Published : 23 Nov 2023 04:06 AM
Last Updated : 23 Nov 2023 04:06 AM
கடலூர்: கடலூர் அருகே ராசாப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு டால்பின் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. அதன் மேல் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலைகள் இருந்தன.
இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் டால்பினை மீட்டு அதனை தூக்கிச் சென்று நடுக்கடலில் விட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாரை ராசப்பேட்டை கடற்கரை பகுதியில் சுமார் 5 அடி நீளம் உள்ள டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற மீன் வளத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment