Published : 11 Mar 2021 02:21 PM
Last Updated : 11 Mar 2021 02:21 PM

166 - திருத்துறைப்பூண்டி (தனி)

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சுரேஷ்குமார் அதிமுக
மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) திமுக
எஸ்.ரஜனிகாந்த் அமமுக
பாரிவேந்தன் மக்கள் நீதி மய்யம்
அ.ஆர்த்தி நாம் தமிழர் கட்சி

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில்உள்ள திருத்துறைப்பூண்டிசட்டப்பேரவைத் தொகுதி, பெருமளவு விவசாயதொழிலாளர்களை கொண்டது. முத்துப்பேட்டை மற்றும் கடல்பகுதியை ஒட்டிமீனவர்களும் வசித்து வருகிறார்கள்.உலக அளவில்சிறப்புபெற்ற அலையாத்திக் காடுகள் இத்தொகுதியில் உள்ள முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது. மேலும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்கோவில் புகழ்மிக்க ஜாம்புவானோடை தர்கா உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் இத்தொகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. இத்தொகுதிக்கு தெற்கே வங்ககடல் அமைந்துள்ளது.

இத்தொகுதியில் பதினோரு முறை இந்தியகம்யூனிஸ்ட் கட்சியும் இரண்டு முறை திமுகவும்வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம்தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் முதன்மையானது என பெயர் பெற்றதாகும்.

இத்தொகுதியில் 1,17, 209 ஆண்கள்,1,21,924 பெண்கள், மூன்றாம்பாலினத்தவர் 3 பேர் என, 2,39,136 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆதிதிராவிடர், அகமுடையர், முத்தரையர் வெள்ளாளர் ,நாயுடு, செட்டியார் இஸ்லாமியர் சமூகத்தினர் பரவலாக இத்தொகுதியில்உள்ளனர்

சிறப்பம்சங்கள்:

இங்கு ஏழை எளிய மற்றும் பாமர மக்கள் அதிகமாக வசித்து வருவதால் மாணவர்களுக்கு மேல்படிப்பிற்கு பாரதிதாசன் உறுப்பு கல்லூரியை கொண்டு வரப்பட்டது. கொருக்கையில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருத்துறைப்பூண்டி வட்டம்

மன்னார்குடி வட்டம் (பகுதி)

ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.

தொகுதி பிரச்சினைகள்

திருத்துறைப்பூண்டி நகரத்தில்நிலவும் போக்குவரத்துநெரிசலை தவிர்க்கநாகை, திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் புறவழிச்சாலை திட்டம்செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு தடையாக உள்ளபிறவி மருந்தீஸ்வரர்கோவில் நிலம்தொடர்பான பிரச்சினைக்குஉரிய தீர்வுகாணப்பட வேண்டும்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதையில் கேட்கீப்பர்கள் நியமனம் செய்வதோடு ஏற்கனவே இயங்கிவந்த எக்ஸ்பிரஸ்ரயில் மற்றும்பயணிகள் ரயிலைதிருத்துறைப்பூண்டியிலிருந்து இயக்க வேண்டும், முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும், தேங்காய் நார்மற்றும் வைக்கோலைமூலப் பொருட்களாகக்கொண்டு தயாரிக்கப்படும்தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது இப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி- காரைக்குடி ரயில் அகல பாதை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முத்துப்பேட்டை தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

விவசாயத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து தொழிலுக்காக கேராளா மற்றும் திருப்பூருக்கு செல்வதை தடுக்கும் வி்தத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்தப்படாமல் உள்ளது.

மழைக்காலங்களில் வெள்ளத் தடுப்புகளை ஏற்படுத்தும் வாய்க்கால்கள், ஆறுகளை சீரமைக்க நிரந்த தீர்வு காண வேண்டும்.

ஊராட்சி தோறும் நூலகம் வேண்டும் என கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இந்த சட்ட மன்றத்தில் வேளாண்மை கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இத்தொகுதியில் கடந்த சட்டப் பேரவைத்தேர்தலில் வெற்றிபெற்றதிமுக ஆடலரசன் 72127 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டஅதிமுக உமாமகேஸ்வரி 58877 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர்உலகநாதன் 33038 வாக்குகள் பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,17, 209

பெண்

1,21,924

மூன்றாம் பாலினத்தவர்

3

மொத்த வாக்காளர்கள்

2,39,136

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.உமாமகேஸ்வரி

அதிமுக

2

பி.ஆடலரசன்

திமுக

3

கே. உலகநாதன்

இந்திய கம்யூ

4

எஸ்.ராஜ்மோகன்

பாமக

5

ஜி. உதயகுமார்

பாஜக

6

ஜெ.எஸ்.சரவணகுமார்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1957

வி. வேதய்யன்

காங்கிரஸ்

54049

1962

எ. கே. சுப்பையா

இந்திய பொதுவுடமைக் கட்சி

45148

1967

என். தர்மலிங்கம்

திமுக

23728

1971

சி. மணலி கந்தசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

40714

1977

பி. உத்திராபதி

இந்திய பொதுவுடமைக் கட்சி

43208

1980

பி. உத்திராபதி

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

62051

1984

பி. உத்திராபதி

இந்திய பொதுவுடமைக் கட்சி

59834

1989

ஜி. பழனிசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

49982

1991

ஜி. பழனிசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

62863

1996

ஜி. பழனிசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

79103

2001

ஜி. பழனிசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

73451

2006

கே. உலகானந்தன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

75371

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1957

எ. வேதரத்தினம்

காங்கிரஸ்

51168

1962

வி. வேதய்யன்

காங்கிரஸ்

35078

1967

கே. சி. மணலி

இந்திய பொதுவுடமைக் கட்சி

22226

1971

பி. சி. வேலாயுதம்

நிறுவன காங்கிரஸ்

17478

1977

என். குப்புசாமி

திமுக

24934

1980

வி. வேதய்யன்

காங்கிரஸ்

39345

1984

ஜெ. அருசுனன்

அதிமுக

49019

1989

என். குப்புசாமி

திமுக

41704

1991

வி. வேதய்யன்

காங்கிரஸ்

50797

1996

கே. கோபாலசாமி

காங்கிரஸ்

25415

2001

எம். பூங்குழலி

திமுக

48392

2006

எ. உமாதேவி

அதிமுக

52665

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. உலகநாதன்

சி.பி.ஐ

75371

2

A. உமாதேவி

அ.தி.மு.க

52665

3

K. மோகன்குமார்

தே.மு.தி.க

5918

4

P. சிவாசண்முகம்

பி.ஜே.பி

2546

5

M. ஜெயகுமார்

என்.சி.பி

844

6

N. ராஜேந்திரன்

பி.ஸ்.பி

497

137841

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. உலகநாதன்

சி.பி.ஐ

83399

2

P. செல்வதுரை

காங்கிரஸ்

61112

3

P. சிவசண்முகம்

பாஜக

3025

4

S. ராஜ்குமார்

சுயேச்சை

1981

5

S. சரவணன்

எல்.எஸ்.பி

1857

6

சிங்கபெருமாள்.

சுயேச்சை

1726

7

தாய். கந்தசாமி

பகுஜன்

1070

8

U. ராமசந்திரன்

சுயேச்சை

898

9

K. கருணாநிதி

சுயேச்சை

715

10

R. தேவதாஸ்

எம்.எம்.கே.ஏ

511

156292

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x