்குள் புகுந்தது. இது தொடர்பாக வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வனத்துறையினர் வந்து, மரகதப் புறாவை மீட்டு சிகிச்சைக்காக அருவங்காடு கால் நடை சிகிச்சை மையத்தில் ஒப்படைத்தனர். பூரண குணமடைந்த பின் மரகதப்புறா பாதுகாப்பாக வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x