Last Updated : 12 Jun, 2023 07:30 AM

 

Published : 12 Jun 2023 07:30 AM
Last Updated : 12 Jun 2023 07:30 AM

ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: எழும்பூரில் பழமையான மரங்களை வெட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்காக, பூந்தமல்லி சாலையை ஒட்டிய ரயில்வே வளாக பகுதியில் வெட்டப்பட்ட மா, வேப்ப, சவுரி மரங்கள்.

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிக்காக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினரும், இங்குள்ள பழமையான மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்காக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 4 மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கின.

இந்தப் பணிகளுக்காக அப்பகுதியில் இருந்த, 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, 30-க்கும் கூடுதலான மரங்களும், 10 முதல் 20 ஆண்டுகளான சிறிய மரங்களும் வெட்டப்பட்டன. அதேபோல, பூந்தமல்லி சாலையை ஒட்டியிருந்த 20-க்கும் மேற்பட்ட மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. ற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறும்போது, "ஒவ்வொரு மரமும் 50 முதல் 100 வயது கொண்டவை. ருக்கும். ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்களை நடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, வெட்டப்பட்ட மரங்களை பூங்காக்கள், பள்ளிகளில் நட வேண்டும். ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களிலும் நடலாம். மரங்களை வெட்ட, மாவட்ட பசுமைக் குழு, மாநில பசுமைக் குழுவிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.

இந்த மரங்கள் வெட்டியது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார். ரயில்வே தொழிற்சங்க மூத்த நிர்வாகி இளங்கோவன் கூறும்போது, "தாம்பரம் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதைவிட, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அதிக ரயில்களை இயக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

எனவே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதற்காக, ரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டுவது தவிர்க்க முடியாது. எனினும், தேவையின் பொருட்டு, தவிர்க்க முடியாத மரங்களை மட்டும் வெட்டலாம்.

மற்ற மரங்களை வெட்டக் கூடாது" என்றார். நிழல் அமைப்பு நிர்வாகியும், மாநில பசுமைக் குழு உறுப்பினருமான பாபு கூறும்போது, "வெட்டப்பட்ட சில மரங்களை வேறு இடத்தில் நடவு செய்ய அறிவுறுத்தினோம். தவிர்க்க முடியாத மரங்கள் மட்டுமே அகற்றப்படும். அரிய வகை மரங்களைத் தக்கவைக்க முயற்சிக்கிறோம். மரத்தை வெட்டிய ஒப்பந்த நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட துறையினர், அதற்குமாற்றாக மரக் கன்றுகளை நட வேண்டும்" என்றார்.

182 மரங்கள் மட்டுமே... இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற, நிலம் பற்றாக்குறை தடையாக உள்ளது. இந்த திட்டத்தால் 318 மரங்கள் பாதிக்கப்படும் எனத் தெரியவந்ததால், அவற்றை அகற்ற மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியைப் பெற்றோம்.

எனினும், குறைந்தபட்ச அளவு மரங்களை வெட்ட முயற்சிக்கிறோம். 318 மரங்களில், 103 மரங்கள் வேறு இடத்தில் நடவு செய்யப்படும். மேலும், 33 மரங்களின் கிளைகளை மட்டும் சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 182 மரங்கள் மட்டுமே பாதிக்கப்படும்" என்றனர்.

வெட்டப்பட்ட மரத்துக்கு அஞ்சலி: இந்நிலையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் ரயில்வே அமைச்சர் ஏ.கே மூர்த்தி, பசுமைத் தாயகம் அமைப்பு மாநிலச் செயலர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x