Published : 14 Jul 2023 06:01 PM
Last Updated : 14 Jul 2023 06:01 PM

‘பல்லுயிர் மற்றும் சதுப்பு நிலச் சூழலின் முக்கியத்துவம்’ புத்தக வெளியீடு - மத்திய அமைச்சர் பங்கேற்பு

"பல்லுயிர் மற்றும் சதுப்பு நிலச் சூழலின் முக்கியத்துவம்" என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானிகளால் எழுதப்பட்ட, "பல்லுயிர் மற்றும் சதுப்பு நிலச் சூழலின் முக்கியத்துவம்" என்ற புத்தகத்தை, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

இது குறித்த செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், "பல்லுயிர் மற்றும் சதுப்பு நிலச் சூழலின் முக்கியத்துவம்" என்ற புத்தகத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெளியிட்டார். இந்தப் புத்தகம் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MSSRF) விஞ்ஞானிகளால் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் விரிவான கண்ணோட்டத்தை இப்புத்தககம் வழங்குகிறது. இது ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், இந்தப் புத்தகத்தை MSSRF இணையதளத்தில் (www.mssrf.org) பதிவிறக்கம் செய்யலாம்.

இந்தியா முழுவதும் உள்ள சதுப்புநில இனங்கள், சதுப்புநிலங்களின் மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலில் செழித்து வளரும் பல வனவிலங்கு உயிரினங்களை விளக்கும் எளிய விளக்கங்களுடன் இப்புத்தகம் உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கான பல்லுயிர் நன்மைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வதில் சதுப்புநிலங்கள் எவ்வாறு உதவுகின்றன? என்பதை விளக்குகிறது. இத்தகைய வளங்களை இந்திய மொழிகளில் சாதாரண மக்களும் அணுக வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் விளக்கினார். பின்னர், MSSRFஅலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியது: "MSSRF-ன் கடலோர அமைப்புகளின் பணி சமூகப் பங்கேற்பு மூலம் சதுப்புநிலப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் சூழலியலில் உள்ளூர் சமூகம் பொருளாதாரப் பங்கைக் கொண்டிருக்காவிட்டால், பாதுகாப்பு நிலைத்திருக்காது. சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு சிக்கலானது மற்றும் கடலோர சமூகங்களைப் பாதுகாப்பதைத் தவிர வாழ்வாதாரங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. மற்றும் கார்பனை வரிசைப்படுத்துதலையும் செய்கிறது" என்றார்.

புத்தகம் குறித்து, கடலோர அமைப்புகள் ஆராய்ச்சியின் மூத்த உறுப்பினர், டாக்டர் ஆர்.ராமசுப்ரமணியன் கூறியது: "இந்தப் புத்தகம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனிதகுலத்துக்கு அதன் முக்கியத்துவம் பற்றி நன்கு புரிந்துகொள்வார்கள். இந்த புத்தகம் இந்தியாவிலும் மற்ற பகுதிகளிலும் உள்ள சதுப்புநில விநியோகம் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

உலகம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை, மாசுபாட்டின் தாக்கங்கள், சூறாவளி போன்ற பேரழிவுகளைக் குறைப்பதில் பங்கு, பொருளாதார மதிப்புகள், முதலியன தமிழ் மற்றும் தெலுங்கிலும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். மேலும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளோம், என்று அவர் கூறினார்", என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x