Published : 11 Mar 2021 02:30 PM
Last Updated : 11 Mar 2021 02:30 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
முருகன் | அதிமுக |
சரவணகுமார் | திமுக |
டாக்டர் கே.கதிர்காமு | அமமுக |
எஸ்.பாண்டியராஜன் | மக்கள் நீதி மய்யம் |
கு.விமலா | நாம் தமிழர் கட்சி |
தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத்தொகுதிகளில் இது மட்டும் தனித்தொகுதியாக உள்ளது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக.வில் தொண்டனாக இருந்து தமிழக முதல்வர் வரை அரசியல் வளர்ச்சி கண்ட தொகுதி இது. தனித்தொகுதியாக மாறி விட்டதால் துற்போது இவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 282மீட்டர் உயரத்தில் பெரியகுளம் உள்ளது. மாவட்டத் தலைநகராக தேனி இருந்த போதிலும் சட்டமன்ற தொகுதி என்று பார்க்கும் போது தேனி பெரியகுளம் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் தொகுதியில் தேனி, பெரியகுளம் என இரு நகராட்சிகள் உள்ளது. தேனி, பெரியகுளம் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தென்கரை, வடுகபட்டி, தாமரைக்குளம் என பேரூராட்சிகளும் உள்ளன-. பெரியகுளம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதனை மாம்பழ நகரம் என்றும் கூறுவர்.
தேவதானப்பட்டி, லெட்சுமிபுரம், ஜெயமங்கலம் பகுதிகளில் செங்கரும்பு மற்றும் ஆலைக்கரும்புகள் சாகுபடி செய்யப்படுகிறது. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் வெல்லம் மார்க்கெட்டும் உள்ளது.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சனையை இத்தொகுதியில் அமைந்துள்ள வைகை அணை தீர்த்து வைக்கிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாகவும் வைகைஅணை விளங்கி வருகிறது. பெரியகுளத்தில் மஞ்சளாறு, சோத்துப்பாறை என இரண்டு அணைகள் உள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், பெரியகுளம் நகராட்சி, தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியும் இந்த தொகுதியில் தான் உள்ளது. பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா மகாராணி என்ற அரசு பள்ளி 100ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
இந்த தொகுதியில் பட்டியலினத்தவர், முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் என பல்வேறு சமூகத்தினர் பரவலாக உள்ளனர். வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளை து£ர் வாருதல், பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையை அகலப்படுத்துதல், வவ்வால் அணைக்கட்டு திட்டம், மீறுசமுத்திரக்கண்மாயில் படகுசவாரி என நீண்ட கால கோரிக்கைகள் உள்ளது.
இத்தொகுதியில் 1977 முதல் 2019 வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் 7முறை அதிமுகவும், மூன்றுமுறை திமுக.வும், ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,27,039 |
பெண் |
1,30,286 |
மூன்றாம் பாலினத்தவர் |
78 |
மொத்த வாக்காளர்கள் |
2,57,403 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
கே.கதிர்காமு |
அதிமுக |
2 |
வி.அன்பழகன் |
திமுக |
3 |
ஏ.லாசர் |
மார்க்சிஸ்ட் |
4 |
ஆர்.வைகை கண்ணன் |
பாமக |
5 |
கே.செல்லம் |
பாஜக |
6 |
எம்.புஷ்பலதா |
நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பெரியகுளம் தாலுகா
தேனி தாலுகா-(பகுதி) ஊஞ்சம்பட்டி வருவாய்க் கிராமம் மட்டும்
தேனி- அல்லிநகரம் (நகராட்சி)பகுதி.
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு (%) |
2011 |
ஏ.லாசர் |
இபொக |
|
2006 |
ஓ. பன்னீர்செல்வம் |
அதிமுக |
49.78 |
2001 |
ஓ. பன்னீர்செல்வம் |
அதிமுக |
54.28 |
1996 |
L.மூக்கைய்யா |
திமுக |
46.75 |
1991 |
M.பெரியவீரன் |
அதிமுக |
67.45 |
1989 |
L.மூக்கைய்யா |
திமுக |
34.15 |
1984 |
T.முகமது சலீம் |
அதிமுக |
63.04 |
1980 |
K.கோபால கிருஷ்ணன் |
அதிமுக |
54.01 |
1977 |
K.பண்ணை சேதுராம் |
அதிமுக |
45.5 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
O. பன்னீர்செல்வம் |
அ.தி.மு.க |
68345 |
2 |
L. மூக்கையா |
தி.மு.க |
53511 |
3 |
M. அப்துல் காதர் |
தே.மு.தி.க |
11105 |
4 |
P. ராஜாபாண்டியன் |
பா.ஜா.க |
1097 |
5 |
G.செந்தில்குமார் |
பகுஜன் |
907 |
6 |
k.S. ராஜா |
சுயேச்சை |
490 |
7 |
C. ராஜகோபால் |
சுயேச்சை |
440 |
8 |
N. ஜவஹர் |
சுயேச்சை |
386 |
9 |
T. ஆனந்த முருகன் |
AIFB |
294 |
10 |
M. பொம்முராசு |
சுயேச்சை |
174 |
11 |
P. பன்னீர்செல்வம் |
சுயேச்சை |
128 |
12 |
P. பெரியச்சுப்பையன் |
சுயேச்சை |
126 |
13 |
P. செல்வமணி ராஜேந்திரன் |
சுயேச்சை |
88 |
14 |
T. பரமசிவம் |
சுயேச்சை |
85 |
15 |
S. அப்துல் ரஹிம் |
சுயேச்சை |
57 |
16 |
A. சிவகுமார் |
சுயேச்சை |
54 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
A. லாசர் |
சிபிஎம் |
76687 |
2 |
V. அன்பழகன் |
தி.மு.க |
71046 |
3 |
M. கணபதி |
பா.ஜ.க |
3422 |
4 |
M. செல்வம் |
சுயேச்சை |
2347 |
5 |
P. ராஜகுரு |
சுயேச்சை |
1260 |
6 |
P. நல்லுசாமி |
தமுமுக |
1129 |
7 |
N. கிருஷ்ணவேணி |
சுயேச்சை |
872 |
8 |
K. பழனிச்சாமி |
சுயேச்சை |
830 |
9 |
C. குமரேசன் |
பகுஜன் |
691 |
10 |
D. சாந்தி |
சுயேச்சை |
482 |
11 |
T. மாரிசாமி |
சுயேச்சை |
442 |
12 |
P. பாண்டிராஜன் |
சுயேச்சை |
372 |
13 |
R. அறிவழகன் |
சுயேச்சை |
356 |
14 |
N.பாண்டியன் |
எல்ஜேபி |
306 |
160242 |
வாக்காளர்கள் :
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுகளில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 2563551 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களுள் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,27,757
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,31,409
திருநங்கைகள் 31 பேர் உள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT