Published : 11 Mar 2021 02:13 PM
Last Updated : 11 Mar 2021 02:13 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ஆனந்தன் | அதிமுக |
க. முத்துரத்தினம் (மதிமுக) | திமுக |
ஜோதிமணி | அமமுக |
மயில்சாமி | மக்கள் நீதி மய்யம் |
சு.சுப்பிரமணியன் | நாம் தமிழர் கட்சி |
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியத் தொகுதி பல்லடம். தமிழக சட்டப்பேரவையின் வரிசையில் 115-வது இடத்தில் இத்தொகுதி உள்ளது.
இத்தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பெரிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், பல்லடத்துக்கு முதல் இடம் உண்டு. கோவை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது தொகுதி.
பல்லடத்தின் பிரதான தொழில்களாக, கறிக்கோழி பண்ணை, விசைத்தறிகூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் ஆகியவை இத்தொகுதி மக்களின் பிரதானத் தொழில்களாக உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளும், 28 ஊராட்சிகளும் உள்ளது.
இத்தொகுதியில் கொங்குவேளாளர், தலித் மற்றும் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள், நியாய விலைக்கடை கட்டிடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருப்பூர் வட்டம் (பகுதி)
முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),
பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி)
கோரிக்கைகள்
அரசு கல்லூரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. முக்கிய கோரிக்கையான 2-வது கூட்டுக்குடிநீர்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது பல்லடம் மக்களின் பல ஆண்டு கால அதிருப்தியாகும். பல்லடம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் விநியோகம் முழுமையாக, முறையாக இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்விதமாக, சாலை வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது. தவிர, பல்லடம்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்கும் விதமாக சாலை மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். பல்லடம் -மங்கலம் சாலை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாநகர் தொடங்கி- பனப்பாளையம் பிரிவு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும், பல்லடத்தில் மின்மயானக் கட்டிடம் அரைகுறையாக ஆண்டுக் கணக்கில் நிற்கிறது. பல்லடம் தெற்கு பகுதி கிராமங்களான காமநாயக்கன்பாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிட்டாபுரம், அனுப்பட்டி, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் பி.ஏ.பி. திட்டம் இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக பிஏபி பாசன விரிவை எதிர்பார்த்துள்ளனர். ஆகவே பிஏபி திட்டத்தை தொகுதியின் பல்வேறு கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.
பல்லடம் பகுதியில் பிரதானத் தொழிலாக விசைத்தறி உள்ளது. தொழிலை நசிவடையச் செய்யும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வெயில் காலங்களில், கறிக்கோழி பண்ணைகளின் தேவைகளை நிறைவேற்றித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு, மானியத்தில் தீவனங்கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் இங்குள்ள விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.
தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக பிரஜா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வேட்பாளரே தொடர்ந்து இத்தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 8 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது, பல்லடத்தின் 14-வது சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த கரைப்புதூர் அ. நடராஜன் உள்ளார்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
அ. நடராஜன் |
அதிமுக |
2 |
சு.கிருஷ்ணமூர்த்தி |
திமுக |
3 |
க.முத்துரத்தினம் |
மதிமுக |
4 |
எஸ்.குமார் |
பாமக |
5 |
சு.தங்கராஜ் |
பாஜக |
6 |
த.வேலுச்சாமி |
நாம் தமிழர் |
2021 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் நிலவரப்படி இத்தொகுதியின் வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,93,139, |
பெண் |
1,93,904 |
மூன்றாம் பாலினத்தவர் |
68 |
மொத்த வாக்காளர்கள் |
3,87,111 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1957 |
பி. எஸ். சின்னதுரை |
பிரஜா சோசலிச கட்சி |
27111 |
1962 |
செங்காளியப்பன் |
காங்கிரஸ் |
33437 |
1967 |
கே. என். கே. கவுண்டர் |
பிரஜா சோசலிச கட்சி |
31977 |
1971 |
கே. என். குமாரசாமி |
பிரஜா சோசலிச கட்சி |
34876 |
1977 |
பி. ஜி. கிட்டு |
அதிமுக |
27172 |
1980 |
பரமசிவ கவுண்டர் |
அதிமுக |
40305 |
1984 |
பரமசிவ கவுண்டர் |
அதிமுக |
51083 |
1989 |
மு. கண்ணப்பன் |
திமுக |
45395 |
1991 |
கே. எஸ். துரைமுருகன் |
அதிமுக |
69803 |
1996 |
எஸ். எஸ். பொன்முடி |
திமுக |
73901 |
2001 |
எஸ். எம். வேலுசாமி |
அதிமுக |
82592 |
2006 |
எஸ். எம். வேலுசாமி |
அதிமுக |
73059 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1957 |
குமாரசாமி கவுண்டர் |
காங்கிரஸ் |
17515 |
1962 |
பி. எஸ். சின்னதுரை |
பிரஜா சோசலிச கட்சி |
14736 |
1967 |
செங்காளியப்பன் |
காங்கிரஸ் |
24421 |
1971 |
செங்காளியப்பன் |
ஸ்தாபன காங்கிரஸ் |
21070 |
1977 |
கே. என். குமாரசாமி |
காங்கிரஸ் |
20175 |
1980 |
கே. என். குமாரசாமி |
காங்கிரஸ் |
32345 |
1984 |
சிவசாமி |
சுயேச்சை |
40510 |
1989 |
கே. சிவராஜ் |
அதிமுக (ஜெ) |
31819 |
1991 |
மு. கண்ணப்பன் |
திமுக |
37079 |
1996 |
கே. எஸ். துரைமுருகன் |
அதிமுக |
41361 |
2001 |
எஸ். எஸ். பொன்முடி |
திமுக |
50118 |
2006 |
எஸ். எஸ். பொன்முடி |
திமுக |
67542 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
வேலுசாமி.S.M |
அதிமுக |
73059 |
2 |
பொன்முடி.S.S |
திமுக |
67542 |
3 |
சுப்ரமணியம்.G |
தேமுதிக |
19697 |
4 |
திருமூர்த்தி.P.M |
பாஜக |
3492 |
5 |
மயில்சாமி..S.P |
பகுஜன் சமாஜ் கட்சி |
1226 |
6 |
ராஜேந்திரன்.A.S |
சுயேச்சை |
927 |
7 |
முருகேசன்.K.P |
சுயேச்சை |
630 |
8 |
சுப்பிரமணியன்.M |
சுயேச்சை |
507 |
167080 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
பரமசிவம்.K.P |
அதிமுக |
118140 |
2 |
பாலசுப்ரமணியன்.K |
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் |
48364 |
3 |
சண்முகசுந்தரம்.M |
பாஜக |
4423 |
4 |
அண்ணாதுரை.A |
சுயேச்சை |
2693 |
5 |
அண்ணாதுரை.R |
சுயேச்சை |
1819 |
6 |
செந்தில்முருகன்.M |
சுயேச்சை |
1471 |
176910 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT