Published : 11 Mar 2021 02:40 PM
Last Updated : 11 Mar 2021 02:40 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ராஜநாயகம் | அதிமுக |
எஸ்.டி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) | திமுக |
கே.சிவசண்முகம் | அமமுக |
சேக் முகமது | மக்கள் நீதி மய்யம் |
மு.இ.ஹுமாயூன் கபூர் | நாம் தமிழர் கட்சி |
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சி பகுதியாக உள்ளது அறந்தாங்கி. இத்தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்மநாத சுவாமி கோயில்,கோட்டைப்பட்டினத்தில் உள்ள ராவுத்தர்அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் தமிழகத்தில் சிறந்த தர்ஹாக்களில் ஒன்றாக உள்ளது.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும்,கட்டுமாவடி, புதுக்குடி, ஆர்.புதுப்பட்டினம், கோடியக்கரை, முத்துக்குடா உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுப்படகுகள் மூலமும் மீனவர்கள் கடலில் மீன்டி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவனி கிடைத்துவருகிறது.
சுமார் 20,000 ஏக்கரில் காவிரி நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. இதுதவிர, மழை நீரை கண்மாய்களில் தேக்கி சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இத்தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், முத்தரையர், உடையார், நாடார், யாதவர், வெள்ளாளர், நகரத்தார் போன்ற சமூகத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர், மீனவர் சமூகத்தினமும் உள்ளனர்.
அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27வார்டுகளும், ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிகள் உள்ளன. மேலும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும் உள்ளன.
நிறைவேறாத கோரிக்கைகள்:
அறந்தாங்கி நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அறந்தாங்கியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் அங்கமான சத்திரம் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றை அறந்தாங்கி நகராட்சியோடு இணைக்கப்பட வேண்டும்.
பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்.
அரசு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். இத்தொகுதி முழுமைக்கும் காவிரி நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். கடலோரப் பகுதிகளில் மீன் கழிவுகளை தீவனமாக்குதல், மீன்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும். மீன், நண்டு, இறால்களில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருள் தயாரிக்கும் தொழில் மையம் உருவாக்க வேண்டும்.
மீன்பிடி படகுகளை சீரமைக்க அரசு பழுது நீக்கும் பிரிவு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை சாலை பகுதியாவும், மீனவர்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் மணமேல்குடில் அதிநவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் போன்றவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளன.
2016 தேர்தல்
கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.ஏ.ரத்தினசபாபதி 69,905 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் தி.ராமச்சந்திரன் 67,614 வாக்குகளும் பெற்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,16,883 |
பெண் |
1,19,151 |
மூன்றாம் பாலினத்தவர் |
6 |
மொத்த வாக்காளர்கள் |
2,36,040 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
இ. ரத்தினசபாபதி |
அதிமுக |
2 |
எஸ்.டி. ராமச்சந்திரன் |
காங்கிரஸ் |
3 |
பி. லோகநாதன் |
இந்திய கம்யூ |
4 |
கே.செல்வம் |
பாமக |
5 |
மு.ஜெமினிகணேசன் |
ஐஜேகே |
6 |
எ. ஷகிலாபானு |
நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
மணமேல்குடி வட்டம்
ஆவுடையார்கோயில் வட்டம்
அறந்தாங்கி வட்டம் (பகுதி)
ஆளப்பீறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள்
அறந்தாங்கி (நகராட்சி)
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
முகமது சலிகு மரைக்காயர் |
காங்கிரஸ் |
19064 |
1957 |
எஸ். இராமசாமி தேவர் |
சுயேச்சை |
17637 |
1962 |
எ. துரையரசன் |
திமுக |
33781 |
1967 |
எ. துரையரசன் |
திமுக |
42943 |
1971 |
எஸ். இராமநாதன் |
திமுக |
49322 |
1977 |
எஸ். திருநாவுக்கரசு |
அதிமுக |
35468 |
1980 |
எஸ். திருநாவுக்கரசு |
அதிமுக |
50792 |
1984 |
எஸ். திருநாவுக்கரசு |
அதிமுக |
70101 |
1989 |
எஸ். திருநாவுக்கரசு |
அதிமுக (ஜெ) |
61730 |
1991 |
எஸ். திருநாவுக்கரசு |
தாயக மறுமலர்ச்சி கழகம் |
73571 |
1996 |
எஸ். திருநாவுக்கரசு |
அதிமுக |
70260 |
2001 |
பி. அரசன் |
எம். ஜி. ஆர். அதிமுக |
58499 |
2006 |
உதயன் சண்முகம் |
திமுக |
63333 |
2011 |
மு.ராஜநாயகம் |
அதிமுக |
67559 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1951 |
இராமசாமி தேவர் |
சுயேச்சை |
15335 |
1957 |
முத்துவேல அம்பலம் |
காங்கிரஸ் |
14633 |
1962 |
இராமநாதன் சேர்வை |
காங்கிரஸ் |
25112 |
1967 |
கே. பி. சேர்வைக்காரர் |
காங்கிரஸ் |
36522 |
1971 |
இராமநாதன் சேர்வைக்காரர் |
நிறுவன காங்கிரஸ் |
37289 |
1977 |
பி. அப்புகுட்டி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
24528 |
1980 |
எம். மொகமது மசூத் |
சுயேச்சை |
36519 |
1984 |
எசு. இராமநாதன் |
திமுக |
40197 |
1989 |
சண்முகசுந்தரம் |
திமுக |
40027 |
1991 |
குழ. செல்லையா |
அதிமுக |
52150 |
1996 |
எசு. சண்முகம் |
திமுக |
56028 |
2001 |
எ. சந்திரசேகரன் |
காங்கிரஸ் |
38481 |
2006 |
ஒய். கார்த்திகேயன் |
அதிமுக |
45873 |
2011 |
எஸ். திருநாவுக்கரசு |
காங்கிரஸ் |
50903 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
உதயன் சண்முகம் |
திமுக |
63333 |
2 |
கார்த்திகேயன்.Y |
அதிமுக |
45873 |
3 |
முஹமத் அலி ஜின்னா..O.S.M |
தேமுதிக |
15347 |
4 |
காத்தமுத்து.K.L |
பாஜக |
14713 |
5 |
ராமநாதன்.G |
சுயேச்சை |
2304 |
6 |
முடியப்பன்.G |
சுயேச்சை |
543 |
7 |
முனுசுவாமி.K |
சுயேச்சை |
469 |
8 |
முருகன்.K |
சுயேச்சை |
413 |
9 |
ஹுசைன் பீவி.K.P |
சுயேச்சை |
395 |
10 |
மகாலிங்கம்.N |
சுயேச்சை |
264 |
11 |
சண்முகம்.P |
சுயேச்சை |
207 |
12 |
சிவசுப்ரமணியன்.R |
சுயேச்சை |
197 |
13 |
சரவணகுமார்.V |
சுயேச்சை |
180 |
14 |
காத்தமுத்து.M |
சுயேச்சை |
164 |
144402 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
ராஜநாயகம்.M |
அதிமுக |
67559 |
2 |
திருநாவுகரசு.SU |
காங்கிரஸ் |
50903 |
3 |
ஷரிப்.KM |
சுயேச்சை |
2729 |
4 |
அப்பாதுரை.S |
இந்திய ஜனநாயக கட்சி |
2305 |
5 |
சபாபதி.K |
பாஜக |
2218 |
6 |
அஸ்ரப்கான்.S |
சுயேச்சை |
1211 |
7 |
அசையாமணி.M |
சுயேச்சை |
599 |
8 |
கருணாகரன்.K |
சுயேச்சை |
503 |
128027 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT