Published : 11 Mar 2021 02:24 PM
Last Updated : 11 Mar 2021 02:24 PM

216 - ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் அணை.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக
ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (காங்கிரஸ்) திமுக
ஏரல் எஸ்.ரமேஷ் அமமுக
ஆர்.சேகர் மக்கள் நீதி மய்யம்
பே.சுப்பையா பாண்டியன் நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் விளங்குகிறது. தாமிரபரணி நதிக்கரை அமைந்துள்ள இந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றது. நவதிருப்பதி, நவகைலாயம் போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் இந்த தொகுதியில் உள்ளன.

தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளதால் இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். ஏ.பி.சி. வீரபாகு, சி.பா. ஆதித்தனார் போன்ற முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி.

தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால் அந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. சாத்தான்குளம் தாலுகா முழுவதும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுகாக்களில் பகுதியளவு இந்த தொகுதியில் உள்ளன. சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குள், ஏரல், ஆழ்வார்திருநகரி போன்ற பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

தொகுதியின் பிரச்சினைகள்

விவசாயிகளை அதிகம் கொண்ட தொகுதி என்பதால் இங்குள்ள பிரச்சினைகளும் விவசாயம் சார்ந்ததே ஆகும். இந்த பகுதியில் வாழை விவசாயம் அதிகம். வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைபடுகின்றனர். எனவே, வாழைக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தாயரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என்பன போன்றவை இத்தொகுதி மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகும்.

இந்த தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 இடைத்தேர்தலையும் சேர்த்து இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி. வீரபாகு வென்றுள்ளார். அடுத்ததாக அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளது. 1967, 1971 தேர்தல்களில் திமுக சார்பில் சி.பா. ஆதித்தனார் இத்தொகுதியில் வென்றுள்ளார்.

2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி. சண்முகநாதன் 3,531 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,02,651

பெண்

1,04,706

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,07,363

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

எஸ்.பி. சன்முகாநந்தன்

அ.தி.மு.க

2009 இடைத்தேர்தல்

எம்.பி.சுடலையாண்டி

இ.தே.கா

60.78

2006

D.செல்வராஜ்

இ.தே.கா

40.78

2001

S.P.சண்முகநாதன்

அதிமுக

46.58

1996

S.டேவிட் செல்வின்

திமுக

42.57

1991

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

62.54

1989

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

34.12

1984

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

53.76

1980

E.ராமசுப்பிரமணியன்

அதிமுக

38.99

1977

K.செல்வராஜ்

அதிமுக

31.29

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D. செல்வராஜ்

காங்கிரஸ்

38188

2

S.P. சண்முகநாதன்

அ.தி.மு.க

36556

3

E. அதிசயகுமார்

பி.ஸ்.பி

9324

4

C. சத்தியசீலன்

தே.மு.தி.க

3166

5

P.M. பால்ராஜ்

பி.ஜே.பி

2719

6

S. பெட்ரிக் ஸ்டான்லி

பார்வர்டு பிளாக்

2136

7

E. ஜார்ஜ் பென்னி

சுயேச்சை

719

8

N. ராஜகோபாலன்

சுயேச்சை

370

9

S. தங்கபாண்டி

எஸ்.பி

193

10

A. அய்யப்பன்

டி.என்.ஜே.சி

151

11

G. குமார்

எல்.ஜே.பி

121

93643

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.P. சண்முகநாதன்

அ.தி.மு.க

69708

2

M.B. சுடலையாண்டி

காங்கிரஸ்

48586

3

S. சுடலைமணி

ஜே.எம்.எம்

6033

4

S. செல்வராஜ்

பி.ஜே.பி

4125

5

H.M. முகமது யூசுப்

எ.ஐ.எம்.எப்

1303

6

N. சரவணன்

சுயேச்சை

1255

7

K. சின்னதுரை

எபிஎம்

869

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x