Published : 11 Mar 2021 02:46 PM
Last Updated : 11 Mar 2021 02:46 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
சுகுமார் | அதிமுக |
ஆர்.காந்தி | திமுக |
ஜி.வீரமணி | அமமுக |
எம்.ஆடம் பாட்ஷா | மக்கள் நீதி மய்யம் |
வெ.சைலரஜா | நாம் தமிழர் கட்சி |
இந்தியாவுக்கு அன்னியச் செலாவணியை அதிகம் ஈட்டிக் கொடுக்கும் தொகுதிகளில் ஒன்றாக ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இருக்கிறது. முழுக்க,முழுக்க தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக இருக்கிறது.சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி இந்தத் தொகுதி அமைந்துள்ளதால் தொழில்வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தொகுதியின் அடையாளமான மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. நூற்றாண்டு பெருமை வாய்ந்த பாரிபீங்கான் தொழிற்சாலை, சாமே டிராக்டர் தொழிற்சாலை, சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
18 ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கியிருந்த பகுதியாக இருந்துள்ளது. செஞ்சிக் கோட்டையை மீது ஆற்காடு நவாப்புகள் நடத்திய படையெடுப்பில் ராஜாதேசிங்கு வீரமணம்அடைந்தார். அவரது இறுதிச் சடங்கின் போது தேங்குராஜாவின் மனைவி உடன் கட்டை ஏறினார். இந்தநிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ராணியின் நினைவாக ஆற்காடு பாலாற்றின் மறுகரையில் ராணிப்பேட்டை என்ற நகரை உருவாக்கினார் என்ற வரலாறும் உள்ளது.
இந்தியாவில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி தொடங்கிய வரலாறும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக 1866-ம் ஆண்டு வாலாஜா நகராட்சி தொடங்கப்பட்டதும் இந்ததொகுதியில் பெருமைகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நவ்லாக் தென்னைப்பண்ணை, புகழ்பெற்ற கால்நடை மருந்து ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை தொகுதியின் பிற அடையாளங்களாக உள்ளன.
தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருப்பது விவசாயத்தை முற்றிலும் கைவிட்ட நிலையில் தோல் கழிவால் ஏற்பட்ட நிலத்தடி நீர்மாசு, பாலாற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் மூடப்பட்ட தமிழ்நாடு குரோமிய தொழிற்சாலையில் தேங்கியுள்ள ஒன்றரை லட்சம் டன் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கையாக இருக்கிறது. குரோமிய கழிவு அகற்ற திட்ட அறிக்கை தயாராகியுள்ள நிலையில் அதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ராணிப்பேட்டை தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மையுடன் இருக்கிறது. எனவே, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும், மாசடைந்த நிலத்தை உயிரி வேதியியல் முறையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள பழைய கட்டிடத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வன்னிவேடு ஏரியில் கலக்கும் வாலாஜா நகரின் கழிவுநீருக்கு முற்றுப்புள்ளி வைக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
1951-ம் ஆண்டு முதல் 14பொதுத் தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என 15 தேர்தல்களை ராணிப்பேட்டை தொகுதி சந்தித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ்3 முறை, திமுக 6, அதிமுக 4, சுயேட்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.காந்தி 81,724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை 73,828 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,28,391 |
பெண் |
1,37,219 |
மூன்றாம் பாலினத்தவர் |
16 |
மொத்த வாக்காளர்கள் |
2,65,626 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
சி.ஏழுமலை |
அதிமுக |
2 |
ஆர்.காந்தி |
திமுக |
3 |
எஸ்.நித்தியானந்தம் |
தேமுதிக |
4 |
எம்.கே.முரளி |
பாமக |
5 |
வி.நாகராஜ் |
பாஜக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வாலாஜா வட்டம் (பகுதி)
படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.
அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி)
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 – 2006 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
காதர் செரிப் |
காங்கிரஸ் |
17934 |
38.65 |
1957 |
சந்திரசேகர நாயக்கர் |
காங்கிரஸ் |
12386 |
33.63 |
1962 |
அப்துல் கலீல் |
திமுக |
24082 |
39.32 |
1967 |
எ. ஜி. சாகிப் |
சுயேச்சை |
30011 |
45.14 |
1971 |
கே. எ. வகாப் |
சுயேச்சை |
36357 |
53.96 |
1977 |
துரைமுருகன் |
திமுக |
31940 |
43.53 |
1980 |
துரைமுருகன் |
திமுக |
44318 |
53.7 |
1984 |
எம். கதிர்வேலு |
காங்கிரஸ் |
56068 |
55.6 |
1989 |
ஜெ. கஸ்சய்ன் |
சுயேச்சை |
27724 |
30.08 |
1991 |
என். ஜி. வேணுகோபால் |
அதிமுக |
65204 |
53.29 |
1996 |
ஆர். காந்தி |
திமுக |
71346 |
50.8 |
2001 |
எம். எஸ். சந்திரசேகரன் |
அதிமுக |
83250 |
56.37 |
2006 |
ஆர். காந்தி |
திமுக |
92584 |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
முனுசாமி கவுண்டர் |
காமன் வீல் கட்சி |
10983 |
23.67 |
1957 |
ஆர். எ. சுபன் |
சுயேச்சை |
10759 |
29.22 |
1962 |
சந்திரசேகர நாயக்கர் |
காங்கிரஸ் |
23218 |
37.91 |
1967 |
எஸ். கே. செரிப் |
காங்கிரஸ் |
28953 |
43.55 |
1971 |
எ. ஜி. அரங்கநாத நாயக்கர் |
நிறுவன காங்கிரஸ் |
31022 |
46.04 |
1977 |
கே. எ. வகாப் |
சுயேச்சை |
16643 |
22.68 |
1980 |
என். ரேணு |
அதிமுக |
37064 |
44.91 |
1984 |
அப்துல் ஜாபார் |
திமுக |
33337 |
33.06 |
1989 |
எம். குப்புசாமி |
திமுக |
23784 |
25.8 |
1991 |
எம். அப்துல் லத்தீப் |
திமுக |
32332 |
26.42 |
1996 |
எம். மாசிலாமணி |
அதிமுக |
37219 |
26.5 |
2001 |
ஆர். காந்தி |
திமுக |
58287 |
39.47 |
2006 |
ஆர். தமிழரசன் |
அதிமுக |
60489 |
--- |
2006 சட்டமன்ற தேர்தல் |
41. ராணிப்பேட்டை |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
R. காந்தி |
தி.மு.க |
92584 |
2 |
R. தமிழ் அரசன் |
அ.தி.மு.க |
60489 |
3 |
N. பாரி |
தே.மு.தி.க |
9058 |
4 |
K. சக்திவேல்நாதன் |
சுயேச்சை |
1687 |
5 |
R. ராஜேஷ்குமார் |
சுயேச்சை |
1618 |
6 |
V. குப்புசாமி |
பி.ஜே.பி |
1598 |
7 |
S. தமிழரசன் |
சுயேச்சை |
435 |
8 |
M. நாகரத்தினம் |
சுயேச்சை |
312 |
9 |
K. ஆறுமுகம் |
சுயேச்சை |
286 |
10 |
A. சுந்தரவதனம் |
சுயேச்சை |
246 |
168313 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
41. ராணிப்பேட்டை |
||
வ எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
வாக்குகள் |
1 |
முஹம்மத் ஜான் |
அ.தி.மு.க |
83834 |
2 |
ஆர். காந்தி |
தி. மு. க |
69633 |
3 |
R. முருகன் |
சுயேட்சை |
1213 |
4 |
S. சசிகுமார் |
பிஎஸ்பி |
842 |
5 |
பாட்சிமணி |
எ.ஐ.ஜே.எம்.கே |
662 |
6 |
பிரகாசம் .R |
சுயேச்சை |
375 |
7 |
M.V. ராஜன் |
புபா |
342 |
8 |
மணி |
சுயேச்சை |
301 |
9 |
G. காந்தி |
சுயேச்சை |
185 |
10 |
V. சுப்பரமணி |
சுயேச்சை |
146 |
11 |
R. அருள் |
சுயேச்சை |
112 |
12 |
K. சக்திவேல்நாதன் |
சுயேச்சை |
104 |
157749 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT