Published : 11 Mar 2021 02:19 PM
Last Updated : 11 Mar 2021 02:19 PM

4 - திருவள்ளூர்

சென்னைக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பி.வி. ரமணா அதிமுக
வி.ஜி.ராஜேந்திரன் திமுக
என்.குரு அமமுக
பெ.பசுபதி நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி, மாவட்ட தலைநகரான திருவள்ளூர், திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி மற்றும் திருத்தணி வட்டத்தின் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கியது. இத்தொகுதியில் வென்ற அதிமுகவைச் சேர்ந்த பி.வி.ரமணா, வணிக வரித் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என, திருவள்ளூர் தொகுதியின் எல்லைகள் அமைந்துள்ளன. இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 92 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 620 பெண் வாக்காளர்கள், 22 இதர வாக்காளர்கள் என, மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.

108 வைணவ தலங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோயில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம் உள்ளிட்டவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி.

அதுமட்டுமல்லாமல், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சென்னையின் குடிநீர் தேவையை கணிசமாக தீர்க்கக் கூடிய பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவையும் இத்தொகுதியில்தான் உள்ளது.


கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள திருவள்ளூர் தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயமே திகழ்கிறது.

இத்தொகுதியில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராதது முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மேலும்,மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும், பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக ஆக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக கோரிக்கைகளாகவே தொடர்ந்து வருகிறது என தொகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் தொகுதியில் கடந்த 1951 முதல் 2016 வரை நடந்த 15 தேர்தல்களில், 6 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை தமாகாவும், ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் 80 ஆயிரத்து,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அ.பாஸ்கரன் 75 ஆயிரத்து, 335 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,30,092

பெண்

1,36,620

மூன்றாம் பாலினித்தவர்

22

மொத்த வாக்காளர்கள்

2,66,734

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

அ.பாஸ்கரன்

அதிமுக

2

வி.ஜி.ராஜேந்திரன்

திமுக

3

அ.பாலசுப்பிரமணி

விசிக

4

வ.பாலயோகி

பாமக

5

கி.சீனிவாசன்

(இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்- பாஜக)

6

கு.செந்தில்குமார்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

திருத்தணி வட்டம்

அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.

திருவள்ளூர் வட்டம்

அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.

திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

திருவள்ளூர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எம். தர்மலிங்கம்

கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி

32599

26.65

1957

ஏகாம்பர முதலியார்

காங்கிரஸ்

40214

33.72

1962

வி. எஸ். அருணாச்சலம்

காங்கிரஸ்

21609

50.19

1967

எஸ். எம். துரைராஜ்

திமுக

40687

66.06

1971

எஸ். எம். துரைராஜ்

திமுக

36496

62.81

1977

எஸ். பட்டாபிராமன்

அதிமுக

30670

45.38

1980

எஸ். பட்டாபிராமன்

அதிமுக

30121

41.49

1984

எஸ். பட்டாபிராமன்

அதிமுக

44461

51.73

1989

எஸ். ஆர். முனிரத்தினம்

திமுக

45091

47.18

1991

சக்குபாய் தேவராஜ்

அதிமுக

54267

56.91

1996

சுப்பரமணி என்கிற சி. எஸ். மணி

திமுக

65432

60.78

2001

டி. சுதர்சனம்

தமாகா

47899

42.9

2006

இ. ஏ. பி. சிவாஜி

திமுக

64378

---

2011

ரமணா பி.வி

அதிமுக

91337

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

வி. கோவிந்தசாமி நாயுடு

கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி

228462

23.26

1957

வி. எஸ். அருணாச்சலம்

காங்கிரசு

34689

29.09

1962

எஸ். எம். துரைராசு

திமுக

17175

39.89

1967

வி. எஸ். அருணாச்சலம்

காங்கிரசு

19030

30.9

1971

வி. எஸ். அருணாச்சலம்

நிறுவன காங்கிரசு

17759

30.56

1977

முனிரத்தினம் நாயுடு

ஜனதா கட்சி

22368

33.09

1980

ஆர். புருசோத்தமன்

காங்கிரசு

24585

33.87

1984

எஸ். ஆர். முனிரத்தினம்

திமுக

39908

46.43

1989

எம். செல்வராஜ்

அதிமுக (ஜெ)

22852

23.91

1991

சி. சுப்பரமணி

திமுக

27847

29.2

1996

ஜி. கனகுராஜ்

அதிமுக

32178

29.89

2001

வி. ஜி. இராசேந்திரன்

புதிய நீதி கட்சி

27948

25.03

2006

பி. இரமணா

அதிமுக

55454

2011

இ.ஏ.பி.சிவாஜி

திமுக

67689

---

2006 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

இ.ஏ.பி.சிவாஜி

திமுக

64378

2

B.ரமணா

அதிமுக

55454

3

B.பார்த்தசாரதி

தேமுதிக

8048

4

S.ஜெகஜீவன்ராம்

சுயேச்சை

1413

5

R.S.வீரமணி

பிஜேபி

1092

6

M.வாசன்

சுயேச்சை

885

7

D.ஸ்ரீனிவாசன்

பிஎஸ்பி

722

8

S.சிதம்பரம்

சுயேச்சை

504

9

M.வெங்கடேசன்

சுயேச்சை

375

10

N.சூர்யகுமார்

எஸ் பி

232

11

L.மணி

சுயேச்சை

200

12

D.சகாரியா

சுயேச்சை

123

13

M.செந்தில் குமார்

எல்ஜேபி

122

14

V.அன்பு

சுயேச்சை

98

15

D.ராதாகிருஷ்ணன்

சுயேச்சை

86

133732

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி.வி.ரமணா

அதிமுக

91337

2

இஏபி.சிவாஜி

திமுக

67689

3

ஜேம்ஸ்.இ

பு பா

2220

4

ஆர்.எம்.ஆர்.ஜானகி ராமன்

பிஜேபி

1869

5

டி.ஏ.தெய்வசிகாமணி

ஆர்ஜேடி

1080

6

சாந்தகுமார்.வி

பிஎஸ்பி

1039

7

யு.பராச்சலம் .

சுயேச்சை

651

8

சி.தினகரன்

சுயேச்சை

496

9

ஜி.ராகவன்

சுயேச்சை

478

10

பி.சரவணன்

சுயேச்சை

423

11

என்.ஜெகன்

சுயேச்சை

415

12

சி.ஜெ.ஸ்ரீநிவாசன்

சுயேச்சை

381

13

டி.ஜெயகுமார்

சுயேச்சை

297

14

ஜி.ஜெயவேல்

சுயேச்சை

261

15

எஸ்.தேவாசீர்வாதம்

ஆர்பிஐ

238

16

சி.சுப்ரமணியன்

சுயேச்சை

231

17

வி.ராமன்

சுயேச்சை

227

18

பி.ரமேஷ்

சுயேச்சை

216

19

டி.இளங்கோவன்

சுயேச்சை

202

20

ஆர்.சக்திதாசன்

சுயேச்சை

133

21

இ.டி.சசிகுமார்

சுயேச்சை

120

22

பி.கோபால்

சுயேச்சை

112

11570

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x