Published : 11 Mar 2021 02:20 PM
Last Updated : 11 Mar 2021 02:20 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
திருத்தணி கோ.அரி | அதிமுக |
எஸ் .சந்திரன் | திமுக |
டி.கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக) | அமமுக |
தணிகைமலை (ஐஜேகே) | மக்கள் நீதி மய்யம் |
லி.அகிலா | நாம் தமிழர் கட்சி |
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று திருத்தணி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஆந்திர பகுதிக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு வந்த பகுதிதான் திருத்தணி.
திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆந்திர பகுதிகள் என திருத்தணி தொகுதியின் எல்லைகள் உள்ளன.
இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 741 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 206 பெண் வாக்காளர்கள், 27 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 974 வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இத்தொகுதியில், கரும்பு, நெல் மற்றும் பூக்கள், காய்கறிகள் சாகுபடி என தொடரும் விவசாயம் மற்றும் நெசவு தொழில்கள் திருத்தணி தொகுதியின் பிரதான தொழில்களாக விளங்குகின்றன. திருத்தணி தொகுதியில் வன்னியர், செங்குந்தர், தலித் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர்.
.வறண்ட மலைக்குன்றுகள் கணிசமாக உள்ள திருத்தணி தொகுதியில் ஆண்டுத் தோறும் கோடைக்காலங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது, நெசவு தொழிலாளர்களுக்கு கூலி நாளுக்கு நாள் குறைந்து வருவது ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராகவே உள்ளதால், பள்ளிப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும், ஜவுளி தொழில்பூங்கா மற்றும் தொழிற்பேட்டை அமைக்கவேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.
திருத்தணி தொகுதியில், 1951 முதல் 2016 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை சுயேட்சையும், ஒரு முறை பாமகவும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2016-ல் நடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் பி.எம்.நரசிம்மன் 93,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் 69,904 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,38,741 |
பெண் |
1,44,206 |
மூன்றாம் பாலினித்தவர் |
27 |
மொத்த வாக்காளர்கள் |
2,82,974 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
பி.எம்.நரசிம்மன் |
அதிமுக |
2 |
அ.கா. சிதம்பரம் |
காங்கிரஸ் |
3 |
டி. கிருஷ்ணமூர்த்தி |
தேமுதிக |
4 |
டாக்டர் அ.வைத்திலிங்கம் |
பாமக |
5 |
எம்.சக்ரவர்த்தி |
பாஜக |
6 |
சு.பிரபு |
நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பள்ளிப்பட்டு வட்டம் திருத்தணி வட்டம் தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
திருத்தணி சட்டமன்றத் தொகுதி கடந்த வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
எம். துரைக்கண்ணு |
காங்கிரசு |
24312 |
19.57 |
1962 |
சி. சிரஞ்சீவலு நாயுடு |
சுயேச்சை |
36884 |
50.51 |
1967 |
கே. வினாயகம் |
காங்கிரசு |
27123 |
40.34 |
1971 |
இ. எஸ். தியாகராசன் |
திமுக |
43436 |
61.72 |
1977 |
ஆர். சண்முகம் |
அதிமுக |
29070 |
43.68 |
1980 |
ஆர். சண்முகம் |
அதிமுக |
35845 |
49.6 |
1984 |
ஆர். சண்முகம் |
அதிமுக |
41669 |
50.48 |
1989 |
பி. நடராசன் |
திமுக |
35555 |
41.88 |
1991 |
இராசன்பாபு என்கிற தணிகை பாபு |
அதிமுக |
50037 |
53.2 |
1996 |
இ. ஏ. பி. சிவாஜி |
திமுக |
58049 |
53.9 |
2001 |
ஜி. இரவிராசு |
பாமக |
58549 |
50.01 |
2006 |
ஜி. ஹரி |
அதிமுக |
52871 |
--- |
2011 |
மு.அருண் சுப்பிரமணியம் |
தேமுதிக |
95918 |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
கிடம்பை வரதாச்சாரி |
காங்கிரஸ் |
21125 |
17 |
1962 |
இ. எஸ். தியாகராசன் |
காங்கிரஸ் |
34176 |
46.81 |
1967 |
வி. கே. குப்புசாமி |
திமுக |
25337 |
37.68 |
1971 |
எ. ஏகாம்பர ரெட்டி |
நிறுவன காங்கிரஸ் |
26938 |
38.28 |
1977 |
எ. பி. இராமச்சந்திரன் |
திமுக |
22 |
2.2 |
1980 |
டி. நமச்சிவாயம் |
காங்கிரஸ் |
25754 |
35.64 |
1984 |
சி. சிரஞ்சீவலு நாயுடு |
ஜனதா கட்சி |
37740 |
45.72 |
1989 |
முனு ஆதி |
அதிமுக (ஜெ) |
26432 |
31.14 |
1991 |
சி. சிரஞ்சீவலு நாயுடு |
ஜனதா தளம் |
27845 |
29.61 |
1996 |
ஜி. ஹரி |
அதிமுக |
28507 |
26.47 |
2001 |
இ. எ. பி. சிவாஜி |
திமுக |
44675 |
38.16 |
2006 |
ஜி. இரவிராசு |
பாமக |
51955 |
|
2011 |
டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், |
காங்கிரஸ் |
71988 |
--- |
1951 இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
1967இல் சுயேச்சை தேசப்பன் 14777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
1991 இல் பாமகவின் மூர்த்தி 12808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
1996 இல் பாமகவின் ஜி. ரவிராசு 12896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
2006 இல் தேமுதிகவின் சேகர் 11293 வாக்குகள் பெற்றார்.
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
ஜி.ஹரி |
அதிமுக |
52871 |
2 |
ஜி.இரவிராஜ் |
பாமக |
51955 |
3 |
ஆர். சேகர் |
தேமுதிக |
11293 |
4 |
டி.ராஜபாண்டியன் |
சுயேச்சை |
1965 |
5 |
பி.சிரஞ்சீவிலு |
பாஜக |
1051 |
6 |
ஜி.ரகு |
சுயேச்சை |
874 |
7 |
சி.ஹரி |
சுயேச்சை |
730 |
8 |
ஜெ.புருஷோத்தமன் |
சுயேச்சை |
499 |
9 |
ஜி.வி.ரவி |
சுயேச்சை |
343 |
10 |
ஜி.சதிஷ்குமார் |
சுயேச்சை |
326 |
11 |
டி.ஜெயராஜ் |
பகுஜன் |
303 |
12 |
ஜி.அற்புதம்மாள் |
சுயேச்சை |
172 |
13 |
ஆர்.கலைவண்ணன் |
சுயேச்சை |
156 |
14 |
தேவிகுமாரி |
சுயேச்சை |
149 |
122687 |
2011 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
M .அருண் சுப்ரமணியன் |
தேமுதிக |
95918 |
2 |
E.S.S. ரமணன் |
காங்கிரஸ் |
71988 |
3 |
A.K.சுப்பிரமணி |
ஜேஎம்எம் |
9760 |
4 |
S.ராம்பாய் |
சுயேச்சை |
3232 |
5 |
D.தாஸ் |
பிஎஸ்பி |
1859 |
6 |
M.ரமேஷ் குமார் |
சுயேச்சை |
1524 |
7 |
J.பாபு |
பிஜேபி |
1450 |
8 |
J. ரமேஷ் |
பு பா |
1296 |
9 |
N.D.சுரேஷ் பாபு |
சுயேச்சை |
1242 |
10 |
M.D.தனிகைமலை |
ஐஜேகே |
1135 |
11 |
எம்.சின்னப்பன் |
சுயேச்சை |
710 |
12 |
சேது |
சுயேச்சை |
591 |
13 |
M.சண்முகம் |
சுயேச்சை |
532 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT