Published : 15 Nov 2023 03:33 PM
Last Updated : 15 Nov 2023 03:33 PM

திருப்பரங்குன்றம் அருகே கோயிலுக்குள் நுழைந்த 5 அடி கருநாகப் பாம்பு பத்திரமாக மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஐயப்பன் கோயிலில் ஐந்தடி கருநாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வன உயிரின ஆர்வலர் உதவியுடன் மீட்கப்பட்ட பாம்பு, நாகமலை புதுக்கோட்டை வனப் பகுதியில் விட்டப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது. கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று காலை கோவில் பூசாரி கைலாசநாதன் (வயது 62). கோயில் நடை திறந்து ஐயப்பன் சன்னதி கதவை திறந்தபோது பாம்பு சீரிய சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாம்பை பிடிப்பதற்காக வன உயிரின ஆர்வலர் சகாதேவனிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சகாதேவன், ஐயப்பன் கோயில் சன்னதி கதவருகே பதுங்கி இருந்த ஐந்து அடி நீள கருநாகப் பாம்பினை லாவகமாக பிடித்தார்.

மேலும், பாம்பை பத்திரமாக பையில் அடைத்து நாகமலை புதுக்கோட்டை வனப் பகுதியில் பத்திரமாக விட்டார். அதிகாலை நேரத்தில் ஐயப்பன் கோயிலில் ஐந்து அடி கருநாகப் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x