Published : 11 Mar 2021 02:48 PM
Last Updated : 11 Mar 2021 02:48 PM

210 - திருவாடாணை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஆணிமுத்து அதிமுக
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) திமுக
வி.டி.என்.ஆனந்த் அமமுக
பி.சத்யராஜ் மக்கள் நீதி மய்யம்
சு.ஜவகர் நாம் தமிழர் கட்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று திருவாடானை. திருவாடானை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ராமநாதபுரம் வட்டத்தின் ஒரு பகுதியான பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இடம் பெற்றுள்ளது.

பிரசித்திபெற்ற ஓரியூர் தேவாலயம், தேவிபட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷான கோயில், தமிழகத்தின் 2-வது பெரிய ஏரியான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, 3 கலைக்கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனர். கல்வி நிலையங்கள் இத்தொகுதியில் குறைவு. அதனால் கடந்த 2016-ல் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பால் திருவாடானையில் ஒரு புதிய அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டபடி திருவாடானையிலிருந்து பிரிக்கப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானையில், முதலிடத்தில் விவசாயமும், அடுத்ததாக மீன்பிடித் தொழிலும் உள்ளன. திருப்பாலைக்குடி முதல் தொண்டி வரையிலான கடற்கரை பகுதி மக்கள் இன்னும் குடிநீருக்கு அலையும் நிலை உள்ளது. காவிரி குடிநீர் வந்தும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. நாடு சுதந்திரம் அடைந்தும் இத்தொகுதியில் இதுவரை ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படவில்லை. இங்குள்ள கண்மாய்களை முழுமையாக தூர்வார வேண்டும், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக 2 முறையும் (2016-ல் அதிமுக கூட்டணி முக்குலத்தோர் புலிப்படை) வெற்றி பெற்றுள்ளன. 2011ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் சுப.தங்கவேலனும், 2016-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாசும் வெற்றி பெற்றனர். அதிமுக ஆதரவுடன் கருணாஸ் வெற்றி பெற்றாலும், மாவட்டத்தில் உள்ளூர் அமைச்சராக இருந்த டாக்டர் எம்.மணிகண்டனுடன் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை.

2016 தேர்தலில் எஸ்.கருணாஸ் 76786 வாக்குகளும், திமுகவின் சுப.த.திவாகரன் 68090 வாக்குகளும், பாஜகவின் தேவநாதன் யாதம் 11842 வாக்குகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான்பாண்டியன் 9597 வாக்குகளும், தேமுதிகவின் மணிமாறன் 4913 வாக்குகளும் பெற்றனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,37,440

பெண்

1,35,985

மூன்றாம் பாலினத்தவர்

28

மொத்த வாக்காளர்கள்

2,73,453

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சே.கருணாஸ்

அதிமுக

2

த.திவாகரன்

திமுக

3

வி.மணிமாறன்

தேமுதிக

4

வே.பாண்டி

பாமக

5

டி.தேவநாதன் யாதவ்

பாஜக

6

ரா.ராஜீவ்காந்தி

நாம் தமிழர்

7

பெ.ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

சுப. தங்கவேலன்

திமுக

2006

க. ரா. இராமசாமி

இ.தே.கா

46.94

2001

க. ரா. இராமசாமி

த.மா.கா

39.12

1996

க. ரா. இராமசாமி

த.மா.கா

61.77

1991

இராமசாமி அம்பலம்

இ.தே.கா

62.92

1989

இராமசாமி அம்பலம்

இ.தே.கா

35.56

1984

K.சொர்ணலிங்கம்

இ.தே.கா

47.8

1980

S.அங்குச்சாமி

அதிமுக

37.96

1977

கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம்

இ.தே.கா

36.75

1971

பி.ஆர்.சன்முகம்.

தி.மு.க.

1967

கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம்

சுதந்திராக் கட்சி

1962

கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம்

சுதந்திராக் கட்சி

1957

கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம்

சுயேச்சை

1952

செல்லதுரை

சுயேச்சை

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.R. ராமசாமி

காங்கிரஸ்

55198

2

C. ஆனிமுத்து

அ.தி.மு.க

49945

3

P. திருவேங்கடம்

தே.மு.தி.க

6091

4

S. இருளையா

பி.ஜே.பி

2064

5

K. சுப்பிரமணியன்

பி.எஸ்.பி

1485

6

R. லியாகத் அலி

சுயேச்சை

1444

7

A. ராவுத்தர் நாயினார் முகமது

சுயேச்சை

739

8

S. சிவா

எஸ்.பி

639

117605

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தங்கவேலன் சுபா

தி.மு.க

64165

2

S. முஜிபுபுர் ரஹமான்

தே.மு.தி.க

63238

3

U. பாண்டிவேலு

சுயேச்சை

6667

4

பவுலின் தர்சிஸ்

ஐ.டி.பி

3919

5

U. கருப்பையா

ஜே.எம்.எம்

3871

6

மகாலிங்கம் சிவா

ப.ஜா.க

3632

7

R. செல்வம்

சுயேச்சை

2201

8

S.S. பாலகிருஷ்ணன்

சுயேச்சை

1448

9

V. காஸ்பர்

சுயேச்சை

1390

10

V. சாகுல் ஹமித்

சுயேச்சை

1252

11

M. செந்தில் ராமு

பகுஜன்

986

12

S. ராஜேந்திரன்

சுயேச்சை

960

13

S. முஜிபுர் ரஹமான்

சுயேச்சை

751

14

U. முருகேசன்

சுயேச்சை

700

15

முத்து ராமலிங்கம்

சுயேச்சை

449

16

K. செல்லதுரை

சுயேச்சை

443

156072

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x