Published : 23 Sep 2023 05:59 AM
Last Updated : 23 Sep 2023 05:59 AM

மரக்காணத்தில் பருவகாலம் தொடங்கும் முன்பே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கூட்டம் கூட்டமாக வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்.

விழுப்புரம்: மரக்காணத்தில் பருவ காலம் தொடங்கும் முன்பே வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

மரக்காணம் அருகே 72 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டபக்கிங்காம் கால்வாய் அமைந்துள் ளது. இந்த கால்வாயையொட்டி தேவிகுளம், வண்டிபாளையம், ஆத்திகுப்பம், அனுமந்தை, கூனி மேடு, நடுக்குப்பம், வட அகரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 720-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனா, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா,நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பறவைகள் பருவகால மாற்றத்தின் காரணமாக இப்பகுதிக்கு வருகின்றன. அவை பக்கிங்காம் கால்வாய் பகுதியில் கூடுகள் கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. பருவகால தகவமைப்பு முடிந்த உடன் மீண்டும் அவை தங்கள் நாடுகளுக்கே திரும்பி சென்று விடுகின்றன. இதனால் மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

பறவைகள் சரணாலயம்: இதை தொடர்ந்து கடந்தாண்டு மரக்காணம் கழுவெளி சதுப்புநிலப் பகுதியை தமிழகத்தின் 16-வது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கான முதற்கட்ட நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் பறவைகள் சரணாலயம் அமைக்க வனத்துறையினர் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பருவகாலம் தொடங் கும் முன்பே, வெளிநாடுகளைச் சேர்ந்த கூழைக்கடா, அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி மூக்கன், பாம்பு கழுத்து நாரை உள்ளிட்ட பல்வேறு இனங் களைச் சார்ந்த வெளிநாட்டு பற வைகள், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கழுவெளி சதுப்புநில சுற்றுப்புற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. திறந்த வெளிப்பகுதியில் சுற்றித் திரியும் இவற்றை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடுவதாக கூறப் படுகிறது.

எனவே இப்பகுதியில் வந்து குவியும் வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க வனத்துறையினர் பாது காப்பை பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x