Published : 11 Mar 2021 02:02 PM
Last Updated : 11 Mar 2021 02:02 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
வெல்லமண்டி நடராஜன் | அதிமுக |
இனிகோ இருதயராஜ் | திமுக |
ஆர்.மனோகரன் | அமமுக |
டி.வீரசக்தி | மக்கள் நீதி மய்யம் |
இரா.பிரபு | நாம் தமிழர் கட்சி |
திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கி அமைந்துள்ளது திருச்சி கிழக்கு தொகுதி. 1951 முதல் திருச்சி -1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரிய கடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை உள்ளிட்டவைகள் அமைந்திருப்பது இத்தொகுதியின் சிறப்பம்சம்.
மாநகராட்சியின் 25 வார்டுகளைக் கொண்டுள்ள இத்தொகுதியில் திருச்சி (மாநகராட்சி) வார்டு எண். 8 முதல் 26 வரை, 33 முதல் 35 வரை, 37, 38 மற்றும் 43 வார்டு வரை இதில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி பிரச்சினைகள்
முழுக்க, முழுக்க நகரம் சார்ந்த தொகுதி என்பதால், இங்கு வசிக்கும் மக்களுக்கான பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை என அடிப்படை பிரச்னைகள் ஏராளம்.
இதுமட்டுமின்றி சத்திரம் பேருந்து நிலைய விரிவாக்கம், காந்தி மார்க்கெட் மற்றும் வெங்காய மண்டிகள் இடமாற்றம், சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள யானைக்குளத்தில் வணிக வளாகம் கட்டுதல் என அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்புடன் முடங்கி, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்தொகுதியின் எல்லைகளில் ஒன்றான சிந்தாமணி பகுதியில் இருந்து, மாநகராட்சி நிர்வாகமே கழிவுநீரை காவிரி ஆற்றில் திறந்து விடுகிறது. பலமுறை மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இன்னும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
திமுகவின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-ல் மலர்மன்னன், 1996, 2001-ல் பரணிக்குமார், 2006-ல் அன்பில் பெரியசாமி வெற்றி பெற்றனர். இடையில் 1991-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் வெற்றி பெற்று அரசுக் கொறடாவாக இருந்தார்.
2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளரான வெல்லமண்டி நடராஜன், காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜை வெற்றி பெற்றார். அதன்பின் வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,23,531 |
பெண் |
1,30,853 |
மூன்றாம் பாலினத்தவர் |
43 |
மொத்த வாக்காளர்கள் |
2,54,427 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
என். நடராஜன் |
அதிமுக |
2 |
ஜெரோம் ஆரோக்கியராஜ் |
காங்கிரஸ் |
3 |
ரொக்கையா ஷேக் முகமது |
மதிமுக |
4 |
ஸ்ரீதர் |
பாமக |
5 |
டி. ராஜய்யன் |
பாஜக |
6 |
ஆர். பிரபு |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
மனோகரன்.R |
அதிமுக |
83046 |
2 |
அன்பில் பெரியசாமி |
திமுக |
62420 |
3 |
பார்த்திபன்.P |
பாஜக |
3170 |
4 |
மனோஜ் குமார்.S |
சுயேச்சை |
631 |
5 |
இளங்கோ.M |
இராஷ்டிரிய ஜனதா தளம் |
539 |
6 |
தங்கராஜ்.V.K |
ஹிந்து மகாசபா |
113 |
7 |
சுரேஷ்குமார்.D |
பகுஜன் சமாஜ் கட்சி |
287 |
8 |
பாபு.K |
சுயேச்சை |
112 |
9 |
பெரியசாமி.P |
சுயேச்சை |
202 |
10 |
மனோகர்.P |
சுயேச்சை |
174 |
11 |
மனோகர்.G |
சுயேச்சை |
132 |
12 |
பால்ராஜ்.O |
சுயேச்சை |
130 |
13 |
காந்தி.R |
சுயேச்சை |
95 |
14 |
காமாட்சி.K |
சுயேச்சை |
91 |
151439 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT