Published : 11 Mar 2021 02:26 PM
Last Updated : 11 Mar 2021 02:26 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
மனோகரன் | அதிமுக |
டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக) | திமுக |
எஸ்.தங்கராஜ் | அமமுக |
சின்னசாமி | மக்கள் நீதி மய்யம் |
சி.ச.மதிவாணன் | நாம் தமிழர் கட்சி |
இத்தொகுதி சிவகிரி தாலுகா, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தொகுதி அமைந்துள்ளது. விவசாயமே பிரதான தொழில். கேரள எல்லையையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணை அருவி மற்றும் கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய எலுமிச்சை சந்தையான புளியங்குடி எலுமிச்சை சந்தை இத்தொகுதியில்தான் இருக்கிறது. தினமும் 100 டன் முதல் 500 டன் வரையில் எலுமிச்சை இச்சந்தையில் தரம் பிரிக்கப்பட்டு கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவுக்கு வசிக்கிறார்கள். இதுபோல் தேவர் சமுதாயத்தினரும், அடுத்து நாடார், யாதவர், முதலியார் சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர்.
தொகுதியின் பிரச்சினைகள்
பிரசித்தி பெற்ற புளியங்குடி எலுமிச்சை சந்தைப் பகுதியில் எலுமிச்சையை பதப்படுத்தும் குளிர்ப்பதனக் கிட்டங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு மற்றும் வசதிகள், வறட்சி காலங்களில் பாதிக்கப்படும் எலுமிச்சை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எலுமிச்சை விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள எல்லையில் சேதமடைந்துள்ள செண்பகவல்லி அணையை சீர்படுத்த வேண்டும். இத்தொகுதியில் உள்ள சிவகிரியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. மேலும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களோ, வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ இல்லை.
கரும்பு விவசாயிகள் அதிகமுள்ள இத்தொகுதியில் கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு குறித்த காலத்தில் பணம் கிடைக்கவில்லை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மேலும், கொல்லம்- திருமங்கலம் நான்குவழிச் சாலையை விவசாய நிலங்களை பாதிக்காமல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வரலாறு
கடந்த 1967 முதல் 2016 வரையிலான 12 சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா தலா 2 முறையும், மதிமுக ஒரு முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006 தேர்தலில் மதிமுக வேட்பாளர் டி.சதன்திருமலைக்குமாரும், 2011-ல் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.துரையப்பாவும், 2016-ல் அதிமுக வேட்பாளர் அ.மனோகரனும் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் 73904 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்தபடியாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த அன்பழகன் 55146 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,09,402 |
பெண் |
1,11,572 |
மூன்றாம் பாலினத்தவர் |
4 |
மொத்த வாக்காளர்கள் |
2,20,978 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்ற வேட்பாளர் |
கட்சி |
வாக்கு விழுக்காடு (%) |
2011 |
டாக்டர் எஸ். துரையப்பா |
அதிமுக |
|
2006 |
T.சதன் திருமலை குமார் |
மதிமுக |
40.27 |
2001 |
R.ஈசுவரன் |
த.மா.கா |
47.05 |
1996 |
R.ஈசுவரன் |
த.மா.கா |
32.5 |
1991 |
R.ஈசுவரன் |
இ.தே.கா |
58.28 |
1989 |
R.ஈசுவரன் |
இ.தே.கா |
32.15 |
1984 |
R.ஈசுவரன் |
இ.தே.கா |
62.34 |
1980 |
R.கிருஷ்ணன் |
மார்க்சிய கம்யூனிச கட்சி |
50.51 |
1977 |
R.கிருஷ்ணன் |
மார்க்சிய கம்யூனிச கட்சி |
33.25 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
T. சதன் திருமலைகுமார் |
மதிமுக |
45790 |
2 |
R. கிருஷ்ணன் |
சி.பி.ஐ |
39031 |
3 |
D. ஆனந்தன் |
பி.எஸ்.பி |
14220 |
4 |
S. பிச்சை |
தே.மு.தி.க |
6390 |
5 |
K. பாபு |
எ.ஐ.எப்.பி |
4332 |
6 |
C. செல்வகனி |
பாஜக |
2579 |
7 |
K. சந்திரசேகரன் |
சுயேட்சை |
1363 |
113705 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
S.துரையப்பா |
அ.தி.மு.க |
80633 |
2 |
S.கணேசன் |
காங்கிரஸ் |
52543 |
3 |
N. ராஜ்குமார் |
பாஜக |
2340 |
4 |
M. ராமலிங்கம் |
சுயேச்சை |
2291 |
5 |
V. பூசைபாண்டி |
சுயேச்சை |
1862 |
6 |
S. பாண்டி |
பி.எஸ்.பி |
1130 |
7 |
S. பிச்சைகனி |
சுயேச்சை |
778 |
8 |
G. தங்கமலை |
சுயேச்சை |
449 |
142026 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT