Published : 11 Mar 2021 02:09 PM
Last Updated : 11 Mar 2021 02:09 PM

126 - மடத்துக்குளம்

திருமூர்த்தி அணை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மகேந்திரன் அதிமுக
ஜெயராமகிருஷ்ணன் திமுக
சி.சண்முகவேலு அமமுக
குமரேசன் கே மக்கள் நீதி மய்யம்
அ.சனுஜா நாம் தமிழர் கட்சி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான மடத்துக்குளம், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 126-வது இடத்தில் உள்ளது. திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. மேற்கண்ட இரு அணைகளும் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. மேற்கண்ட இரு நீர்தேக்கங்கள் மூலம், ஏறத்தாழ 4.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது.

வாழை, கரும்பு, நெல், தென்னை, தக்காளி, வெங்காயம், கீரை வகைகள், மக்காச்சோளம், வெற்றிலை, பட்டுக்கூடு உள்ளிட்டவை அதிகளவில் இங்குள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. 1952-ல் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான, பழமை வாய்ந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, எரிசாராய ஆலை ஆகியவையும் இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனைமலை புலிகள் காப்பத்துக்குட்பட்ட 18 மலைவாழ் கிராமங்கள் இத்தொகுதியில் உள்ளது. மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலங்கள் அமராவதி அணையின் பாசனத்தையே நம்பி உள்ளது.

மேற்கு பகுதியான உடுமலை ஒன்றிய பகுதிகள் முழுவதும் பரம்பிகுளம் ஆழியார் (பிஏபி) பாசனத்தை நம்பியே உள்ளது. தமிழகத்திலேயே அமராவதி நகரில் மட்டுமே மத்திய அரசின் ராணுவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது ,பழைய உடுமலை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதி உருவானது. உடுமலை ஒன்றிய பகுதியில் உள்ள 35 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

உடுமலைப்பேட்டை தாலுக்கா (பகுதி)

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெருயபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி,

அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்), கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி) மற்றும் கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்).

மடத்துக்குளம் தொகுதியில் கொங்கு வேளாளர்கள் 31 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் 22.84 சதவீதம் பேரும், கம்மவார், நாயுடு இன மக்கள் 11 சதவீதம் பேரும், இசுலாமியர், கிறிஸ்துவர் ஆகிய சிறுபான்மையின மக்கள் 8 சதவீதம் பேரும், இதர வகுப்பினர் 27 சதவீதம் பேரும் வசிக்கின்றனர். இந்த தொகுதிக்குட்பட்ட தளிஞ்சி, மாவடப்பு,கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் வாக்குச்சாவடிகளில் 1,602 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கொழுமம் ஆகிய கிராமப் பகுதிகள் உள்ளன. தவிர, உடுமலைப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெருயபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பளப்பட்டி, வடபூதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னபட்டி, தேவனூர்புதூர், ராவணாபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போகிக்கவுண்டந்தாசர்பட்டி, எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாலப்பட்டி, கிருஷ்ணாபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, கல்லாபுரம், , கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குரல்குட்டை, போடிபட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட
முக்கூடல் ஜல்லிப்பட்டி, வெனசப்பட்டி ஆகியவையும் உள்ளன. மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், சங்கராமநல்லூர், தளி ஆகிய பேரூராட்சிகளும் இங்கு உள்ளன.


இத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் :

திருமூர்த்தி, அமராவதி அணைகள் முழுமையாக தூர்வாரி, பாசன நிலங்களுக்கு தேவையான நீர் தடையின்றி கிடைக்கச் செய்திட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பழமை வாய்ந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும், சா்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் என்பது அந்த ஆலைத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இத் தொகுதிக்குட்பட்ட கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும், பொழுது போக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் ஏற்படுத்த வேண்டும். இங்குள்ளவர்களின் வசதிக்காக பல்துறை விளையாட்டுப் பூங்கா ஏற்படுத்த வேண்டும் என இத்தொகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெரிசல் இல்லாத வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப, சாலைகளை மேம்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது போன்றவை இந்தத் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம்.

ஆண் வாக்காளர்கள் --- 1,21,419
பெண் வாக்காளர்கள் ---- 1,26,189
3-ம் பாலின வாக்காளர்கள் --- 21
மொத்த வாக்காளர்கள் --- 2,47,629

இத்தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினரான சி.சண்முகவேலு ஏற்கனவே 2 முறை உடுமலை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். 2011-ல் குறைந்த காலம் மட்டுமே தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இத்தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டவர்கள் விவரம்:

இரா.ஜெயராமகிருஷ்ணன் – திமுக- 76,619- வெற்றி
கே.மனோகரன் – அதிமுக- 74,952.
ஏ.எஸ். மகேஸ்வரி- தமாகா- 6,208 .
ஏ.முத்துகுமார்- பாஜக- 2,619.
ஏ.ரவிச்சந்திரன் - பாமக- 2,443 .

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள்

2011-ம் ஆண்டு – சி. சண்முகவேலு- அதிமுக
2016-ம் ஆண்டு – இரா.ஜெயராமகிருஷ்ணன் – திமுக

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.மனோகரன்

அதிமுக

2

இரா.ஜெயராமகிருஷ்ணன்

திமுக

3

எ.எஸ்.மகேஸ்வரி

தமாகா

4

அ.ரவிச்சந்திரன்

பாமக

5

அ.முத்துக்குமார்

பாஜக இமகமுகழகம்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,548

பெண்

1,13,815

மூன்றாம் பாலினத்தவர்

14

மொத்த வாக்காளர்கள்

2,25,377

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சண்முகவேலு.C

அதிமுக

78622

2

சாமிநாதன்.M.P

திமுக

58953

3

வரதராஜன்.D

சுயேச்சை

1742

4

விஜயராகவன்.R

பாஜக

1166

5

நந்தகுமார்.P

சுயேச்சை

946

6

சடையப்பன்.S

சுயேச்சை

739

7

ராதாகிருஷ்ணன்.S

பகுஜன் சமாஜ் கட்சி

598

8

தங்கவேல்.N

சுயேச்சை

289

9

சுப்ரமணியம்.P

சுயேச்சை

289

10

சாமிநாதன்.T

சுயேச்சை

218

11

கந்தசாமி.M

சுயேச்சை

141

143703

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x