Published : 03 Mar 2021 07:16 PM
Last Updated : 03 Mar 2021 07:16 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
பிரகாஷ் (பாமக) | அதிமுக |
டி.ஜெ.கோவிந்தராஜன் | திமுக |
கே.எம்.டில்லி | அமமுக |
வி.சரவணன் | மக்கள் நீதி மய்யம் |
உ.உஷா | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாக விளங்குகிறது கும்மிடிப்பூண்டி தொகுதி. இத்தொகுதியில், இருமுறை வென்ற திமுகவைச் சேர்ந்த கே. வேழவேந்தன் தொழிலாளர் நலத் துறை அமைச்சராகவும், ஒரு முறை வென்ற அதிமுகவைச் சேர்ந்த கே.சுதர்சனம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியின் எல்லைகளாக,பொன்னேரி, திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஆந்திர பகுதிகள் உள்ளன.
இத்தொகுதியில், புகழ்பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன்கோயில், சென்னைக்குடிநீருக்கான புதிய நீர்த்தேக்கமான கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், பல தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்காலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளன.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த தொகுதியில், நெல்லுக்கு அடுத்தப்படியாக காய்கறி மற்றும் கீரை வகைகள், பூக்கள் கணிசமாக விளைவிக்கப்படுகின்றன.
வன்னியர், தலித் மக்கள் கணிசமாக வசிக்கும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் சிறுபான்மை மொழியான தெலுங்கு மொழி பேசும் நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மற்றும் நிலத்தடி நீரில் அதிக மாசு, கும்மிடிப்பூண்டியின் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் தமிழக அரசின் அம்மா குடிநீர் உற்பத்தி மையம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
கும்மிடிப்பூண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, நிரந்தரமான நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை.
இத்தொகுதியில் 1957 முதல் 2016 வரை (ஒரு இடைத்தேர்தல் உட்பட) நடந்த 15 தேர்தல்களில், 8 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், ஒரு முறை சுதந்திரா கட்சியும், ஒரு முறை காங்கிரஸும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன.
இதில், 2016- ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். விஜயகுமார் 89 ஆயிரத்து, 332 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் 65 ஆயிரத்து, 937 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
கடந்த 1957 முதல் 2011 வரை ( ஒரு இடைத்தேர்தல் உட்பட) நடந்த 14 தேர்தல்களில், 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், ஒரு முறை சுதந்திரா கட்சியும், ஒரு முறை காங்கிரஸும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக வேட்பாளர் சி.எச். சேகர் 97,708 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.என். சேகர் 68, 452 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வாக்காளர்கள் விபரம்:
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,34, 135 |
பெண் |
1,40,153 |
மூன்றாம் பாலினித்தவர் |
34 |
மொத்த வாக்காளர்கள் |
2,74,322 |
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
கே.எஸ்.விஜயகுமார் |
அதிமுக |
2 |
சி.எச். சேகர் |
மக்கள் தேமுதிக |
3 |
கே.கீதா |
தேமுதிக |
4 |
எம்.செல்வராஜ் |
பாமக |
5 |
எம்.பாஸ்கரன் |
பாஜக |
6 |
ச.சுரேஷ்குமார் |
நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள்: 2 கும்மிடிப்பூண்டி - 15 வார்டுகள் ஊத்துக்கோட்டை } 15 வார்டுகள் கிராம ஊராட்சிகள்: 131
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் (61): அன்னநாயக்கன் குப்பம், ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், பூதூர், செதில்பாக்கம், ஏடூர், எகுமதுரை, ஈகுவார்பாளையம், எளாவூர், ஏனாதி மேல்பாக்கம், எருக்குவாய், கெட்ணமல்லி, குருவராஜ கண்டிகை, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, காரணி, கீழ்முதலம்பேடு, கொள்ளானூர், குருவாட்டுச்சேரி, மாநெல்லூர், மாதர்பாக்கம், மங்களம், மங்காவரம், மெதிப்பாளையம், மேலக்கழனி, மேல்முதம்பேடு, முக்கரம்பாக்கம், நரசிங்கபுரம், நத்தம், நெல்வாய், நேமளூர், ஓபசமுத்திரம், பாதிரிவேடு, பாலவாக்கம், பல்லவாடா, பன்பாக்கம், பாத்தபாளையம், பெத்திகுப்பம், பெரிய ஓபுளாபுரம், பெரியபுலியூர், பெருவாயல், போந்தவாக்கம், பூவலை, பூவலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, புதுப்பாளையம், புதுவாயல், ரெட்டம்பேடு, சாணாபுத்தூர், சித்திராஜ கண்டிகை, சிறுபழல்பேட்டை, சிறுவாடா, சூரப்பூண்டி, சுண்ணாம்புகுளம், தண்டலசேரி, தேர்வழி, தேர்வாய், தோக்கமூர், வழுதிலம்பேடு, கரடிபுத்தூர்.
எல்லாபுரம் ஒன்றியம் (43): 43 பனப்பாக்கம், 82 பனப்பாக்கம், அக்கரம்பாக்கம், ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், அமிர்தாநல்லூர், அத்திகாவனூர், அத்திவாக்கம், ஆத்துப்பாக்கம், ஏனாம்பாக்கம், கல்பட்டு, கன்னிகைபேர், கிளாம்பாக்கம், குமரப்பேட்டை(ரால்லபாடி), லட்சிவாக்கம், மதுரவாசல், மாலந்தூர்,மாம்பள்ளம், மஞ்சங்காரணி, நெய்வேலி, பாகல்மேடு, பாலவாக்கம், பனையஞ்சேரி, பேரண்டூர், பெரியபாளையம், பெருமுடிவாக்கம், பூச்சி அத்திப்பேடு, பூரிவாக்கம், புன்னப்பாக்கம், செங்கரை, செஞ்சிஅகரம், சென்னாங்கரணி, சூளைமேனி, தாமரைகுப்பம், தண்டலம், தாராட்சி, திருகண்டலம், திருநிலை, தொளவேடு, தும்பாக்கம், வடமதுரை, வண்ணான்குப்பம், காக்கவாக்கம்.
பூண்டி ஒன்றியம் (27): பென்னாலூர்பேட்டை, ராமலிங்காபுரம், வேலம்மா கண்டிகை, மேலகரமனூர், நந்திமங்கலம், போந்தவாக்கம், அனந்தேரி, பெருதிவாக்கம், மாம்பாக்கம், பெருஞ்சேரி, கச்சூர், கூனிபாளையம், திம்மபூபாளபுரம், வெள்ளாத்தூர் கோட்டை, நெல்வாய், அம்மம்பாக்கம், சோமதேவன்பட்டு, வேலகாபுரம், மாமண்டூர், தேவாந்தவாக்கம், மயிலாப்பூர், நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஓதப்பை, மெய்யூர்,கம்மவார்பாளையம்,ஆலப்பாக்கம்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், சுதந்திரக் கட்சி, காங்கிரஸ், தேமுதிக ஆகியவை தலா 1 முறையும், வெற்றி பெற்றுள்ளது
இந்த தொகுதியில், 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக வேட்பாளர் சி.சேகர் 97,708 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாமகவைச் சேர்ந்த கே.சேகர் 68,452 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1957 |
கமலாம்பாள் |
காங்கிரஸ் |
9002 |
26.7 |
1962 |
எ. இராகவ ரெட்டி |
சுதந்திரா கட்சி |
19575 |
46.5 |
1967 |
கே. வேழவேந்தன் |
திமுக |
35887 |
52.57 |
1971 |
கே. வேழவேந்தன் |
திமுக |
43355 |
58.41 |
1977 |
ஆர் எஸ். முனிரத்தினம் |
அதிமுக |
32309 |
42.26 |
1980 |
ஆர் எஸ். முனிரத்தினம் |
அதிமுக |
41845 |
49.01 |
1984 |
ஆர் எஸ். முனிரத்தினம் |
அதிமுக |
55221 |
55.56 |
1989 |
கே. வேணு |
திமுக |
36803 |
37.33 |
1991 |
ஆர். சக்குபாய் |
அதிமுக |
61063 |
54.77 |
1996 |
கே. வேணு |
திமுக |
61946 |
49.69 |
2001 |
கே. சுதர்சனம் |
அதிமுக |
73467 |
56.07 |
2006 |
கே.எஸ். விஜயகுமார் |
அதிமுக |
63147 |
--- |
2011 |
சி.எச். சேகர் |
தேமுதிக |
97708 |
-- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1957 |
வேணுகோபால் ரெட்டி |
சுயேச்சை |
8908 |
26.42 |
1962 |
கே. கமலம் அம்மாள் |
காங்கிரசு |
18946 |
45.01 |
1967 |
கே. கமலம் அம்மாள் |
காங்கிரசு |
31527 |
46.19 |
1971 |
பி. ரெட்டி |
நிறுவன காங்கிரசு |
30875 |
41.59 |
1977 |
கமலம் அம்மாள் |
ஜனதா கட்சி |
21042 |
27.52 |
1980 |
கே. வேணு |
திமுக |
34019 |
39.84 |
1984 |
கே. வேழவேந்தன் |
திமுக |
43174 |
43.44 |
1989 |
கே. கோபால் |
அதிமுக (ஜெ) |
33273 |
33.75 |
1991 |
கே. வேணு |
திமுக |
28144 |
25.24 |
1996 |
ஆர் எஸ். முனிரத்தினம் |
அதிமுக |
40321 |
32.34 |
2001 |
கே. வேணு |
திமுக |
48509 |
37.02 |
2006 |
துரை ஜெயவேலு |
பாமக |
62918 |
--- |
2011 |
கே. சேகர் |
பாமக |
68452 |
-- |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
விஜயகுமார்.கே.எஸ் |
அதிமுக |
63147 |
2 |
துரைஜெயவேலு |
பாமக |
62918 |
3 |
சி.ஹெச்.சேகர் |
தேமுதிக |
21738 |
4 |
ஆர்.சேகர் |
சுயேச்சை |
2147 |
5 |
கே.சேகர் |
எஸ் பி |
1096 |
6 |
முருகேசன்.டி |
சுயேச்சை |
779 |
7 |
வெங்கடேசன்.பி. |
சுயேச்சை |
762 |
8 |
நரசையா .எல் |
பிஜேபி |
662 |
9 |
முஹமது யூசுப்.ஏ |
என் சி பி |
635 |
10 |
அலெக்சாண்டர்.ஏ |
பி எஸ் பி |
567 |
11 |
பத்தின்னையா |
சுயேச்சை |
511 |
12 |
சேகர்.கே.சி. |
சுயேச்சை |
415 |
13 |
பரசுராமன்.ஆர். |
தி என்ஜேசி |
266 |
14 |
ரகுபதி.ஜி |
சுயேச்சை |
226 |
15 |
சுந்தராம நாயுடு.டி. |
சுயேச்சை |
216 |
16 |
கோபால்.ஜி |
சுயேச்சை |
178 |
156263 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசைஎண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
C H சேகர் |
தே முதி க |
97708 |
2 |
K N சேகர் |
பா ம க |
68452 |
3 |
R. செல்வகுமார் |
சுயேச்சை |
1892 |
4 |
சக்கரவர்த்தி KR ஸ்ரீராமன் B |
பா ஜ க |
1883 |
5 |
G.முனி கிருஷ்ணன் |
ஜே எம் எம் |
1836 |
6 |
N . வேலு |
சுயேச்சை |
1462 |
7 |
G. அசோகன் |
பு பா |
1425 |
8 |
ராஜா ஏ.எம். |
சுயேச்சை |
1114 |
9 |
M. சுதாகர் |
குடியரசு |
1228 |
10 |
P.சண்முகம் |
சுயே |
997 |
11 |
D. ஸ்ரீ நிவாசன் |
பகுஜன் |
835 |
12 |
s .ஏழுமலை |
சுயே |
487 |
179616 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT