Published : 24 Nov 2023 01:51 PM
Last Updated : 24 Nov 2023 01:51 PM
திருச்சி: திருச்சி காவிரியாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதையறிந்த வனத் துறையினர் ஆற்றில் ஆய்வு நடத்தி முதலை நடமாட்டம் உள்ள பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இதனால் காவிரி ஆற்றில் ஓரளவு தண்ணீர் ஓடுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருச்சி மலைக்கோட்டையில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காவிரி ஆற்றுப்பாலத்தின் அடிப்பகுதியில் ஒரு முதலை இருந்ததை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். மேலும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, வனத் துறையினருக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்து அங்கு வந்த வனத் துறையினர் காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால், காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT