Published : 11 Mar 2021 01:59 PM
Last Updated : 11 Mar 2021 01:59 PM

143 - லால்குடி

லால்குடி

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
டி.ஆர்.தர்மராஜ் அதிமுக
சவுந்திரபாண்டியன் திமுக
எம்.விஜயமூர்த்தி அமமுக
கே.மலர் தமிழ் பிரபா நாம் தமிழர் கட்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒப்பிடும் போது குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி லால்குடி.

பெரும்பாலும் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் வசிக்கும் பகுதியாக இந்த தொகுதி அமைந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன.

குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டால்மியா சிமென்ட் தொழிற்சாலை, புகழ்பெற்ற லால்குடி சப்தரிஷீஸ்வர் திருக்கோயில், கோத்தாரி சர்க்கரை ஆலை, அன்பில் மாரியம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், குமுளூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இந்த தொகுதியில் உள்ள முக்கியமான இடங்களாகும்.

லால்குடி, புள்ளம்பாடி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளையும் லால்குடி, புள்ளம்பாடி, பூவாளூர், கல்லக்குடி ஆகிய பேரூராட்சி பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதி இது.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியாகத் தான் செல்கிறது. ஆனால், எப்போதும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கித் தவிப்பது இந்த சாலையை பயன்படுத்துபவர்களால் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும்.

லால்குடியின் மையப்பகுதியில் ஏறத்தாழ ரூ.20 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் கடந்த 2010-ம் ஆண்டுப் பணிகள் தொடங்கி கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது. ஆனாலும், முழுமையான பயன்பாட்டுக்கு தேவையான அணுகுசாலை, ரவுண்டானா உள்ளிட்ட பணிகள் பல்வேறு காரணங்களால் நிறைவடையாததால் பாலம் கட்டியும் போதிய பயன் இல்லாமல் இருக்கிறது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சார்பில் செந்துரேஸ்வரன், திமுக சார்பில் ஏ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ. சவுந்தரபாண்டியன் வெற்றி பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,05,308

பெண்

1,12,205

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்

2,17,526

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம். விஜயமூர்த்தி

அதிமுக

2

ஏ. சவுந்தரபாண்டியன்

திமுக

3

எம். ஜெயசீலன்

மார்க்சிஸ்ட்

4

ஆர். உமாமகேஸ்வரன்

பாமக

5

கே. செல்வக்குமார்

ஐஜேகே

6

பி. சம்பத்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

இராஜா சிதம்பரம்

சுயேச்சை

26009

62.21

1957

எஸ். லாசர்

காங்.

30232

55.38

1962

பி. தர்மலிங்கம்

திமுக

38951

51.85

1967

டி. நடராசன்

திமுக

37352

50.63

1971

வி.என். முத்தமிழ் செல்வன்

திமுக

40213

54.51

1977

கே.என். சண்முகம்

அதிமுக

33322

36.06

1980

அன்பில் தர்மலிங்கம்

திமுக

40899

40.9

1984

கே. வெங்கடாசலம்

காங்கிரஸ்

61590

60.09

1989

கே.என். நேரு

திமுக

54275

45.95

1991

ஜே. லோகாம்பாள்

காங்கிரஸ்

65742

54.88

1996

கே.என். நேரு

திமுக

84113

68.47

2001

எஸ்.எம். பாலன்

அதிமுக

58288

47.11

2006

எ. சவுந்தரபாண்டியன்

திமுக

62937

---

2011

எ. சவுந்தரபாண்டியன்

திமுக

65363

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

வரதராசன்

காங்கிரஸ்

15799

37.79

1957

எ.பி. தர்மலிங்கம்

சுயேச்சை

24354

44.62

1962

ஐ. அந்தோணிசாமி

காங்கிரஸ்

31707

42.21

1967

டி.ஆர். உடையார்

காங்கிரஸ்

34712

47.05

1971

டி. இராமசாமி உடையார்

ஸ்தாபன காங்கிரஸ்

28250

38.29

1977

ஆர். கங்காதரன்

திமுக

31789

34.4

1980

எ. சாமிக்கண்ணு

சுயேச்சை

38099

38.1

1984

எ. சாமிக்கண்ணு

தமிழ்நாடு காங்கிரஸ்

36468

35.58

1989

சாமி திருநாவுக்கரசு

அதிமுக (ஜெ)

31087

26.32

1991

கே.என். நேரு

திமுக

52225

43.59

1996

ஜே. லோகாம்பாள்

காங்கிரஸ்

24609

20.03

2001

கே.என். நேரு

திமுக

56678

45.81

2006

டி. இராசாராம்

அதிமுக

59380

---

2011

சுந்தரேஷ்வரன்

தேமுதிக

58208

---

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சௌந்தர பாண்டியன்.A

திமுக

62937

2

ராஜாராம்.T

அதிமுக

59380

3

ராமு.S

தேமுதிக

4376

4

ராஜேந்திரன்.D

பாஜக

1607

5

கணபதி.A

பகுஜன் சமாஜ் கட்சி

1039

6

ராஜாராம்.N

சுயேச்சை

757

7

முத்துசாமி.A

சுயேச்சை

474

8

துரைசாமி.P

சமாஜ்வாதி கட்சி

447

9

கிருஷ்ணமூர்த்தி.U

சுயேச்சை

375

10

நடராஜ்.M

சுயேச்சை

373

11

பாலசுப்ரமணியன்.P

ஜனநாயக காங்கிரஸ்

251

12

அன்பரசன்.G

சுயேச்சை

151

132167

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சௌந்தர பாண்டியன்.A

திமுக

65363

2

செந்தூரேஸ்வரன்.A

தேமுதிக

58208

3

பார்கவன் பச்சமுத்து.P

இந்திய ஜனநாயக கட்சி

14004

4

லோஹிதாசன்.M.S

பாஜக

2413

5

தங்கமணி.K

சுயேச்சை

1452

6

ஜெயக்குமார்.A

சுயேச்சை

1437

7

சின்னப்பன்

பகுஜன் சமாஜ் கட்சி

1167

8

ரவி.P

சுயேச்சை

583

9

முருகவேல்.K

சுயேச்சை

477

10

பாலசுப்ரமணியன்.P

சுயேச்சை

472

11

அய்யாசாமி.S

சுயேச்சை

346

12

சந்திரசேகரன்.P

சுயேச்சை

279

146201

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x