Published : 18 Nov 2023 06:30 AM
Last Updated : 18 Nov 2023 06:30 AM
திருச்சி: திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே கணவனூர் தாளடியான் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் 2 அரிய வகை மர நாய்க்குட்டிகள் சுற்றித்திரிந்து வந்தன. இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வனத் துறையினர், மர நாய்க்குட்டிகளை மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர். மரநாய் வேகமாக அழிந்து வரும் இனம் என்பதால், 1972-ம் ஆண்டு முதல் இவை பாதுகாக்கப்பட்ட இனமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தென்னை மரம் அதிகம் உள்ள பகுதியில் மர நாய்கள் வளரும். மர நாய்களுக்கு இளநீரே பிரதான உணவாக உள்ளது. இரவு நேரங்களில் உணவைத் தேடிச் செல்லும் வழக்கமுடையவை இந்த மர நாய்கள் என வனத் துறையினர் தெரிவித்தனர். இதுபோல அரியவகை விலங்குகள், பறவைகளை பொதுமக்கள் பொதுவெளியில் கண்டால் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT