Published : 11 Mar 2021 02:10 PM
Last Updated : 11 Mar 2021 02:10 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
எல்.முருகன் (பாஜக) | அதிமுக |
கயல்விழி செல்வராஜ் | திமுக |
தாராபுரம் சி.கலாராணி | அமமுக |
சார்லி | மக்கள் நீதி மய்யம் |
க.ரஞ்சிதா | நாம் தமிழர் கட்சி |
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் முக்கியமானது தாராபுரம். இத்தொகுதி தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 101-வது இடத்தில் உள்ளது.
தவிர, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனித்தொகுதியாக இத்தொகுதி உள்ளது. அமராவதி அணையின் பாசனத்தை நம்பி, இத்தொகுதியின் பெரும்பாலான விவசாய நிலங்கள் உள்ளன. பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் இங்கு உள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாக இப்பகுதி மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
தவிர, ஆடு,மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும், கறிக்கோழி உற்பத்தித் தொழிலும் இத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் முக்கிய வேலை வாய்ப்பாக உள்ளன. காற்றாலைகளும் இத்தொகுதியில் அதிகளவில் உள்ளன. இங்குள்ள படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்புக்காக திருப்பூரின் நகர்ப் பகுதியை நோக்கியும், அண்டை மாவட்டங்களை நோக்கியும் செல்வதை தடுக்க முடியவில்லை.
சமீப காலமாக இத்தொகுதிக்குட்பட்ட இடங்களில், பனியன் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தொகுதியில் கொங்கு வேளாளர் சமூக மக்கள் 30 சதவீதமும், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 25 சதவீதமும், சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் 15 சதவீதமும், இதர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 30 சதவீதமும் உள்ளனர்.
தொகுதி கோரிக்கைகள் :
‘இத்தொகுதியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அமராவதி அணையை முறையாக தூர்வாரி, அதை நம்பியுள்ள விளை நிலங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என இத்தொகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகின்றன. விளை நிலங்கள் குறிப்பிட்ட அளவு இருந்தாலும், விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பெரும்பாலான விளை நிலங்கள், வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
இத்தொகுதியில் தட்டுப்பாடு அற்ற குடிநீர் விநியோகிக்க வேண்டும், முக்கியப் பகுதிகளில் நெரிசலற்ற போக்குவரத்துக்காக, சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும், கல்வி நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என இத்தொகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றன.
மேலும், அரசு கலைக் கல்லூரி அமைய வேண்டும். சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். அது இன்னும் நிறைவேறாமல்உள்ளன சர்வே எடுத்தும், மாநில அரசின் பங்களிப்பு நிதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட, இத்தொகுதியை மையப்படுத்திய ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
இத்தொகுதியில் உள்ள இடங்கள் தாராபுரம் தொகுதியில், தாராபுரம் நகராட்சியின் 30 வார்டுகளும், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூர், கன்னிவாடி, ருத்திராவதி ஆகிய பேரூராட்சிகள், தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட 16 ஊராட்சிகள், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட 21 ஊராட்சிகள் ஆகியவை இத்தொகுதியில் உள்ளன.
கடந்த 1967-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016- தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட காளிமுத்து வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில்,
இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம்.
ஆண் வாக்காளர்கள் - 1,25,820
பெண் வாக்காளர்கள் -- 1,32,111
3-ம் பாலின வாக்காளர்கள் - 10
மொத்த வாக்காளர்கள் 2,57,941
2016 தேர்தலில் போட்டியிட்டவர்கள் விவரம்:
காளிமுத்து- காங்கிரஸ்- 83,538(வாக்கு)
பொன்னுசாமி- அதிமுக-73,521(வாக்கு)
கே.சண்முகம்-பாஜக- 7,753 (வாக்கு)
திருவள்ளுவன் மதிமுக- 7029. (வாக்கு)
நோட்டா 2,883
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
கே.பொன்னுசாமி |
அதிமுக |
2 |
வி.எஸ்,காளிமுத்து |
திமுக |
3 |
நாகை.திருவள்ளுவன் |
மதிமுக |
4 |
கி.மாதவன் |
பாமக |
5. |
மா.சண்முகம் |
பாஜக |
6. |
இரா.பிச்சைமுத்து |
நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,17,556 |
பெண் |
1,20,454 |
மூன்றாம் பாலினத்தவர் |
6 |
மொத்த வாக்காளர்கள் |
2,38,016 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
சேனாபதி கவுண்டர் |
சுயேச்சை |
17085 |
1957 |
எ. சேனாபதி கவுண்டர் |
காங்கிரஸ் |
26164 |
1962 |
பார்வதி அர்ச்சுனன் |
காங்கிரஸ் |
37842 |
1967 |
பழனியம்மாள் |
திமுக |
42433 |
1971 |
பழனியம்மாள் |
திமுக |
40947 |
1977 |
ஆர். அய்யாசாமி |
அதிமுக |
18884 |
1980 |
எ. பெரியசாமி |
அதிமுக |
43319 |
1984 |
எ. பெரியசாமி |
அதிமுக |
51919 |
1989 |
டி. சாந்தகுமாரி |
திமுக |
34069 |
1991 |
பி. ஈசுவரமூர்த்தி |
அதிமுக |
66490 |
1996 |
ஆர். சரசுவதி |
திமுக |
62027 |
2001 |
வி. சிவகாமி |
பாமக |
56835 |
2006 |
பி. பார்வதி |
திமுக |
55312 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
நடராஜ கவுண்டர் |
காங்கிரஸ் |
13683 |
1957 |
பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் |
சுயேச்சை |
25555 |
1962 |
எ. ஆர். சுப்ரமணியன் |
திமுக |
18059 |
1967 |
பி. வேலுச்சாமி |
காங்கிரஸ் |
21800 |
1971 |
வி. என். கோபால் |
காங்கிரஸ் (ஸ்தாபன) |
21597 |
1977 |
எ. கே. சிவலிங்கம் |
காங்கிரஸ் |
16202 |
1980 |
வி. பி. பழனியம்மாள் |
திமுக |
32887 |
1984 |
ஆர். அய்யாசாமி |
திமுக |
35951 |
1989 |
எ. பெரியசாமி |
அதிமுக (ஜெ) |
32633 |
1991 |
டி. சாந்தகுமாரி |
திமுக |
28545 |
1996 |
பி. ஈசுவரமூர்த்தி |
அதிமுக |
38989 |
2001 |
ஆர். சரசுவதி |
திமுக |
34683 |
2006 |
எம். இரங்கநாயகி |
அதிமுக |
50600 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
பொன்னுசாமி.K |
அதிமுக |
83856 |
2 |
ஜெயந்தி.R |
திமுக |
68831 |
3 |
கருணாகரன்.P |
பாஜக |
3353 |
4 |
ராஜேஷ்.R |
சுயேச்சை |
2882 |
5 |
ஆறுமுகம்.S |
பகுஜன் சமாஜ் கட்சி |
1378 |
6 |
சுந்தரராசு.A |
சுயேச்சை |
1159 |
7 |
துரைசாமி.D |
சுயேச்சை |
789 |
162248 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT