Published : 11 Mar 2021 02:22 PM
Last Updated : 11 Mar 2021 02:22 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பன்னீர்செல்வம் | அதிமுக |
பூண்டி. கலைவாணன் | திமுக |
எம்.ஏ.நஸிமா பானு | அமமுக |
கபில் அரசன் | மக்கள் நீதி மய்யம் |
இர.வினோதினி | நாம் தமிழர் கட்சி |
1997-ல் உருவாக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திருவாரூருக்கு, திருவாரூர் தியாகராஜர்கோவிலும், ஆழித்தேரும், திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்ததும் சிறப்பை சேர்க்கின்றன.
பசுவுக்கு நீதிசொன்ன மனுநிதிச்சோழனின் வரலாறு திருவாரூரின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றது. கமலாலயகுளம் திருவாரூரின் அடையாளமாகவுள்ளது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இதில் 1,23,401 ஆண் வாக்காளர்களும், 1,24,157 பெண் வாக்காளர்களும் 9 இதர வாக்காளர்களையும் சேர்த்து மொத்தம் 2,47,567 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் கூத்தாநல்லுர் நகராட்சி, திருவாரூர் ஒன்றியம், கொரடாச்சேரி போரூராட்சி, என பிரிக்கபட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருவாரூர் வட்டம்,
குடவாசல் வட்டம்(பகுதி)
காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள், கூத்தாநல்லூர் (நகராட்சி).
தொகுதியின் பிரச்சினைகள்
திமுக தொகுதி என்பதால் அதிமுக அரசு எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத் தலைநகரான திருவாரூரில் பேருந்துநிலையம், அரைவட்டச் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்ய தொழிற்சாலை வசதி செய்திடல் வேண்டுமென்ற பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
இத்தொகுதியில் 1971 தேர்தலுக்குப்பிறகு திமுக 8 முறையும், 4 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிபெற்றுள்ளது. 2011,2016 தேர்தல்களில் மறைந்த முன்னாள்முதல்வர் திமுகதலைவர் மு.கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப்பின்னர் 2018ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகமாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் 64570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். திமுக கலைவாணன் பெற்ற வாக்குகள் 117615, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜீவானந்தம் 53045 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,23,401 |
பெண் |
1,24,157 |
மூன்றாம் பாலினத்தவர் |
9 |
மொத்த வாக்காளர்கள் |
2,47,567 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் |
அதிமுக |
2 |
மு.கருணாநிதி |
திமுக |
3 |
பி.எஸ்.மாசிலாமணி |
இந்திய கம்யூ |
4 |
ஆர். சிவக்குமார் |
பாமக |
5 |
என். ரெங்கதாஸ் |
பாஜக |
6 |
தென்றல் சந்திரசேகரன் |
நாம் தமிழர் |
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு |
வெற்றிபெற்றவர் |
கட்சி |
2011 |
மு.கருணாநிதி |
திமுக |
2006 |
உ. மதிவாணன் |
திமுக |
2001 |
A.அசோகன் |
திமுக |
1996 |
A.அசோகன் |
திமுக |
1991 |
V.தம்புசாமி |
இ.கம்யூ |
1989 |
V.தம்புசாமி |
இ.கம்யூ |
1984 |
M.செல்லமுத்து |
இ.கம்யூ |
1980 |
M.செல்லமுத்து |
இ.கம்யூ |
1977 |
தாழை மு.கருணாநிதி |
திமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
U. மதிவாணன் |
தி.மு.க |
76901 |
2 |
A. தங்கமணி |
அ.தி.மு.க |
49968 |
3 |
N. மோகன்குமார் |
தே.மு.தி.க |
5198 |
4 |
A. கணேசன் |
பி.ஜே.பி |
848 |
5 |
A.P. வீரமணி |
சுயேச்சை |
780 |
6 |
R. ராமலிங்கம் |
சுயேச்சை |
639 |
7 |
S. ராஜபாண்டியன் |
பி.எஸ்.பி |
625 |
8 |
K. குமார் |
சுயேச்சை |
503 |
135462 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
மு.கருணாநிதி |
தி.மு.க |
109014 |
2 |
M. ராஜேந்திரன் |
அ.தி.மு.க |
58765 |
3 |
P.N. ஸ்ரீராமசந்திரன் |
சுயேச்சை |
1741 |
4 |
R. பிங்கலன் |
பா ஜ க |
1263 |
5 |
S. முத்தரசன் |
சுயேச்சை |
737 |
6 |
R. ரமேஷ்குமார் |
ஐஜேகே |
357 |
7 |
K.R.. ராமசாமி என்ற் டிராபிக் ராமசாமி |
சுயேச்சை |
351 |
8 |
சிவ. இளங்கோ |
எம்.எஸ்.கே |
281 |
9 |
M. தோதைசெல்வம் |
சுயேச்சை |
255 |
10 |
T. ஜெயராமன் |
பகுஜன் சமாஜ் கட்சி |
189 |
11 |
T. அன்பழகன் |
சுயேச்சை |
111 |
12 |
S. அனந்தராஜ் |
சுயேச்சை |
95 |
173159 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT