Published : 13 Oct 2023 04:04 AM
Last Updated : 13 Oct 2023 04:04 AM

சிதம்பரம் அருகே இளநாங்கூரில் வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை சிக்கியது

இளநாங்கூரில் வீட்டு தோட்டத் தில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

கடலூர்: சிதம்பரம் அருகே இளநாங்கூரில் வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்.

இவரது வீட்டு தோட்டத்தில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த அவர், இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் வனவர் பிரபு, வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர், அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

கிராம மக்கள் உதவியுடன் அக்குழுவினர் 9 அடி நீளம் 140 கிலோ எடை கொண்ட அந்த முதலையை பிடித்தனர். அதை பாதுகாப்பாக எடுத்து சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டனர். மேலும் தோட்டத்தில் முதலை புகுந்ததால் என்ன செய்ய வேண்டும் என இளநாங்கூர் கிராம மக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x