Published : 11 Mar 2021 02:49 PM
Last Updated : 11 Mar 2021 02:49 PM

202 - ராஜபாளையம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ராஜேந்திரபாலாஜி அதிமுக
தங்கபாண்டியன் திமுக
கே.காளிமுத்து அமமுக
என்.எம்.எஸ் விவேகானந்தன் மக்கள் நீதி மய்யம்
வ.ஜெயராஜ் நாம் தமிழர் கட்சி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி. மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதியாக அமைந்திருப்பதால் இத்தொகுதி எப்போதும் பசுமையாகக் காணப்படும். விவசாயமும், தொழில் துறையும் இணைந்த வளர்ச்சியை இத்தொகுதியில் காண முடியும். பஞ்சு ஆலைகள் இத்தொகுதியில் அதிகம். குறிப்பாக, மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பேண்டேஜ் துணிகள் அதிக அளவில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பும் அதிகம் நடைபெறுகிறது. நெல், பருத்தி, கரும்பு, தென்னை சாகுபடியும் இப்பகுதியில் அதிகம். மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள அய்யனார்கோயில் சுற்றுலா தலமும் இத்தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜூக்கள் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசிக்கும் இத்தொகுதியில் மற்ற சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகின்றனர். ஏற்றுமதிக்கான தொழில் வரியைக் குறைக்க வேண்டும், அரசே கொள்முதல் செய்யும் வகையில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும், காட்டு விலங்கினங்கள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும், சித்துராஜபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ராஜபாளையம் நகராட்சி, ராஜபாளையம் ஒன்றியம் மற்றும் வடக்குவேங்கநல்லூர், சம்மந்தபுர்ம, கொத்தங்குளம், செட்டிக்குளம், அயன்கொல்லங்கொண்டான், திருச்சானூர், ஜமீன்சல்வார்பட்டி, சேத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊராட்சிகள் உள்ளன.

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 5 முறையும், திமுக 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறையும், சுயேட்சைகள் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006ல் அதிமுக வேட்பாளர் சந்திராவும், 2011ல் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியும், 2016ல் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனும் வெற்றிபெற்றுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ராஜபாளையம் தாலுகா (பகுதி)

வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள், இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி) தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி).

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,14,381

பெண்

1,19,969

மூன்றாம் பாலினத்தவர்

27

மொத்த வாக்காளர்கள்

2,34,377

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ.ஏ.எஸ்.ஷியாம்

அதிமுக

2

எஸ்.தங்கபாண்டியன்

திமுக

3

ஆ.குருசாமி

மார்க்சிஸ்ட்

4

பெ.லட்சுமணன்

பாமக

5

ஏ.என்.ராமச்சந்திரராஜா

பாஜக

6

வ.ஜெயராஜ்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

K.கோபால்சாமி

அதிமுக

53.8

2006

M.சந்திரா

அதிமுக

39.37

2001

M.ராஜசேகர்

அதிமுக

47.63

1996

V.P.ராஜன்

திமுக

38.62

1991

T.சாத்தய்யா

அதிமுக

63.45

1989

V.P.ராஜன்

திமுக

40.75

1984

K.இராமன்

இந்திய தேசிய காங்கிரஸ்

54.49

1980

P.மொக்கையன்

சுயேட்சை

44.07

1977

K.தனுஷ்கோடி

அதிமுக

37.55

1971

K.சுப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1967

A.A.சுப்பராஜா.

சுயேட்சை

1962

ரா. கிருஷ்ணசாமி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ்

51.73

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சந்திரா.M

அதிமுக

58320

2

ராஜன்.V.P

திமுக

57827

3

காளிமுத்து.P

பகுஜன் சமாஜ் கட்சி

13218

4

அய்யனார்.N

தேமுதிக

10251

5

விஜயகுமாரி.R

அனைத்திந்திய பார்வர்டு பிளாக்

4082

6

செல்லபாண்டி.M

பாஜக

1640

7

முனியசாமி.P

சுயேச்சை

1210

8

மாடசாமி.I

சுயேச்சை

485

9

மன்மதன்.M

சுயேச்சை

403

10

பெரியசாமி.A

சுயேச்சை

181

11

துரைபாலன்.D

சுயேச்சை

179

12

சீனிவாசன்.V

சுயேச்சை

170

13

தங்கமுத்து.M

சுயேச்சை

156

148122

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கோபால்சாமி.K

அதிமுக

80125

2

தங்கபாண்டியன்.S

திமுக

58693

3

ராமகிருஷ்ணன்.N.S

பாஜக

5428

4

முருகன்.V

சுயேச்சை

736

5

ஜாகிர்ஹுச்சைன்.A

சுயேச்சை

701

6

ஜோசப் செல்லப்பா.J

சுயேச்சை

672

7

மணிவாசகம்.S

பகுஜன் சமாஜ் கட்சி

625

8

சூரிய மகாராஜா.R

சுயேச்சை

570

9

தர்மலிங்கம்.K

சுயேச்சை

302

10

மன்மதன்.M

சுயேச்சை

278

11

அய்யனார்.P

சுயேச்சை

213

12

சரவணன்.P

சுயேச்சை

202

13

நீரதிலிங்கம்.K

சுயேச்சை

166

14

செல்வராஜ்.V

சுயேச்சை

111

15

குழந்தைவேல்.B

சுயேச்சை

103

148925

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x