Published : 11 Mar 2021 02:16 PM
Last Updated : 11 Mar 2021 02:16 PM

63 - திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
தணிகைவேல் (பாஜக) அதிமுக
எ.வ.வேலு திமுக
ஏ.ஜி.பஞ்சாட்சரம் அமமுக
அருள் மக்கள் நீதி மய்யம்
ஜெ.கமலக்கண்ணன் நாம் தமிழர் கட்சி

நினைக்க முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக அண்ணாமலையார் கோயில் உள்ளது. 14 கி.மீ., தொலைவு உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவல பாதையில் ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், சேஷாத்திரி ஆசிரமம் மற்றும் கோயில்கள் நிறைந்து இருக்கிறது.

உலக மாதா தேவாலயம், மண்டித் தெரு பெரிய மசூதி ஆகியவை புகழ்பெற்றவை. திருவண்ணாமலை நகரில் முதலியார், வன்னியர், யாதவர், ஆதிதிராவிடர்கள் கணிசமாக உள்ளனர். பின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.

வெளிநாட்டினர் வருகை அதிகம் இருப்பதால், நட்சத்திர உணவகங்கள் மற்றும் விடுதிகள் ஏராளம். நகர பகுதியில் வியாபாரிகளும், கிராம பகுதியில் விவசாயிகளும் அதிகம் வசிக்கின்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

செங்கம் வட்டம் (பகுதி)

மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.

திருவண்ணாமலை வட்டம் (பகுதி)

சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.

திருவண்ணாமலை (நகராட்சி).

தொகுதி மக்கள் கோரிக்கைகள்

நீண்டக்கால கோரிக்கைகளாக, மூடக்கப்பட்ட மணிலா எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை - சென்னை இடையே முடங்கிபோன ரயில் சேவையை தொடங்க வேண்டும். தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும்.

அண்ணாமலையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து கிடக்கும் 365 குளங்களை மீட்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் உள்ள குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்க வேண்டும். சிப்காட் அமைத்து கொடுக்க வேண்டும். திருவண்ணாமலையில் தற்போது உள்ள மத்திய பேருந்து நிலையம் இட நெருக்கடியில் தவிப்பதால், வேறு இடத்தில் பேருந்து நிலையம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

திருவண்ணாமலை சட்டபேரவை தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 15 தேர்தலில் திமுக 9 முறையும் மற்றும் காங்கிரஸ் கட்சி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் ஒரு முறை கூட அதிமுகவின் இரட்டை இலை துளிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜனை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,37,856

பெண்

1,46,956

மூன்றாம் பாலினத்தவர்

39

மொத்த வாக்காளர்கள்

2,84,851

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே. ராஜன்

அதிமுக

2

எ.வ.வேலு

தி.மு.க

3

எஸ்.மணிகண்டன்

தேமுதிக

4

இல.பாண்டியன்

பாமக

5

கு.வெங்கடாஜலபதி

பாஜக

6

ஜெ.கமலக்கண்ணன்

நாம் தமிழர்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

இராமச்சந்திர ரெட்டியார்

காங்கிரஸ்

21579

1957

பி. யு. சண்முகம்

சுயேச்சை

48447

1962

பி. பழனி பிள்ளை

காங்கிரஸ்

35148

1967

டி. விஜயராஜ்

காங்கிரஸ்

38153

1971

பி. யு. சண்முகம்

திமுக

46633

1977

பி. யு. சண்முகம்

திமுக

27148

1980

கே. நாராயணசாமி

காங்கிரஸ்

54437

1984

எ. எஸ். இரவீந்திரன்

காங்கிரஸ்

49782

1989

கே. பிச்சாண்டி

திமுக

57556

1991

வி. கண்ணன்

காங்கிரஸ்

67034

1996

கே. பிச்சாண்டி

திமுக

83731

2001

கே. பிச்சாண்டி

திமுக

64115

2006

கே. பிச்சாண்டி

திமுக

74773

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

தங்கவேலு

காங்கிரஸ்

18895

1957

சி. சந்தானம்

சுயேச்சை

39622

1962

பி. யு. சண்முகம்

திமுக

33399

1967

பி. யு. சண்முகம்

திமுக

34968

1971

டி. அண்ணாமலை பிள்ளை

ஸ்தாபன காங்கிரஸ்

28323

1977

டி. பட்டுசாமி

காங்கிரசு

25786

1980

பி. யு. சண்முகம்

அதிமுக

36052

1984

எஸ். முருகையன்

திமுக

44409

1989

எ. எஸ். இரவீந்திரன்

காங்கிரசு

23154

1991

கே. பிச்சாண்டி

திமுக

38115

1996

எ. அருணாச்சலம்

காங்கிரஸ்

30753

2001

எம். சண்முகசுந்தரம்

பாமக

60025

2006

வி. பவன்குமார்

அதிமுக

61970

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. பிச்சாண்டி

தி.மு.க

74773

2

V. பவன் குமார்

அ.தி.மு.க

61970

3

S.குமாரன்

தே.மு.தி.க

6660

4

G. நாரயணா காந்தி

பி.ஜே.பி

1635

5

A. கலிங்கன்

எஸ்.பி

1289

6

E. பிச்சாண்டி

சுயேச்சை

889

7

M. முருகன்

சுயேச்சை

622

8

S. ரமேஷ்

சுயேச்சை

619

9

N. பாஸ்கரன்

சுயேச்சை

320

10

M. எழில்மாறன்

சுயேச்சை

212

11

A. ஆறுமுகம்

சுயேச்சை

212

12

K. தங்கவேலு

சுயேச்சை

179

13

P. கிருஷ்ணமூர்த்தி

சுயேச்சை

140

14

M. சரவணன்

சுயேச்சை

138

15

K. சுப்பிரமணி

சுயேச்சை

120

16

P. சசிகுமார்

சுயேச்சை

115

149893

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

E.V. வேலு

தி.மு.க

84802

2

S.ராமசந்திரன்

அ.தி.மு.க

79676

3

A. அர்ஜுனன்

பி.ஜே.பி

1519

4

S. சதாசிவராஜா

சுயேச்சை

1186

5

S. ராஜி

பி.எஸ்.பி

955

6

K.I. தெய்வீகன்

ஐ.ஜே.கே

810

7

A. நாராயணன்

சுயேச்சை

691

8

A. வேலு

சுயேச்சை

518

9

M. வேலு

சுயேச்சை

514

10

G. செல்வம்

சுயேச்சை

250

11

K.பழனிவேல்

சுயேச்சை

250

12

J. செந்தில்

சுயேச்சை

130

13

S. ஏசுதுரை

சுயேச்சை

112

14

K. சுரேஷ்

சுயேச்சை

103

15

E. கணேஷ்

சுயேச்சை

85

16

B. கோதண்டபானி

சுயேச்சை

78

171679

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x