Published : 11 Mar 2021 01:52 PM
Last Updated : 11 Mar 2021 01:52 PM

170 - திருவிடைமருதூர் (தனி)

திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த திருப்புவனம் கைத்தறி நெசவு.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
யூனியன் வீரமணி அதிமுக
கோவி செழியன் திமுக
குடந்தை அரசன் அமமுக
மதன்குமார் மக்கள் நீதி மய்யம்
மோ.திவ்யபாரதி நாம் தமிழர் கட்சி

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த தொகுதி 1977-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பொது தொகுதியாக இருந்த திருவிடைமருதூர் தொகுதி 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தனி தொகுதியாக மாற்றப்பட்டது.

கும்பகோணம் தாலுகாவில் சில கிராமங்களையும், திருவிடைமருதூர் தாலுகாவில் பல கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. திருப்பனந்தாள், வேப்பத்தூர், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம் ஆகிய பேரூராட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

இந்த தொகுதியில் தலித்துகள், வன்னியர்கள், நெசவாளர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்துள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருவிடைமருதூர் வட்டம்

கும்பகோணம் வட்டம் (பகுதி)

பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையமும், சூரியன், சுக்கிரன், ராகு உள்ளிட்ட நவக்கிரக கோயில்கள், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் அதிகம் நிறைந்த பகுதி.

தொகுதி பிரச்சினைகள்

அணைக்கரையை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகம் இருப்பதால் அங்கு முதலைப்பண்ணை ஏற்படுத்திட வேண்டும். ஆடுதுறையில் வேளாண் பல்கலைக் கழகம் ஏற்படுத்திட வேண்டும். நெசவாளர்கள் அதிகம் இருப்பதால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிடைக்கவும், வடிவமைத்து பொருட்களை எளிதாக விற்பனை செய்ய ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் உள்ளது.

இந்த தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ், அதிமுக தலா இரு முறையும் வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் கடந்த இருமுறை கோவி.செழியன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,28,444

பெண்

1,28,444

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,59,074

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

உ. சேட்டு

அதிமுக

2

கோ.வி. செழியன்

திமுக

3

சா. விவேகானந்தன்

விசிக

4

ஆர்.எஸ். மாதையன்

பாமக

5

ச. வாசுதேவன்

பாஜக

6

இரா. சுலோச்சனாதேவி

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

கோவி.செழியன்

திமுக

2006

R.K.பாரதிமோகன்

அதிமுக

55.04

2001

க.தவமணி

அதிமுக

53.78

1996

செ. இராமலிங்கம்

திமுக

44.9

1991

N.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்

64.25

1989

செ. இராமலிங்கம்

திமுக

29.5

1984

மு. இராஜாங்கம்

காங்கிரஸ்

67.4

1980

செ. இராமலிங்கம்

திமுக

59.79

1977

செ. இராமலிங்கம்

திமுக

34.41

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.K. பாரதிமோகன்

அ.தி.மு.க

63231

2

G. ஆலயமணி

பாமக

59463

3

G. சங்கர்

தே.மு.தி.க

5261

4

K. வசுதேவன்

சுயேச்சை

2014

5

H. அன்சர் அலி

சுயேச்சை

1127

6

S. இளங்கோ

எஸ்.பி

1059

7

B. சவுரிராஜன்

பாஜக

806

8

G.E. நந்தகோபால்

சுயேச்சை

425

9

M. கண்ணன்

பி.எஸ்.பி

420

10

S. புரட்சி வேந்தன்

சுயேச்சை

288

11

M. கணேஷ் பாபு

சுயேச்சை

229

12

B. ஜெயபால்

டி.என்.ஜே.சி

220

13

K. பழனிவேல்

சுயேச்சை

157

134700

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கோவி. செழியன்

தி.மு.க

77175

2

T. பாண்டியராஜன்

அ.தி.மு.க

76781

3

குழந்தை அரசன்

சுயேச்சை

1646

4

S. ரவிச்சந்திரன்

சுயேச்சை

1253

5

K. ராஜாவேலு

பி.எஸ்.பி

902

6

A. இளங்கோவன்

சுயேச்சை

819

7

J. ராஜசேகர்

ஐ.ஜே.கே

693

8

T. சுபாஷ் சந்திர போஸ்

சுயேச்சை

619

9

S. இளங்கோவன்

சி.பி.ஐ

333

10

V. இளையராஜா

சுயேச்சை

171

160392

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x