Published : 03 Aug 2023 02:59 PM
Last Updated : 03 Aug 2023 02:59 PM
மதுரை: வைகை ஆற்றில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையில் இருந்து கோழித் தீவனம் மற்றும் பயோ டீசல், கூடை, டம்ளர், தட்டு போன்ற பல்வேறு மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிக்கலாம் என மதுரை மாநகராட்சிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
மதுரை வைகை ஆற்றில் கடந்த காலத்தில் மாநகர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலந்தது. மாநகராட்சி தற்போது ஓரளவு நடவடிக்கை எடுத்ததால் ஆழ்வார்புரம், செல்லூர் போன்ற சில இடங்களில் மட்டுமே கழிவுநீர் கலந்து வருகிறது. ஆனாலும், கழிவுநீர் கலந்து வருவதை முற்றிலுமாக தடுக்க முடிய வில்லை. வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீரோட்டம் இல்லா ததால் கழிவுநீரில் ஆகாயத் தாமரைச் செடிகள் செழித்து வளர் கின்றன.
மதுரை மாநகராட்சி அவ்வப்போது பொக்லைன் இயந்திரங் களை கொண்டு ஆகாய தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தினாலும் அவை மீண்டும் வளர்வதை முற் றிலும் தடுக்க முடியவில்லை. அதனால் தற்போது மதுரை நகர் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென ஆகாயத் தாமரைச் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் வைகை ஆற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆகாயத் தாமரைச் செடிகளில் இருந்து மதிப்புக் கூட்டிய பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆகாயத் தாமரைச் செடிகள் தண்ணீரின் மேல் இருந்தால் ஆக்சிஜன் உள்ளே போகாது. அதனால், தண்ணீரின் உள்ளே வசிக்கும் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் பாதிக்கப் படும். ஆகாயத் தாமரை கழிவு நீர் இருந்தால் மட்டுமே வரும். வைகை ஆற்றில் தற்போது கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. அதனாலேயே ஆகாயத் தாமரைச் செடிகள் வளர்ந்துள்ளன.
வைகை ஆற்றில் தண்ணீர் ஓட்டம் இருக்கும்போது ஆகாயத் தாமரைச் செடிகளை பார்க்க முடியாது. இச்செடிகளால் சில நன்மைகளும் உள்ளன. ஆற்றில் ரசாயனக் கழிவு நீர், தாமிரம், பாதரசம், போன்ற ரசாயனங்கள் கலந்தால் அவற்றை ஆகாயத் தாமரைச் செடிகள் உறிஞ்சி அவற் றின் அளவைக் குறைத்து விடும்.
மதுரை மட்டுமில்லாது உலகம் முழுவதுமே ஆகாயத் தாமரையால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆகாயத் தாமரைகளில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிக்கலாம். மாநகராட்சி ஊழி யர்கள் அடிக்கடி ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப் படுத்துகின்றனர். இதற்காக பல லட்ச ரூபாய் செலவிடப்படுகிறது. அவற்றை கரையோரம் போட்டு விடுகின்றனர்.
ஆகாயத் தாமரைச் செடிகளை கொதிக்கவிட்டு காய வைத்து அதிலிருந்து கூடை, காகிதம், டம்ளர், பர்னிச்சர் போன்ற சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை தயாரிக்கலாம். இவற்றை காயவைத்தால் அவை வாழை நார்போல ஆகிவிடும். அதில் நாம் விரும்பும் மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிக் கலாம். சாதாரணமாக டீசலை எரித்தால் அதிலிருந்து கார்பன் நிறைய வெளியே வருகிறது.
ஆனால், ஆகாயத் தாமரைச் செடிகளில் எத்தனால் கலந்து வெளிநாட்டினர் பயோடீசல் தயாரிக்கின்றனர். இந்த பயோடீசலை எரித்தால் கார்பன் புகை வெளிவராது. காற்றும் மாசுபடாது. மேலும் ஆகாயத் தாமரையில் கோழி தீவனம் போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து வைகை ஆற்றில் ஆண்டுதோறும் ஆகாயத் தாமரைகளை எடுத்து சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் மட்டுமில்லாது, இந்திய அளவிலும் இதுவரை ஏற்படாதது வேதனையை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT