Published : 11 Mar 2021 01:11 PM
Last Updated : 11 Mar 2021 01:11 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
இன்பதுரை | அதிமுக |
எம்.அப்பாவு | திமுக |
கே.ஜெயபால் | அமமுக |
உத்திரலிங்கம் | மக்கள் நீதி மய்யம் |
இரா.ஜேசுதாசன் | நாம் தமிழர் கட்சி |
ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒட்டு மொத்த பகுதியையும் இத்தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 கடலோர மீனவர் கிராமங்களும் இத்தொகுதியில் இருக்கின்றன.
இந்த மீனவர்கள் நவீன விசைப்படகுகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் நாட்டுப் படகுகளில் தற்போது வரை மீன்பிடித்து வருகிறார்கள்.
.தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ராதாபுரம் தாலுகா
கூடங்குளம் அணு உலைகள், மகேந்திரகிரியிலுள்ள ஐ.எஸ்.ஆர். திரவ இயக்க உந்து மவளாகம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். மேலும் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் அதிகளவில் காற்றாலைகள் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் உரிய கட்டமைப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படவில்லை என்பதால் கிராமப்புற தொகுதியாகவே நீடிக்கிறது. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இத்தொகுதியில் இருக்கிறது.
நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இத்தொகுதியிலுள்ள கடலோர கிராமங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களே உள்ளனர். மேலும் உள்பகுதிகளிலும் கணிசமாக அவர்களது எண்ணிக்கை இருக்கிறது. இதனால் இத்தொகுதியில் கிறிஸ்தவர்களின் வாக்குவங்கி அதிகமுள்ளது.
தொகுதியின் பிரச்சினைகள்
இத்தொகுதியில் மீனவர்களை அச்சுறுத்தும் கூடங்குளம் அணுமின் நிலையம், தாதுமணல் பிரச்சினை, கடல் அரிப்பு, கடலுக்குள் விசைப்படகு மீனவர்களால் ஏற்படும் தொல்லைகள் என்று பல்வேறு இன்னல்களை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. காவல்கிணறு சந்திப்பில் தொடங்கப்பட்ட மலர்வணிக வளாகம் முடங்கிப் போயிருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கோரிக்கையாகும். மேலும் காற்றாலை சம்பந்தமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இங்கு அமைத்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தேர்தல் வரலாறு
1957 முதல் 2011 வரை நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 2 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை, அதிமுக, தமாகா, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த 2006-ல் இத்தொகுதியில் திமுக வேட்பாளர் எம். அப்பாவு வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ். மைக்கேல் ராயப்பனும், 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையும் வெற்றி பெற்றிருந்தனர்.
கடந்த 2016 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ். இன்பதுரை 69,590வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்த நிலையில் திமுகவைச் சேர்ந்த மு. அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,18,693 |
பெண் |
1,21,249 |
மூன்றாம் பாலினத்தவர் |
1 |
மொத்த வாக்காளர்கள் |
2,39,943 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு |
2011 |
மைக்கேல் ராயப்பன் |
தேமுதிக |
|
2006 |
M.அப்பாவு |
திமுக |
43.36 |
2001 |
M.அப்பாவு |
சுயேச்சை |
45.4 |
1996 |
M.அப்பாவு |
த.மா.கா |
46.6 |
1991 |
இரமணி நல்லதம்பி |
இ.தே.கா |
62.83 |
1989 |
இரமணி நல்லதம்பி |
இ.தே.கா |
32.19 |
1984 |
குமரி ஆனந்தன் |
கா.கா.கா |
53.99 |
1980 |
S.முத்து ராமலிங்கம் |
கா.கா.கா |
53.95 |
1977 |
Y.S.M.யூசுஃப் |
அதிமுக |
38.68 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
M. அப்பாவு |
தி.மு.க |
49249 |
2 |
L. ஞானபுனிதா |
அ.தி.மு.க |
38552 |
3 |
K.P.K. செல்வராஜ் |
சுயேச்சை |
9017 |
4 |
S. சிவானந்தா பெருமாள் |
தே.மு.தி.க |
6404 |
5 |
தமிழிசை |
எ.ஐ.எப்.பி |
5343 |
6 |
A. பார்வதி |
சுயேச்சை |
1059 |
7 |
A. செல்வராஜ் |
சுயேச்சை |
1051 |
8 |
S. தனம் |
சுயேச்சை |
994 |
9 |
P. தங்கசாமி |
சுயேச்சை |
503 |
10 |
T. செல்வராஜ் |
சுயேச்சை |
318 |
11 |
M. செல்வராஜ் |
சுயேச்சை |
246 |
12 |
P. ராஜமாணிக்கம் |
அர்.எல்.டி |
244 |
13 |
S. ராஜாமாணி |
எ.பி.எச்.எம் |
206 |
14 |
P. செல்வராஜ் |
சுயேச்சை |
167 |
15 |
A. செல்வகுமார் |
சுயேச்சை |
125 |
16 |
M. ஆறுமுகம் |
சுயேச்சை |
106 |
113584 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
S. மைக்கேல் ராயப்பன் |
தே.மு.தி.க |
67072 |
2 |
P.வேல்துரை |
ஐ.என்.சி |
45597 |
3 |
N.நல்லகண்ணு |
ஜெ.எம்.எம் |
6336 |
4 |
M. விஜயகுமார் |
சுயேச்சை |
6154 |
5 |
R.சாந்திராகவன் |
பி.ஜே.பி |
5305 |
6 |
ஜேசுபானி வளன் |
சுயேச்சை |
2716 |
7 |
D. இனியன் ஜான் |
சுயேச்சை |
1020 |
8 |
S.கிங்ஸ்லி ஐசக் ஜெபராஜ் |
ஐ.ஜே.கே |
733 |
9 |
ஆல்ட்ரின் |
சுயேச்சை |
689 |
10 |
M. ஆறுமுகம் |
சுயேச்சை |
610 |
11 |
S.டூரக் ராஜ் திலக் |
எ.பி.எம் |
583 |
12 |
R. மரகதவள்ளி |
சுயேச்சை |
547 |
13 |
A. இளஞ்செழியன் |
சுயேச்சை |
509 |
14 |
S. மார்த்தாண்டம் |
சுயேச்சை |
472 |
15 |
G. பாலசுப்பிரமணியன் |
சுயேச்சை |
351 |
138694 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT