Published : 11 Mar 2021 02:22 PM
Last Updated : 11 Mar 2021 02:22 PM

213 - விளாத்திகுளம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சின்னப்பன் அதிமுக
ஜி.வி.மாரக்கண்டேயன் திமுக
கே.சீனி செல்வி அமமுக
வில்சன் மக்கள் நீதி மய்யம்
இரா.பாலாஜி நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். எந்தவித வளர்ச்சியும் இல்லாத பின்தங்கிய தொகுதி. மானாவாரி, வைப்பாற்று பாசனம், கிணற்று பாசனம், கடற்கரை ஆகியவை தொகுதியில் உள்ளன. விவசாயத்தை தவிர வேறு எந்தவிதமாக தொழிலும் கிடையாது. வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலையில் இத்தொகுதி விவசாயிகள் உள்ளனர். மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும் வைப்பாறு இந்த தொகுதி வழியாக செல்கிறது.

விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டங்களை முழுகையாகவும், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் ஒரு சில பகுதிகளையும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளது. விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய பேரூராட்சிகளை உள்ளடக்கியது. மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் மண் இந்த தொகுதியில் தான் உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.

விவசாயிகளை அதிகம் கொண்ட விளாத்திகுளம் தொகுதியில் மீனவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர். இந்த தொகுதியில் பிரச்சினைகள் ஏராளம். மிளகாய் வத்தல் சந்தைக்கு விளாத்திகுளம் பெயர் பெற்றது. ஆனால், மிளகாய் வத்தலை சேமித்து வைக்க போதுமான குளிர்ப்பதன கிடங்குகள் கிடையாது. மானாவாரி விவசாயத்தைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதியில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்றவை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் கோரிக்கைகள்.

இந்த தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 13 பொது தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என மொத்தம் 14 தேர்கல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் 9 முறை அதிமுக வென்றுள்ளது. அடுத்ததாக திமுக 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.வி. மார்க்கண்டேயன் 22,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.உமா மகேஸ்வரி 18,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 71,496 வாக்குகள் பெற்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு கட்சி இரண்டாக பிரிந்த போது, விளாத்திகுளத்தில் வெற்றி பெற்ற உமா மகேஸ்வரி அமமுகவுக்கு சென்றார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சின்னப்பன் 28,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 70,139 வாக்குகள் பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,219

பெண்

1,04,027

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,05,248

2016 தேர்தல் காணும் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2006

P.சின்னப்பன்

அதிமுக

46.73

2001

N.K.பெருமாள்

அதிமுக

48.16

1996

K.ரவி சங்கர்

திமுக

32.1

1991

N.C.கனகவல்லி

அதிமுக

62.1

1989

K.K.S.S.R.இராமச்சந்திரன்

அதிமுக (ஜெ)

36.59

1984

குமர குருபர ராமநாதன்

திமுக

40.52

1980

R.K.பெருமாள்

அதிமுக

53.75

1977

R.K.பெருமாள்

அதிமுக

38.39

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. சின்னப்பன்

அ.தி.மு.க

45409

2

K. ராஜாராம்

தி.மு.க

37755

3

S. பாலகிருஷ்ணன்

தே.மு.தி.க

5779

4

லிங்கராஜ்

பி.எஸ்.பி

4026

5

V.P. ஜெயராஜ்

பி.ஜே.பி

1197

6

A. நடராஜ்

சுயேச்சை

1077

7

R. முருக பாண்டியன்

அகில இந்திய பார்வர்டு பிளாக்

710

8

M. காந்தி

சுயேச்சை

541

9

T. தங்கமுத்து

ஜே.டி

460

10

L. அழகேசன்

சுயேச்சை

217

97171

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V. மார்கண்டேயன்

அ.தி.மு.க

72753

2

K. பெருமாள்சாமி

ஐ.என்.சி

50156

3

M. கருத்து மெய்யப்பன்

சுயேட்சை

2378

4

G. மந்திரமுத்து

சுயேட்சை

1795

5

K. சுந்தரமூர்த்தி

பி.ஜே.பி

1499

6

S. அய்யாதுரை

பி.ஸ்.பி

1423

7

P.S. ஐய்யனார்

சுயேட்சை

1102

8

G. நடராஜ்

சுயேட்சை

806

9

N. நம்மாழ்வார்

சுயேட்சை

513

10

P. நடராஜன்

சுயேட்சை

443

11

K. பொன்னுகுமார்

சுயேட்சை

424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x