Published : 11 Mar 2021 01:34 PM
Last Updated : 11 Mar 2021 01:34 PM

10 - திருவொற்றியூர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மு. குப்பன் அதிமுக
கே.பி.சங்கர் திமுக
எம்.செளந்தரபாண்டியன் அமமுக
எஸ்.டி.மோகன் மக்கள் நீதி மய்யம்
செ.சீமான் நாம் தமிழர் கட்சி

திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட சென்னை மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகள் அடங்கியது. இத்தொகுதி, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன்(காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்) ஒரு முறையும், மறைந்த முன்னாள் மீன் வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி இரு முறையும் வென்ற தொகுதியாகும்.

இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 522 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 48ஆயிரத்து 961 பெண் வாக்காளர்கள், 135 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.

மாதவரம் தொகுதியில் பிரசித்திப் பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், சென்னை உரத் தொழிற்சாலை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

இத்தொகுதியில் மீன்பிடித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. திருவொற்றியூர் தொகுதியில், நாடார், மீனவர், முதலியார் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.

திருவொற்றியூர் தொகுதியில் சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கண்டய்னர் லாரிகளால் திருவொற்றியூர் கடற்கரை சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை ஆகியவற்றில் எந்நேரமும் தொடரும் போக்குவரத்து நெரிசல், 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் முடிவுறாதது, மணலி பகுதியில் செயல்படும் உரத் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு என, முக்கிய பிரச்சினைகள் நீள்கின்றன.

திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 1967 முதல் 2016 வரை நடந்த 12 தேர்தல்களில், 6 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸும், ஒரு முறை காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக வேட்பாளர்( மறைந்த முன்னாள் மீன் வளத் துறை அமைச்சர்) கே.கே.பி.சாமி 82 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பால்ராஜ் 77 ஆயிரத்து 342 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,45,522

பெண்

1,48,961

மூன்றாம் பாலினத்தவர்

135

மொத்த வாக்காளர்கள்

2,94,618

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.பால்ராஜ்

அதிமுக

2

கே.பி.பி.சாமி

திமுக

3

எ.வி.ஆறுமுகம்

தேமுதிக

4

ர.வசந்தகுமாரி

பாமக

5

மு.சிவகுமார்

பாஜக

6

ர.கோகுல்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

அம்பத்தூர் வட்டம்

கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1967

எ. பி. அரசு

திமுக

51437

61.23

1971

எம். வி. நாராயணசாமி

திமுக

51487

53.74

1977

பி. சிகாமணி

அதிமுக

26458

31.29

1980

குமரி ஆனந்தன்

காந்தி காமராசு தேசிய காங்கிரசு

48451

47.36

1984

ஜி. கே. ஜெ. பாரதி

காங்கிரசு

65194

54.26

1989

டி. கே. பழனிசாமி

திமுக

67849

45.53

1991

கே. குப்பன்

அதிமுக

85823

56.54

1996

டி. சி. விசயன்

திமுக

115939

64.19

2001

டி. ஆறுமுகம்

அதிமுக

113808

54.94

2006

கே. பி. பி. சாமி

திமுக

158204

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1967

வி. வெங்கடேசுவரலு

காங்கிரஸ்

32564

38.77

1971

வெங்கடேசுவரலு நாயுடு

நிறுவன காங்கிரசு

35391

36.94

1977

எம். வி. நாராயணசாமி

திமுக

23995

28.37

1980

டி. லோகநாதன்

காங்கிரஸ்

44993

43.98

1984

டி. கே. பழனிசாமி

திமுக

53684

44.68

1989

ஜெ. இராமச்சந்திரன்

அதிமுக (ஜெ)

46777

31.42

1991

டி. கே. பழனிசாமி

திமுக

58501

38.54

1996

பி. பால்ராசு

அதிமுக

40917

22.65

2001

குமரி அனந்தன்

சுயேச்சை

79767

38.5

2006

வி. மூர்த்தி

அதிமுக

154757

---

2006 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.P.P. சாமி

திமுக

158204

2

மூர்த்தி

அதிமுக

154757

3

முருகன்

தேமுதிக

21915

4

கணேசன்

பிஜேபி

2977

5

புவனேஸ்வரன்

சுயேச்சை

1053

6

சண்முகம்

சுயேச்சை

760

7

ராஜேந்திரன்

பா பி

603

8

சுரேஷ்

சுயேச்சை

453

9

ராஜேந்திரன் .N

சுயேச்சை

257

10

ராஜேந்திரன் V .S

சுயேச்சை

234

11

அருள்தாஸ்

சுயேச்சை

189

341402

2011 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

குப்பன்.கே

அதிமுக

93944

2

K.P.P. சாமி

திமுக

66653

3

வேங்கடகிருஷ்ணன்

பிஜேபி

1719

4

பாண்டியன்

சுயேச்சை

649

5

சுரேஷ்

பி எஸ் பி

464

6

உடையார்

ஜே எம் எம்

343

7

தணிகாசலம்

சுயேச்சை

252

8

ஜான்சன்

பு பா

197

9

குப்பன்.கே

சுயேச்சை

172

10

குப்பன்.டி

சுயேச்சை

164

11

செல்வராஜ்குமார்

சுயேச்சை

159

164716

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x