Published : 11 Mar 2021 02:04 PM
Last Updated : 11 Mar 2021 02:04 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
மு. நஜர்முஹம்மத் | அதிமுக |
ஆ.செ.வில்வநாதன் | திமுக |
அச.உமர் பாரூக் | அமமுக |
எஸ்.ராஜா | மக்கள் நீதி மய்யம் |
மா.மெகருனிஷ | நாம் தமிழர் கட்சி |
தொழில் வளம் மிக்க ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி ‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலவாணியை அதிகமாக ஆம்பூர் தொகுதி ஈட்டி தருகிறது. தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஆம்பூர் திகழ்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பாலசுப்பிரமணியம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணிக்கு சென்றதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
அதன்பிறகு, ஆம்பூர் தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் தோல்வியை தழுவினார். இதில், திமுக சார்பில் போட்டியிட்ட வில்வநாதன் வெற்றிப்பெற்று ஆம்பூர் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா தோல்வியடைந்தார்.
தொழில் வளத்தில் முன்னணி நகரமாக ஆம்பூர் திகழ்ந்தாலும் பல்வேறு பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. குறிப்பாக ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணிகளுக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகியும் அப்பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது தொகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவதால் பாலாறு முழுவதும் மாசடைந்து காணப்படுவதும் தொகுதி மக்களிடம் பெரும் குறையாக இருக்கிறது. ஆற்று மணல் கடத்தல் இரவு, பகல் பராமல் நடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆம்பூர் தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுவதாக தொகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஆம்பூர் நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், நாயக்கனேரி மலைக்கிராமத்துக்கு பேருந்து வசதியை அதிகரிக்க வேண்டும், மணல் திருட்டை தடுக்க வேண்டும், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க சுரங்கபாதை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் 100-க்கான வணிகர்கள் ஆம்பூர் நகர் பகுதிக்கு வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டும் அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலின்போது வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாததால் தொகுதி மக்கள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். ஆம்பூர் தொகுதியை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை இஸ்லாமியர்களே நிர்ணயிக்கின்றனர். இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வசித்தாலும் இந்து மற்றும் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு அதிகமாகவே உள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் 79,182 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். திமுகவுடன் கூட்டணி அமைத்து மனித நேய மக்கள் கட்சி வேட்பாள்ர நசீர்அகமது 51,176 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் வாசு 7,043 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வெங்கடேசன் 5,760 வாக்குகள் பெற்றார். ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் 81,291 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா 48,475 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,14,905 |
பெண் |
1,21,902 |
மூன்றாம் பாலினத்தவர் |
12 |
மொத்த வாக்காளர்கள் |
2,36,819 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ஆர்.பாலசுப்பிரமணியம் |
அதிமுக |
2 |
வி.ஆர்.நசீர்அகமது |
திமுக- மனிதநேய மக்கள் கட்சி |
3 |
ஆர்.வாசு |
தேமுதிக |
4 |
எம். அமீன்பாஷா |
பாமக |
5 |
கே.வெங்கடேசன் |
பாஜக |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
48. ஆம்பூர் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
அஸ்லம் பாட்ஷா |
எம்.ஏ.எம்.ஏ.கே |
60361 |
2 |
விஜய் இளஞ்செழியன் |
காங்கிரஸ் |
55270 |
3 |
E. சம்பத் |
சுயேச்சை |
6553 |
4 |
G. வெங்கடேசன் |
பி.ஜே.பி |
6047 |
5 |
சமீல் அகமது |
சுயேச்சை |
1752 |
6 |
C. கோபி |
சுயேச்சை |
1485 |
7 |
S. சுந்தர் |
பி.எஸ்.பி |
1468 |
8 |
S A ஹமீத் |
சுயேச்சை |
1414 |
9 |
பஷீர் அகமது |
ஐ.ஜே.கே |
1074 |
10 |
சையத் பக்ருதின் |
ஐ.என்.எல் |
974 |
11 |
N .ரஹ்மான் |
சுயேச்சை |
751 |
137149 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT