Published : 11 Mar 2021 02:54 PM
Last Updated : 11 Mar 2021 02:54 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பரிதா | அதிமுக |
வி. அமலு | திமுக |
ஜெயந்தி பத்மநாபன் | அமமுக |
பாபாஜி சி.ராஜன் | மக்கள் நீதி மய்யம் |
இரா.கலையேந்திரி | நாம் தமிழர் கட்சி |
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான தொகுதியில் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி முக்கியமானது. 1951-ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் மூவர்ண இந்திய தேசிய கொடியை தயாரிக்கப்பட்டது குடியாத்தம் நகரில் உள்ள நெசவுக் கூடத்தில்தான். கல்விக் கண் திறந்த காமராஜரை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து முதலமைச்சராக்கி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த தொகுதி என்ற பெருமைக்குரியது.
சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்த குடியாத்தம் கைத்தறி லுங்கி வங்கசேதம், மியான்மர், மலேஷியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகளால் குட்டி சிவகாசி என்ற அடைமொழியும் இந்தத் தொகுதிக்கு உண்டு. பீடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக இருக்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
குடியாத்தம் வட்டம் (பகுதி)
அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்,
பேர்ணாம்பட்டு (பேரூராட்சி), குடியாத்தம், (நகராட்சி), மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்),
வாணியம்பாடி வட்டம் (பகுதி)
பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,
தொகுதி மக்கள் கோரிக்கைகள்
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு பேரணம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டு குடியாத்தம் (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டது. தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பின்தங்கிய பேரணாம்பட்டு பகுதியில் அரசு கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அல்லது அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும் என்பது. போக்குவரத்து நெரிசலில் திணறும் குடியாத்தம் நகருக்கு புறவழிச்சாலைத் திட்டம், குடியாத்தம் நகரில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே முதல்வர் காமராஜரால் கட்டிக் கொடுக்கப்பட்ட பாலம் பலவீனமடைந்து வருவதால் மாற்றுப் பாலம் கட்ட வேண்டும்,
கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரித்து புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும், பேரணாம்பட்டு பேருந்து நிலையம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நலிந்துவரும் கைத்தறி மற்றும் தீப்பெட்டி, பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தி அதிக மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஆந்திர வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க நீண்ட அகழி வெட்ட வேண்டும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள பத்தலப்பல்லி அணை கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும், பத்தலப்பல்லி மலைப்பாதையை பலம் வாய்ந்த பாதையாக மாற்ற வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1951-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் இரட்டை தொகுதியாக இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஜெ.அருணாச்சல முதலியார், ஏ.எம்.ரத்தினசாமி ஆகியோர் வெற்றிபெற்றனர். காமராஜர் முதலமைச்சர் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அருணாச்சல முதலியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இரட்டை தொகுதியில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தால் மற்றொரு உறுப்பினர் பதவியும் தானாக ரத்தாகிவிடும் என்ற விதியால் ரத்தினசாமியின் பதவியும் பறிபோனது.
இதையடுத்து 1954-ல் நடந்த இடைத் தேர்தலில் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காமராஜர், டி.மணவாளன் ஆகியோர் வெற்றிபெற்றனர். காமராஜர் முதலமைச்சரானார். 1957-ல் நடந்த இரட்டைத் தொகுதி தேர்வில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் வி.கே.கோதண்டராமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.மணவாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் வரலாறு
இரண்டு இடைத் தேர்தல் மற்றும் 2 முறை இரட்டை உறுப்பினரை தேர்வு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் இதுவரை 17 தேர்தல்களை குடியாத்தம் தொகுதி சந்தித்துள்ளது. காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, திமுக 3, அதிமுக இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளன.
2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், 94,689 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜமார்தாண்டன் 83,219 வாக்குகள் பெற்றார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் ஜெயந்தி பத்மநாபன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2019-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன், 1,06,137 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார். 8 மாதத்தில் அவர் உடல் நலக்குறைவால் இறந்ததால் எம்எல்ஏ பதவி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,39,342 |
பெண் |
1,48,302 |
மூன்றாம் பாலினத்தவர் |
40 |
மொத்த வாக்காளர்கள் |
2,87,684 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
சி.ஜெயந்தி பத்மநாபன் |
அதிமுக |
2 |
கே.ராஜமார்தாண்டன் |
தி.மு.க |
3 |
கு.லிங்கமுத்து |
இந்திய கம்யூ. |
4 |
பி.தீபா |
பாமக |
5 |
டி.கணேசன் |
இந்திய ஜனநாயக கட்சி |
6 |
எஸ்.ராஜ்குமார் |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
எ. ஜே. அருணாச்சல முதலியார் |
காங்கிரஸ் |
24101 |
20.13 |
1957 |
வி. கே. கோதண்ட ராமன் |
இ பொ க |
33811 |
21.78 |
1962 |
டி. மணவாளன் |
காங்கிரஸ் |
25795 |
44.97 |
1967 |
வி. கே. கோதண்ட ராமன் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
38825 |
61.21 |
1971 |
எப். கே. துரைசாமி |
திமுக |
34954 |
56.38 |
1977 |
வி. கே. கோதண்ட ராமன் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
20590 |
29.54 |
1980 |
கே. ஆர். சுந்தரம் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
30869 |
43.87 |
1984 |
ஆர். கோவிந்தசாமி |
காங்கிரசு |
32077 |
39.15 |
1989 |
கே. ஆர். சுந்தரம் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
22037 |
23.46 |
1991 |
வி. தண்டாயுதபாணி |
காங்கிரஸ் |
63796 |
64.41 |
1996 |
வி. ஜி. தனபால் |
திமுக |
48837 |
48.62 |
2001 |
சி. எம். சூரியகலா |
அதிமுக |
61128 |
57.05 |
2006 |
ஜி. லதா |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
48166 |
--- |
2011 |
லிங்கமுத்து |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
79416 |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
பி. எசு. இராஜகோபால நாயுடு |
சுயேச்சை |
18940 |
15.82 |
1957 |
டி. மணவாளன் |
காங்கிரசு |
33341 |
21.47 |
1962 |
சி. குப்புசாமி |
குடியரசு கட்சி |
15258 |
26.6 |
1967 |
பி. ஆர். நாயுடு |
காங்கிரஸ் |
21901 |
34.53 |
1971 |
டி. எ. ஆதிமூலம் |
நிறுவன காங்கிரஸ் |
18580 |
29.97 |
1977 |
சுந்தரராசுலு நாயுடு |
ஜனதா கட்சி |
18046 |
25.89 |
1980 |
கே. எ. வாகாப் |
சுயேச்சை |
20929 |
29.74 |
1984 |
எ. கே. சுந்தரேசன் |
சுயேச்சை |
25630 |
31.28 |
1989 |
ஆர். வேணுகோபால் |
அதிமுக (ஜெ) |
19958 |
21.24 |
1991 |
ஆர். பரமசிவம் |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட |
28897 |
29.17 |
1996 |
எஸ். இராம்கோபால் |
காங்கிரஸ் |
19701 |
19.61 |
2001 |
எஸ். துரைசாமி |
திமுக |
36804 |
34.35 |
2006 |
ஜெ. கே. என். பழனி |
அதிமுக |
46516 |
--- |
2011 |
. க. ராஜமார்த்தாண்டன் |
திமுக |
73574 |
--- |
2006 சட்டமன்ற தேர்தல் |
44. குடியாத்தம் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
G. லதா |
சி.பி.ஐ |
48166 |
2 |
K.N. பழநி |
அ.தி.மு.க |
46516 |
3 |
K. சுதீஷ் |
தேமுதிக |
20557 |
4 |
S. நடராஜன் |
சுயேச்சை |
1500 |
5 |
P.V. கோவிந்தராஜி |
எஸ்.பி |
1073 |
6 |
K.S. குமரவேல் |
பிஜேபி |
997 |
7 |
E. கருணாநிதி |
பகுஜன் |
965 |
8 |
M. கோவிந்தசாமி |
சுயேட்சை |
768 |
9 |
P. சங்கரன் |
சுயேட்சை |
453 |
10 |
V. தமிழ் செல்வன் |
சுயேட்சை |
343 |
121338 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
44. குடியாத்தம் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
கு. லிங்கமுத்து |
சி.பி.ஐ |
79416 |
2 |
க. ராஜமார்தாண்டன் |
தி.மு.க |
73574 |
3 |
C. பாரதி |
ஐ.ஜே.கே |
1687 |
4 |
P. வடிவேலன் |
சுயேச்சை |
1416 |
5 |
E. கருணாநிதி |
பி.எஸ்.பி |
1335 |
6 |
P. மேகனாதன் |
பு.பா |
1168 |
7 |
A.மதி |
சுயேச்சை |
1053 |
8 |
C. பாஸ்கரன் |
சுயேச்சை |
595 |
9 |
ரமேஷ் பாபு |
சுயேச்சை |
558 |
10 |
கனகராஜ் .E. |
சுயேச்சை |
499 |
11 |
C. ராஜன் |
எல்.ஜே.பி |
297 |
12 |
K. ஏகனாதன் |
சுயேச்சை |
235 |
161833 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT