Published : 11 Mar 2021 02:55 PM
Last Updated : 11 Mar 2021 02:55 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
த.வேலழகன் | அதிமுக |
ஏ.பி.நந்தகுமார் | திமுக |
சத்யா என்கிற சதீஷ்குமார் | அமமுக |
ராஜசேகர் | மக்கள் நீதி மய்யம் |
அ.சுமித்ரா | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்தின் முதல் தங்கக் கோயில் என்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி பொற் கோயில், உதான் திட்டத்தில் இறுதிகட்ட கட்டுமான பணியில் உள்ள வேலூர் விமான நிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்தத் தொகுதியின் அடையாளமாக இருக்கிறது. பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சி மற்றும் வேலூர் மற்றும் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், மலைக்கிராமங்கள் என கிராமப்புற பின்னணியை கொண்டுள்ள மிகவும் பின்தங்கிய தொகுதி. 1962-ல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும் 1967 மற்றும் 1971-ல் கணியம்பாடி தொகுதியாகவும் பெயர்கள் மாறி மாறி தேர்தலை சந்தித்த இந்த தொகுதி கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் அணைக்கட்டு தொகுதியாக உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வேலூர் வட்டம் (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.
பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)
தொகுதி மக்களின் கோரிக்கைகள்
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது, அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் பின் தங்கிய இப்பகுதி மக்களுக்கு பேருந்து வசதி, அணைக்கட்டு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் வளர்க்க சிறப்பு திட்டங்கள், பள்ளிகொண்டாவில் விரிவுபடுத்திய வாரச்சந்தை மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
அத்துடன் ஒடுகத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
தொகுதியில் புகழ்பெற்ற இலவம்பாடி கத்திரிக்காய், ஒடுகத்தூர் கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெறும் பணியை விரைவுபடுத்த வேண்டும், மலைக்கிராமங்களில் விளையும் சாமை, புளி மற்றும் வனப்பகுதியில் இருந்து கிடைக்கும் தேன் போன்றவற்றுக்கு தனி அடையாளத்துடன் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
தேர்தல் வரலாறு
இதுவரை நடந்துள்ள 12 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 6, திமுக 5, காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன.
கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.பி.நந்தகுமார் 77,058 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கலையரசு 68,290 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,22,995 |
பெண் |
1,30,344 |
மூன்றாம் பாலினத்தவர் |
37 |
மொத்த வாக்காளர்கள் |
2,53,376 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
எம்.கலையரசு |
அதிமுக |
2 |
ஏ.பி.நந்தகுமார் |
தி.மு.க |
3 |
பி.எஸ்.பழனி |
தமாகா |
4 |
கே.எல்.இளவழகன் |
பாமக |
5 |
கே.விஜயகுமார் |
பாஜக |
6 |
கே.சிவராஜ் |
நாம் தமிழர் |
2006 சட்டமன்ற தேர்தல் |
44. அனணக்கைட்டு |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
K .பாண்டுரங்கன் |
அ.தி.மு.க |
59220 |
2 |
M. வரலட்சுமி |
பா.ம.க |
59167 |
3 |
M. வெங்கடேசன் |
தே.மு.தி.க |
7470 |
4 |
G. வீரமணி |
சுயேச்சை |
1335 |
5 |
J. குமரேசன் |
பிஜேபி |
1287 |
6 |
S. பண்ணீர்செல்வம் |
சுயேச்சை |
795 |
7 |
C. சிவம் |
பிஎஸ்பி |
733 |
8 |
T. நடராஜன் |
சுயேச்சை |
606 |
9 |
B. தெய்வசிகாமணி |
சுயேச்சை |
546 |
10 |
V. கலைச்செல்வன் |
சுயேச்சை |
397 |
131556 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
44. அனணக்கைட்டு |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
M. கலைஅரசு |
பா.ம.க |
80233 |
2 |
V.B. வேலு |
தேமுதிக |
52330 |
3 |
M. தர்மன் |
எம்.எம்.கே.ஏ |
4696 |
4 |
K. வேலு |
சுயேட்சை |
2619 |
5 |
DR. R. சண்முகம் |
சுயேச்சை |
1962 |
6 |
அன்பரசு |
ஐ.ஜே.கே |
1369 |
7 |
ரேனு .S |
பி.ஸ்.பி |
1018 |
8 |
வேலு .G |
சுயேச்சை |
671 |
9 |
சந்திரன் .C |
எல்.ஜே.பி |
605 |
10 |
தட்சினாமுர்த்தி .T |
எ.ஐ.பி.பி.எம்.ஆர் |
599 |
11 |
கலியபெருமாள் .V |
சுயேச்சை |
585 |
12 |
சவுந்தர்ராஜன் .S. |
பி.பி.ஐ.ஸ் |
507 |
147194 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT